Thursday, 24 November 2011

ஸ்மார்ட் கிளாஸ்

மொத்தத்தில் புரியாத விஷயங்களும் புரியும்; தெரியாத தகவல்களும் வந்து குவியும். முன்பு பள்ளியில் மணிக்கணக்கில் படித்து, நாட்கணக்கில் ‘மக்’கப் செய்தாலும் புரியாத விஷயங்கள் இப்போதுள்ள வாண்டூஸ்களுக்கு பிரமாதமாக புரிகின்றன. காரணம், இன்டர்நெட். ஆம், பத்தாண்டுக்கு முன் அமெரிக்காவில், ஐரோப்பிய நாடுகளில் கொடிகட்டிப்பறந்த இந்த ‘ஸ்மார்ட் கிளாஸ்’ என்ற வகுப்பறை முறை, இப்போது இந்தியாவிலும் சிறிது சிறிதாக நுழைந்து கொண்டிருக்கிறது.

தனியார் பள்ளிகளில் எல்லாம் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறைக்கு முழு ஆதரவு தெரிவித்து விட்டன. அரசு பள்ளிகளிலும் ஓரளவுக்கு இதை ஏற்றுக்கொண்டாலும், இன்னும் கரும்பலகை, சாக்பீஸ் முற்றிலும் போகவில்லை. ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் மொத்தமாக கரும்பலகை, சாக்பீஸுக்கு குட்பை சொல்லும் காலம் வந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்.
அதென்ன ஸ்மார்ட் கிளாஸ்கம்ப்யூட்டர் உலகில் மிக முக்கியமானது ஸ்மார்ட் கார்டு, ஸ்மார்ட் கிளாஸ் போன்றவைதான். கதவை திறக்க நாம் போடும் சாவிதான் ‘ஸ்மார்ட் கார்டு’. வங்கியில் தரும் ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் இந்த வகையே. கணக்கில் இருந்து பணத்தை எடுக்க டோக்கன் வாங்கி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம் இப்போது. ஆளில்லா தானியங்கி மையத்தில் கார்டை செருகினால், நம் கணக்கில் இருந்து நள்ளிரவிலும் கூட பணத்தை எடுக்க முடிகிறது.

இதுபோலத்தான் ஸ்மார்ட் கிளாஸ். வகுப்பறை இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒரு மாணவன் படிக்க முடியும். பள்ளியில் வகுப்பறைக்கு வந்து ஆசிரியர் வருகைப்பதிவேடு எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் நெட்வொர்க் முறை பார்த்துக்கொள்ளும். ஒரு சயின்ஸ் பாடத்தை நடத்த வேண்டுமானால், எத்தனை முறை ஆசிரியர் கத்த வேண்டியிருக்கிறது? ஆனால், இதற்கு கம்ப்யூட்டர் இன்டர்நெட் மூலம் ஒரு வீடியோவை போட்டுவிட்டு உட்கார்ந்து விட்டால் போதும்; மாணவர்கள் அத்தனை பேருக்கும் புரிந்து விடும். அப்புறம் என்ன... அந்தப் பாடத்தில் எல்லாரும் நூற்றுக்கு நூறு தானே.

எந்த பாடமாக இருந்தாலும், அதை விஷூவல் ஆக விளக்கினால் புரியும் தானே... அதைத்தான் தருகிறது இன்டர்நெட் வழி ‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறை. கேரளா வரை வந்தாச்சு
பள்ளிக்கல்வியை முடக்கிப்போடுவது இந்தியாவில்தான் நடக்கிறது. வெளிநாடுகளில் பள்ளியில் படிக்காமலேயே சாதித்தவர்கள் உண்டு. கல்லூரியை பாதியில் விட்டு வெளியேறி சாதித்தவர்கள் உண்டு. சமீபத்தில் கேன்சருக்கு பலியான ஆப்பிள் ஐபேட் சாதனை மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ், கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்!
அவருக்கு கைகொடுத்தது தேடல். பாடங்களை ‘மக்கப்’ அடித்து சதம் போடுவதால் எந்த பலனும் இல்லை. புரிந்து கொண்டு, சாதிக்க துணிவதில்தான் ஒருவனின் வெற்றி, சாதனை உள்ளது. அதை இந்த நெட் வழி ‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறை சொல்லித்தருகிறது.

கேரளாவில் இப்போது இந்த முறை வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் இப்போதுதான் நுழைந்துள்ளது.
பலே யூத்ஸ்
இன்றைய யூத்களிடம் ஒரு நாளிதழை தந்தால் படிக்க சோம்பேறித்தனம் காட்டுவர். அதுவே கையில் மொபைல் மட்டும் இருக்கட்டும். நீங்கள் காபியை பக்கத்தில் வைத்துக்கொண்டு, பேப்பரில் படித்து  முடிப்பதற்குள், உலகின் மூலைமுடுக்கில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி துல்லியமாக உங்கள் பிள்ளை சொல்லி விடுவார். காரணம், அவர் கையில் இருக்கும் இன்டர்நெட் மொபைல் போன்தான்.
அந்த அளவுக்கு கையிடுக்கில் எல்லா விவரங்களையும் மொபைல் போனும், இன்டர்நெட்டும் அவர்களுக்கு நொடிக்கு நொடி புது தகவல்களை, புது அனுபவங்களை தருகிறது. அவர்கள் உலகம் மிகவும் வேகமானதுதான். ஆனால், நியாயமானது, நேர்மையானது. 


நோ ப்ராப்ளம்
உங்கள் குட்டீஸ் எப்போது பார்த்தாலும் மொபைலை நோண்டி, நுங்கெடுத்துக் கொண்டிருக்கிறாரா? விட்டு விடுங்கள். அதில் உள்ள விஷயங்களை உள்வாங்கி கொள்வதில் அத்தனை
ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை உணருங்கள்.
எதிர்காலத்தில் எல்லாமே ‘ஸ்மார்ட் கார்டு’ போல, பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’தான். இது யூத்களின் அடுத்த புரட்சி.
கரும்பலகை, சாக்பீசுக்கு முழு டாட்டா சொல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை.     

No comments:

Post a Comment