ஒரு மனிதனுக்கு உடை எந்தளவு முக்கியத்து வம் வாய்ந்ததோ, அந்த அளவிற்கு காலணிகளும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. நாகரிக வளர்ச்சிக்கு தக்கபடி காலணி தொழில்நுட்பங்களிலும் மாற்றங்கள் தேவைப்படுகிறது.
அதற்கேற்ப காலணி வடிவமைப்பாளர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இத்துறையில் மேலாளர், சூப்பர்வைசர் பணிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. வடிவமைப்பாளர்களுக்கு கற்பனை திறனும், படைப்பு திறனும் தேவை.
முதுநிலை அளவில் புட்வேர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்கை தேர்வு செய்து படிக்க முடியும். காலணி தொழில்நுட்பத்தில், மனித வள மேம்பாட்டு பிரிவை தேர்வு செய்தும் படிக்க முடியும்.
இதில் அறிவியல் பட்டதாரிகள் சேர முடியும். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது தோல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்தவர்களும் இதில் சேரலாம்.
வடிவமைப்புக்கும் ‘டிப்ளமோ இன் புட்வேர் டிசைனிங்’என்ற படிப்பு உள்ளது. நுண்கலையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது வரைதல், வடிவமைத்தல் போன்றவற்றில் ஈடுபாடுள்ள பட்டதாரிகள் இதில் சேர முடியும்.
கல்வி களஞ்சியம்
இதற்கென வடிவமைக்கப்பட்ட இயந்திரங்களையும், பயிற்சி பெற்ற நபர்களையும் கொண்ட மிக நவீனமான ஒரு துறையாக காலணி தொழில்நுட்பம் உருவாகி வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து புதிய மாடல்களில் காலணிகளை தயாரித்து வழங்குவது உற்பத்தியாளர்களின் கடமையும், வியாபார யுக்தியுமாக இருக்கிறது.ஆரம்பத்தில் சிந்தனைத்திறன் மட்டுமே மூலதனமாக இருந்த இத்தொழிலில் தற்போது தொழில்நுட்பம் சார்ந்த படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. புதிய நிறுவனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அதற்கேற்ப காலணி வடிவமைப்பாளர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இத்துறையில் மேலாளர், சூப்பர்வைசர் பணிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. வடிவமைப்பாளர்களுக்கு கற்பனை திறனும், படைப்பு திறனும் தேவை.
காலணி தொழில் நுட்பத் தில் டிப்ளமோ முடித்த அறிவியல் பட்டதாரிகளுக்கு எக்சிகியூட்டிவ் அளவிலான பணிகள் கிடைக்கும்.பிற பட்டதாரிகளுக்கு வடிவமைப்பாளர்களாக வாய்ப்பு உள்ளது. நொய்டா, சென்னையில் உள்ள புட்வேர் டிசைன் அண்டு டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட், சென்னை புட்வேர் பயிற்சி மையம் அல்லது சென்னை தோல் ஆராய்ச்சி மையம் போன்ற ஒரு சில கல்வி நிறுவனங்களில் புட்வேர் டெக்னாலஜி இளநிலை படிப்பாக உள்ளது.
முதுநிலை அளவில் புட்வேர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்கை தேர்வு செய்து படிக்க முடியும். காலணி தொழில்நுட்பத்தில், மனித வள மேம்பாட்டு பிரிவை தேர்வு செய்தும் படிக்க முடியும்.
இந்த 18 மாத டிப்ளமோ படிப்பில் சேர மெக்கானிக்கல் அல்லது புரடக்ஷன் இன்ஜினியரிங்கில் பிஇ அல்லது பிடெக் நிறைவு செய்திருக்க வேண்டும்.லெதர் டெக்னாலஜியில் இளநிலை படிப்பை நிறைவு செய்தவர்களும், இயற்பியல் அல்லது வேதியியல் பிரிவில் முதுநிலை படிப்பை நிறைவு செய்தவர்களும் கூட இதில் சேரலாம். காலணி தொழில்நுட்பத்தில் மேற்பார்வையாளராக பணியாற்ற தனி படிப்பு உள்ளது.
இதில் அறிவியல் பட்டதாரிகள் சேர முடியும். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது தோல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்தவர்களும் இதில் சேரலாம்.
வடிவமைப்புக்கும் ‘டிப்ளமோ இன் புட்வேர் டிசைனிங்’என்ற படிப்பு உள்ளது. நுண்கலையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது வரைதல், வடிவமைத்தல் போன்றவற்றில் ஈடுபாடுள்ள பட்டதாரிகள் இதில் சேர முடியும்.
கல்வி களஞ்சியம்

No comments:
Post a Comment