விளையாட்டு

ஆசிய கோப்பை சாம்பியன்பட்டம்: 

பரப்பான இறுதி ஆட்டதில்பங்களாதேஷை வீழ்த்தியது பாக்.

Asia Cup 2012
டாக்கா:ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது பாகிஸ்தான். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் கோப்பையை வென்றுள்ளது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 234 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தது. ஆரம்பம் முதலே வங்கதேச வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் நாசிர் ஜம்ஷெத் 9, யூனிஸ் கான் 1, மிஸ்பா உல் ஹக் 13 ரன்களில் வெளியேறினர். மறுமுனையில் நிதானமாக ஆடிய ஹபீஸ் 87 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் கட்டினார். இதனால் அந்த அணியின் ரன் விகிதம் மிக மோசமானது.
இதன்பிறகு வந்தவர்களில் ஹமத் ஆஸம், உமர் அக்மல் ஆகியோர் தலா 30 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்வரிசையில் அப்ரிதி, சர்ஃப்ராஸ் அஹமது ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 200 ரன்களைக் கடந்தது.  22 பந்துகளைச் சந்தித்த அப்ரிதி ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. அஹமது ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார்.
237 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் நஜிமுதீன் 16, ஜகுருல் இஸ்லாம் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரர் தமிம் இக்பால் 68 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த நாசிர் ஹுசைனும், ஷகிப் அல்ஹசனும் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றனர்.  அந்த அணி 170 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 63 பந்துகளைச் சந்தித்த ஹுசைன் 28 ரன்களில் வீழ்ந்தார். சிறிது நேரத்திலேயே ஷகிப் அல்ஹசனும் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய அவர் 72 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். அல்ஹசனின் விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
கடைசி 6 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டன. உமர் குல் வீசிய 47-வது ஓவரில் வங்கதேச வீரர்கள் 3 பவுண்டரிகளை விளாச கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வெற்றி வங்கதேசத்தின் வசம் திரும்புவது போல் இருந்தது.
ஆனால் 48-வது ஓவரில் மஸ்ரஃபி (9 பந்துகள் 18 ரன்கள்) ஆட்டமிழக்க வங்கதேசத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. கடைசி ஓவரில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. சீமா வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் வங்கதேசம் 5 ரன்கள் எடுக்க, கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  ஆனால் 5-வது பந்தில் அப்துர் ரசாக் போல்டு ஆனார். கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற நிலையில், வங்கதேசத்துக்கு ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. அதனால் அந்த அணி 2 ரன்களில் தோல்வி கண்டது.
அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 32 ரன்கள் குவித்த அப்ரிதி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பங்களாதேஷின் ஷகிப் அல்ஹசன் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 இலங்கை அணிக்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்குமா?: முதல் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது
3 நாடுகள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 ரன்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இலங்கை அணி வெற்றி பெற்றதால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. 
இலங்கை அணிக்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்குமா?: முதல் இறுதிப்போட்டி நாளை நடக்கிறதுலீக் முடிவில் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 19 புள்ளிகளை பெற்று இருந்தன. லீக்” ஆட்டத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை அதிக முறை வீழ்த்தி இருந்ததால் முதல் இடத்தை பிடித்தது.
ஆஸ்திரேலியா 2-வது இடத்தை பிடித்தது. இந்த இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி 15 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்து வெளியேறியது.
ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் இறுதி போட்டி 3 ஆட்டங்களாக நடக்கிறது. ஒரே அணி முதல் 2 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் 3-வது இறுதிப்போட்டி நடைபெறாது.
முதல் இறுதிப்போட்டி பிரிஸ்டேனில் நாளை (4-ந்தேதி) நடக்கிறது.   ஆஸ்திரேலியா அணி லீக் ஆட்டங்களில் இலங்கையிடம் 3 முறை தோற்றது. இதற்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப்போட்டி தொடரில் அந்த அணி இலங்கைக்கு எதிராக மட்டும் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதற்கு எல்லாம் வகையிலும் ஆஸ்திரேலியா பழி வாங்குமா? என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
காயம் காரணமாக கடந்த “லீக்” ஆட்டங்களில் விளையாடாத ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் நாளை இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது. இதனால் பீட்டர் பாரஸ்ட் நீக்கப்படுவார். அந்த அணியின் பேட்டிங் பலவீனமாகவே இருக்கிறது. இதை சரிகட்ட வேண்டிய நிலை உள்ளது.
டேவிட் ஹஸ்சி ஒருவரே அனைத்து ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி வருகிறார். வார்னரும், வாடேயும் தான் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். நேற்றைய ஆட்டத்தில் வாட்சன் 3-வது வீரராக வந்து சிறப்பாக விளையாடினார். இதனால் அவர் தொடர்ந்து 3-வது வீரராகவே விளையாடலாம்.
கேப்டன் கிளார்க் அதற்கு அடுத்த வரிசையில் ஆடுவார். கடைசி “லீக்” ஆட்டத்தில் விளையாடாத பெர்ட்லீ நாளை ஆடுவார். மெக்காய் அல்லது ஹில்பென்ஹாஸ் நீக்கப்படலாம்.   வீரர்களின் காயம் இலங்கை அணிக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேத்யூஸ், பெரைரா, மெகரூப் ஆகியோர் காயம் அடைந்து உள்ளனர். இதில் பெரைராவுக்கு பதிலாக நாளைய ஆட்டத்தில் கபுகேந்திரா ஆடுவார். மேத்யூஸ், மெகரூப் ஆடுவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment