உலகச் செய்திகள்

போர் பீதியாலும், தடையாலும் தளராத ஈரான் மக்கள்!

போர் பீதியாலும், தடையாலும் தளராத ஈரான் மக்கள்
டெஹ்ரான்:அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஏற்பட்ட கடுமையான தடைகளோ, இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற பீதியோ ஈரான் மக்களை தளரச் செய்யவில்லை.
டெஹ்ரான் உள்பட ஈரான் நகரங்களில் மக்களின் மாமூல் வாழ்க்கையை இவை எதுவும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாராசீக புதுவருடத்தை வரவேற்கும் மகிழ்ச்சியில் அவர்கள் இருந்தார்கள். புதிய நெருக்கடியும் தாமதிக்காமல் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உள்ளது. அதேவேளையில் பிரச்சனைகள் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் சூழல் உருவாக கூடாது என சாதாரண மக்கள் விரும்புகின்றனர். அவர்களில் பலரும் அதனை வெளிப்படையாக கூறவும் தயங்கவில்லை.
போராட்ட வீரியத்தின் மூலம் எதிரியின் தாக்குதலை முறியடிக்க முடியும் என்று நம்பினாலும் மோதல் சூழலை தணிக்கவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.
‘போரும் தடைகளும் புதியதல்ல. சிரமங்களை எதிர்கொள்ள நாங்கள் படித்துவிட்டோம்.’ – என்று டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயிலும் மாணவரான முஹ்தஸிம் அலி கூறுகிறார்.
இஸ்லாமிய புரட்சியை தொடர்ந்து டெஹ்ரானில் அமெரிக்க தூதரகத்தை நீண்டகாலம் சுற்றி வளைத்த குழுவில் அங்கமான டாக்டர்.ஃபுரூஸ் ராஜி ஃபர்த் இதே கருத்தை கூறுகிறார்.
இதனிடையே, ஐ.நா தலைமையிலான தடையை தவிர அமெரிக்கா தனியாகவும் ஈரான் மீது தடையை விதிக்க பல்வேறு நாடுகளை நிர்பந்தித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானில் இருந்து எண்ணெயை இறக்குமதிச் செய்வதை நிறுத்தாவிட்டால் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்கவேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதத்தை ஈரானில் இருந்து பெறுகிறது. ஆகையால் ஈரானின் எண்ணெயை இந்தியா வேண்டாம் என்று கூறாது என்பது ஈரான் தலைவர்களின் நம்பிக்கையாகும்.
அண்மையில் டெல்லி இஸ்ரெல் தூதரக அதிகாரியின் காரில் குண்டுவெடித்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதித்துள்ளது. ஆனால், விசாரணைக்கு அனைத்து வகையான ஒத்துழைப்பையும் அளித்துள்ள ஈரான், இரு நாடுகள் இடையேயான உறவை சீரமைப்பதில் தூதரக ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மேக்னடிக் குண்டு வைத்ததின் பின்னணியில் ஈரான் செயல்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக கூறும் இஸ்ரேல் பின்னர் ஏன் அதனை வெளியிடவில்லை என்று கேட்கிறார் டெஹ்ரானில் இன்ஸ்ட்யூட் ஆஃப் டிஃபன்ஸ் ஸ்டடீஸ் இயக்குநர் மெஹ்தாப் ஆலம் ரிஸ்வி.
சி.ஐ.ஏ, மொஸாத் ஆகிய உளவு அமைப்புகளுக்குத்தாம் இத்தகைய மேக்னடிக் குண்டுகளில் அனுபவம் உள்ளது. ஆனால், ஈரானியர்கள் எவருக்கும் எதிராக இதனை உபயோகித்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று மெஹ்தாப் ஆலம் கூறுகிறார். முக்கியமான கட்டத்தில் அனைத்து நாடுகளின் ஆதரவும் தேவைப்பட்ட சூழலில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை மையமாக கொண்டு ஒரு தாக்குதலை நடத்த ஈரான் எவ்வாறு துணியும்? என்று முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷைகுல் இஸ்லாம் கேள்வி எழுப்புகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 1100 கோடி டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை ஈரானில் இருந்து இறக்குமதிச் செய்கிறது. எண்ணெய் விலையின் பாதியை இந்தியாவில் உள்ள தயாரிப்புகளை இறக்குமதிச் செய்வதற்கு ஈரான் பயன்படுத்துகிறது.
அணுசக்தி திட்டத்தை விட ஃபலஸ்தீன் விவகாரத்தில் ஈரான் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடுதான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு களமிறங்க தூண்டியது என்று பாராளுமன்ற சபாநாயகரும், முன்னாள் அணுசக்தி மத்தியஸ்தருமான லாரிஜானி கூறியுள்ளார். அணுசக்தி ஒரு திரை மட்டுமே. அதற்கு அப்பால் ஒன்றுமில்லை என்று அவர் கூறினார்.

ஷைமா அல் வாதியின் கொலை: துவேஷ பிரச்சாரத்தின் விளைவு!

Shaima Alwadi
வாஷிங்டன்:இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக நடந்துவரும் வெறுப்பைத்தூண்டும் பிரச்சாரத்தின் விளைவே நேற்று முன்தினம் அமெரிக்காவில் கொலைச் செய்யப்பட்ட ஈராக் வம்சாவழியைச் சார்ந்த முஸ்லிம் பெண்மணி ஷைமா அல்வாதி.
’பயங்கரவாதியே நீ உனது நாட்டிற்கு திரும்பிச்செல்!’ என்று எழுதப்பட்ட குறிப்பு ஷைமா தலையில் அடிபட்டு கிடந்த இடத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இன துவேஷத்திற்கு(xenophobia) தனது மனைவி பலியாகிவிட்டதாக ஷைமாவின் கணவர் காஸிம் அல்ஹாமிதி நேற்று முன்தினம் கூறினார்.
தெற்கு ஈராக்கில் அல் ஸமாவா நகரத்தில் இருந்து சதாம் ஹுஸைனின் ஆட்சிக்காலத்தில் சவூதியில் அகதி முகாமிற்கு வந்த இருவரும் அங்குவைத்து திருமணம் செய்துகொண்டனர். ஐந்து குழந்தைகளுக்கு பெற்றோரான இவர்கள் அமெரிக்காவில் குடியேறினர்.
கடந்த புதன் கிழமை காலையில் வீட்டின் பின்புறம் வழியாக கொலையாளிகள் நுழைந்துள்ளனர். கணவர் ஹாமிதி நான்கு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றிருந்தார். மூத்த பெண் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். உணவறையில் இருந்த ஷைமாவின் தலை மற்றும் வலது காது ஆகிய பகுதிகளில் இரும்பு கம்பியை உபயோகித்து கொலையாளிகள் அடித்துள்ளனர். தொடர்ச்சியாக ஐந்து தடவை அடித்துள்ளனர். திடீரென தாக்கப்பட்டதால் சத்தம் போடக்கூட முடியாத நிலையில் மயக்கமடைந்த ஷைமாவை தூக்கத்தில் இருந்து விழித்து வந்து பார்த்த மகள் இரத்த வெள்ளத்தில் கிடப்பத்தை பார்த்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை

மரணத்தண்டனை கடுமையாக அதிகரிப்பு: ஆம்னஸ்டி!

The death penalty is still in force in 57 countries worldwide
லண்டன்:பல்வேறு நாடுகளில் மரணத்தண்டனை கடந்த ஆண்டு கடுமையாக உயர்ந்துள்ளது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிக்கை கூறுகிறது.
20 நாடுகளில் கடந்த ஆண்டு 676 பேருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010-ஆம் ஆண்டில் 23 நாடுகளில் 527 பேருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. மிக அதிகமான மரணத்தண்டனை நிறைவேற்றிய நாடுகளில் சீனா முதலிடத்தை பிடிக்கிறது. 3-வது இடத்தில் சவூதி அரேபியாவும் ஆகும். அமெரிக்காவிற்கு 5-வது இடமாகும். பட்டியலில் இடம்பிடித்த அமெரிக்க கண்டத்தில் ஒரே நாடு அமெரிக்கா ஆகும். மரணத்தண்டனை விதிக்கும் நீதிமன்ற உத்தரவுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 2024 ஆகும்.முந்தைய ஆண்டு 1923 ஆகும்.

ஷேக் கர்ளாவிக்கு விசா மறுப்பு: பிரான்சிற்கு கடும் எதிர்ப்பு!


French visa ban blow to Al Qaradawi
தோஹா:உலக புகழ்ப்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவிக்கு விசா மறுத்த பிரான்சின் நடவடிக்கைக்கு சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தீவிர கருத்துக்களுக்கு எதிரான கொள்கையை உடைய கர்ளாவியை பிரான்சில் நுழைய அனுமதிக்காதது வருத்தத்திற்குரியது என்று இண்டர்நேசனல் யூனியன் ஆஃப் முஸ்லிம் ஸ்காலர்ஸ் பொதுச்செயலாளர் ஷேக் அலி அல் கரதாகி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
பிரான்சில் யூனியன் ஆஃப் இஸ்லாமிக் ஆர்கனைசேசன்ஸ் அடுத்த மாதம் நடத்த இருந்த நிகழ்ச்சியில் 86 வயதான கர்ளாவி பங்கேற்கவிருந்தார்.
பிரான்சின் இறையாண்மையை மதிக்கிறோம். அவர்களின் தீர்மானத்தை தத்துவரீதியாக அங்கீகரிக்கிறோம். ஆனால், நாகரீகம் மற்றும் ஜனநாயகத்தின் நாடான பிரான்சு இத்தகையதொரு முடிவை மேற்கொண்டது எங்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது என்று கரதாகி கூறினார். பிரான்சு தனது முடிவை மறுபரிசீலனைச் செய்யும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அண்மையில் பிரான்சின் துலூஸில் யூத பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் படுகொலையை கண்டித்த கரதாகி, போர்க்காலத்தில் கூட பெண்களையும், குழந்தைகளையும் தாக்குவது கூடாது என்ற கொள்கைதான் இஸ்லாத்திற்குரியது என்று தெரிவித்தார்.
கர்ளாவியை பிரான்ஸ் வரவேற்காது என்று கத்தர் அமீருக்கு அறிவித்துள்ளதாக பிரான்சின் அதிபர் நிகோலஸ் சர்கோஸி ஏற்கனவே தெரிவித்துள்ளார். பிரான்சின் கொள்கைகளுக்கும், கர்ளாவியின் கருத்துக்களுக்கும் பொருத்தமில்லை என்பது சர்கோஸியின் கருத்து.



அமெரிக்கா உலகை ஆண்ட காலம் முடிந்துவிட்டது – அஹ்மத் நஜாத்!

'You can no longer dictate to the world,' Ahmadinejad tells US
தெஹ்ரான்:அமெரிக்காவும், நேட்டோவும் உலக நாடுகளுக்கு கூடுதல் காலம் கட்டளை பிறப்பிக்க இயலாது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். உலகை ஆண்ட அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது. தங்களது கொள்கையை மாற்ற அவர்கள் தயாராகவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானின் பொருளாதார நிலைக்குறித்து தாஜிகிஸ்தானில் நடந்த மாநாட்டில் உரைநிகழ்த்தினார் நஜாத். தெற்கு-மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு துணைச்செயலாளர் ராபர்ட் ப்ளேக்கின் தலைமையில் அமெரிக்க குழுவும் இம்மாநாட்டில் பங்கேற்கிறது. ஆனால், நஜாத் உரை நிகழ்த்த எழுந்தவுடன் அரங்கை விட்டு வெளியேறிய இக்குழுவினர் பின்னர் அவர் உரையை பேசி முடித்ததும் அரங்கிள் நுழைந்தனர்.
நஜாத் தனது உரையில், காலனி மயமாக்கலை லட்சியமாக கொண்டு செயல்படும் நேட்டோ உறுப்பு நாடுகளின் கொள்கைதான் உலகத்தில் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று நஜாத் சுட்டிக்காட்டினார்.

ஆப்கானில் இருந்து வெளிநாட்டு ராணுவம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும். உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் அமெரிக்காவும், நேட்டோவும் ஆகும். தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவும், நேட்டோவும் ஆப்கானில் நுழைந்தன. இதே பேனரில் தான் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை சுற்றியும் இவர்கள் செயல்படுகின்றனர். நேட்டோவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு சீர்கெடவும் இதுதான் காரணம். இவ்வாறு நஜாத் கூறினார்.சிரியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியது

சிரியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியதுடமாஸ்கஸ்:சிரியாவில் நடந்துவரும் மோதலை நிறுத்த ஐ.நா-அரபுலீக் மத்தியஸ்தர் கோஃபி அன்னன் பரிந்துரைத்த 6 அம்ச திட்டத்தை சிரியா அரசு  அங்கீகரிக்க கோரும் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேறியது.
பிரிட்டனின் ஐ.நா தூதர் மார்க் லியான் க்ராண்ட் தாக்கல் செய்த தீர்மானம் ரஷ்யா, சீனா ஆதரவுடன் நிறைவேறியது. முன்னர் சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தை உபயோகித்து தோல்வியடையச் செய்தன. பரிந்துரைகளை அங்கீகரிக்காவிட்டால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிரியா அரசுக்கு தீர்மானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளையில் எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையை தொடரும் சிரியா அரசை கண்டித்து ஜப்பான் தனது தூதரகத்தை சிரியாவில் மூடியுள்ளது. ஏற்கனவே சிரியாவில் மோதல் நடைபெற்று வரும் சூழலில் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை ஜப்பான் குறைத்திருந்தது.

No comments:

Post a Comment