Wednesday, 23 November 2011

இலங்கையில் 1,000 நானோ கார்கள் விற்பனை: குஷியில் டாடா

இந்தியாவில் தட்டு தடுமாறி வரும் நானோ கார் இலங்கை மார்க்கெட்டில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை அங்கு 1,000 நானோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மேமாத மத்தியில் நானோ கார் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிலிருந்து அங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வரும் நானோ கார் வரி உள்பட ரூ.9.25 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கையில் நானோ கார் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அதிக மைலேஜ் கொடுப்பதால் தனி நபர்கள் மட்டுமின்றி டாக்சி நிறுவனங்கள் அதிக அளவில் நானோ காரை வாங்கி வருகின்றன. இதனால், அங்கு நானோ கார் விற்பனை நன்கு வளர்ச்சி கண்டு வருகிறது.

மேலும், நானோ காரின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளரான டிஐஎம்ஓ நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேர சேவை வழங்கி வருவதால் வாடிக்கையாளர் மத்தியில் நானோவுக்கு வரவேற்பு கூடிக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு  கடந்த ஆறரை மாதங்களில் மட்டும் அங்கு 1,000 நானோ கார்கள் விற்பனையாகி இருப்பதாக இலங்கையிலிருந்து வெளிவரும் டெய்லி நியூஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நானோ காரின் அங்கீகாரம் பெற்ற இறக்குமதியாளரான டிஐஎம்ஓ நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு மேலாளர் எசந்தா விஜிசேகரா கூறுகையில்,"தேவை அதிகரித்துள்ளதால் அதிக இருப்பு வைத்துள்ளோம்.

நானோ கார் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை வழங்க முடியும்," என்றார்.

No comments:

Post a Comment