அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும் வாழ்வியல்
நெறியான இஸ்லாம் உழைப்பு குறித்தும் பல உன்னத வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது.
நேர்மையான வழியில் உழைத்து, நேர்மையான வழியில் பொருளீட்டுவதும் இறைவழிபாடுதான் எனும் அளவுக்கு உழைப்பை உயர்த்திப் பேசுகிறது இஸ்லாம்.வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமான நாள். குளித்துத் தூய்மையாகி ‘ஜும்ஆ’ எனும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபடும் நாள். அதுபற்றி குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
“இறைநம்பிக்கை கொண்டவர்களே, வெள்ளிக்கிழமையன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பக்கம் விரைந்துசெல்லுங்கள். கொடுக்கல், வாங்கலை விட்டுவிடுங்கள். இது உங்களுக்குச் சிறந்ததாகும் நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்’’ (குர்ஆன் 62: 9)
ஜும்ஆ தொழுகைக்கு அழைக்கப்படும்போது எவ்வளவு பிசியான வியாபாரமாக இருந்தாலும் சரி, எல்லா வகையான கொடுக்கல், வாங்கலையும் நிறுத்திவிட்டு இறைவழிபாட்டுக்கு விரைந்து செல்ல வேண்டும்.
சரி, வழிபாடு முடிந்தபிறகு பள்ளிவாசலிலேயே சோம்பி உட்கார்ந்து விடலாமா என்றால், கூடாது. அவரவர் தொழிலை, வணிகத்தை, வேலையைக் கவனிக்கச் செல்ல வேண்டும் என்று இறைவன் ஆணையிட்டுள்ளான். இதோ குர்ஆன் கூறுகிறது:“தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள். அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்’’ (குர்ஆன் 62: 10) அதாவது, இறைவனின் அருளாதாரத்தைத் தேட எவ்வளவு விரைவாக வந்தீர்களோ அதேபோல் தொழுகை முடிந்ததும் இறைவழியில் பொருளாதாரத்தையும் தேடிக்கொள்ள விரைந்து செல்லுங்கள் என்கிறான் இறைவன்.தொழுதுவிட்டுப் பள்ளிவாசலிலேயே இருப்பது சரியன்று. சோம்பி இருப்பதை இஸ்லாம் ஊக்கப்படுத்தவில்லை. ‘தொழுதுவிட்டாயா, ஓடு..! உனக்காக, உன் குடும்பத்திற்காக, உன் மனைவி மக்களுக்காக நேர்மையான வழியில் உழைத்துப் பாடுபடு’ என்று தன் அடியார்களை உற்சாகப்படுத்துகிறான் இறைவன்.
இந்த இறைக்கட்டளையை மனத்தில் இருத்தி, அருளையும் பொருளையும் ஒருசேரப் பெற்று பெருவாழ்வு வாழ முயல்வோமாக

No comments:
Post a Comment