Thursday, 24 November 2011

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி: கசாப்புக்கு செலவுரூ.50 கோடி

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அப்போது தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவன் மும்பை ஆர்தர் ரோட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பாதுகாப்புக்காக இதுவரை ரூ.16.17 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக மராட்டிய அரசின் உள்துறை செயலாளர் மேதா காட்கில் கூறினார்.
ஆனால் இதனை மராட்டிய அரசின் இன்னொரு உயர் அதிகாரி மறுத்துள்ளார். அவர் கூறும்போது, தீவிரவாதி கசாப்புக்கு இதுவரை ரூ.50 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. ஆர்தர் ரோடு ஜெயிலில் கசாப்பை அடைப்பதற்காக சிறப்பு அறை ஒன்று கட்டப்பட்டது. இதற்கு மட்டும் ரூ.8 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதேபோல் ஜெ.ஜெ. மருத்துவமனையில் சிறப்பு கைதி வார்டு கட்டுவதற்கு ரூ.1.5 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
இதேபோல் அஜ்மல் கசாப் பாதுகாப்புக்கு செய்த செலவுகளை கணக்கிட்டால் தாராளமாக ரூ.50 கோடி வரை செலவாகி இருப்பது கண்கூடாகத் தெரியும். ஆனால் மாநில அரசு ரூ.16 கோடிதான் செலவாகி இருப்பதாக கணக்கு காட்டுகிறது. இது ஏன் என்று புரிய வில்லை என்றார்.

No comments:

Post a Comment