Monday, 28 November 2011

தொலைபேசியா? <அல்லது> தொல்லைபேசியா?

வீட்டில் உள்ள சூழலைப் போலவே வீட்டுக்கு உள்ள புறச் சூழலும் நம்முடைய பிள்ளைகள் மீது பெரும் தாக்கம் செலுத்துகின்றன. எனினும், ஒரு பிள்ளை வீட்டுக்கு வெளியில் உள்ள சமூகத்தை எதிர்க்கொள்ளும் சந்தர்ப்பங்களில் நெறிதவறிப் போய்விடாது இருப்பதற்கான பயிற்றுவிப்பு வீட்டில்,பெற்றோரின் வளர்ப்பில் வழங்கப்படவேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது எனினும், அதனை மீறியும் பிள்ளைகள் தவறு செய்யக்கூடிய நிலைமைகளூம் இருக்கவேசெய்கின்றன.
தொலைபேசியா? தொல்லைபேசியா?
          தகவல் தொழில் நூட்பத்தில் முன்னேற்றங்கண்டுள்ள ஒரு யுகத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருள்போல் வசதி உள்ளவர்களால் மட்டுமே பயன்படுத்தபட்டுவந்த தொலைபேசி அல்லது கைப்பேசி இன்று சர்வ சாதாரணமாக அன்றாட வாழ்வில் எத்தனையே நலன்கள் இருப்பது போலவே ஒருசில தீங்குகளூம் இருக்கவே செய்கின்றன எனலாம்.
         நம் குழந்தைகளைக் கல்வி கற்பதற்காக விடுதிகளில் தங்கவிடுகின்றோம். பேலதிக வகுப்புக்களுக்காக வெளியில் அனுப்புகிண்ட்றோம். அவசியமான நேரத்தில் அவர்களைத் தொடர்புகொள்ள வசதியாகஅவர்களுக்குக் கைத்தொலைபேசிகளை வழங்குகின்றோம். சில நேரங்களில் இந்தக் கைத்தொலைபேசி மூலம் அனாவசியமான பல பிரச்சினைகளும் எழவே செய்கின்றன என்பதை அன்றாடம் நாம் காணும், கேள்விப்படும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
         கைத்தொலைபேசி மூலம் வழிதவறிப் போய் பிழையான தொடர்புகளில் அனேகர் எல்லா நேரங்களிலும் வேண்டுமென்றே அத்தவறை இழைத்தவர்கள் என்று சொல்வதற்க்கில்லை. தற்செயலான நிகழ்வுகள் கூட அத்தகைய சிக்கல்களில் அவர்களை மாட்டிவிடக்கூடும் என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு ஒரிரு சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.
             ஒரு “மிஸ் காலா” லும் “மிஸ்” ஸாகலாக
         முன்பின் அறிமுகமற்ற ஒர் இலக்கத்தில் இருந்து ஒர் அழைப்பு வருகிறது. யாராய் இருக்கும் என்ற யோசனையோடு கைப்பேசியை இயக்கினால், ராங் நம்பர்.
        “ஹலோ இம்தியாஸ், எப்படி இருக்கே?”
        “ஸாரி, இது இம்தியாஸோட நம்பர் கிடையாது”
        “அப்போ நீங்க யாரு பேசுறீங்க?”
        “நான் ஷபீனா”
        இப்படியாகத் தற்செயலாகத் தொடங்கி உரையாடல்கள் மூலம் பிள்ளைகள் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர் என்பது நிதர்சனம். எனவே பெற்றோராகிய நாம், பிள்ளைகளுக்கு, மிக முக்கியமாகப் பெண் பிள்ளைகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும். அதில் மிக முக்கியமான ஒன்று, அறிமுகமற்ற எண்களில் இருந்து வரும் அழைப்புக்களுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது என்பதாக இருக்க வேண்டும். முடியுமாக இருந்தால், சிம் கார்டு வாங்கும்போதே (”மைஃபைவ் நம்பர்ஸ்” என்பது போல) குறிப்பிட்டஎண்களை மட்டுமே தொடர்புகளைத் திட்டவட்டமாக வரையறுத்துக் கொடுக்க வேண்டும்.
        தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் பதின்ம(teenage) வயதுப் பிள்ளைகளின் உபயோகத்திற்கு கைத்தொலைபேசி வழங்க வேண்டுமே தவிர, அவ்வாறு வழங்குவதை இயன்றளவு தவிர, கொள்வதே நல்லது. பதிலாக, வீட்டில்லோ விடுதியிலோ உள்ள பொது தொலைபேசிப் உபயோகத்தை ஊக்குவிக்கலாம். தவிர்க்க முடியாத நிலையில் கைப்பேசி ஒன்றை நம் பிள்ளையிடம் வழங்கினாலும்கூட, அவர்கள் யாருடன் உரையாடுகிறார்கள், யாருக்கு குறுஞ் செய்தி அனுப்புகிறார்கள், எவ்வளவு நேரம் உரையாகிறார்கள், அவர்களின் கைப்பேசிக்கு மாதாந்திரம் எவ்வளவு கட்டணம் வருகிறது என்பதான விபரங்களைப்  பெற்றோராகிய நாம் கட்டயாம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
        எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் உள்ள இளம் வயதுப் பெண் பிள்ளையின் உபயோகத்திற்கு ஒரு கைப்பேசி கொடுத்திருந்தார்கள். அவளும் தன் வகுப்புத் தோழியருடன் உரையாடுவதோடு, தனக்கு நண்பிகளிடம் இருந்து வரும் சுவையான, தன் வயதுக்குரிய குறுஞ்செய்திகளை தன்னுடைய நண்பியர் வட்டத்தில் பரிமாறி வந்தாள்.
இந்நிலையில் இருவார விடுமுறையில் வெளிநாட்டில் இருந்து அவளின் சகோதரான் வீடு வந்திருந்தான் அத்தகைய குறுகிய காலத்துக்கு தனியாக ஒரு சிம் கார்டு வாங்காமல் தற்காலிகமாகப் பயன்பாடுத்திக் கொள்ளுமாறு தங்கை அண்ணனிடம் அதனைக் கொடுத்துவிட்டாள். இரண்டு தினங்கள் கடந்திருக்கும். திடீரென்று ஒர் அழைப்பு.ஆண் குரல்லென்று பேசுகிறது. அண்ணனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகின்றது. அவர் அந்த குரலுக்குரியவரைத்திட்ட, அந்த நபர் பதிலுக்குதிட்ட என்று ஒரே களேபரம் தொலைபேசி உரையாடல் முடிவுற்றும் வீட்டில் பூகம்பம் வெடித்திருக்கும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.
        தீர விசாரித்துப் பார்த்ததில் தெரிய வந்த விடயம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. எதிர் முனையில் பேசிய அந்த பையன் தன்னுடைய தங்கைக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ். என்னும் குறுஞ்செய்தி வருவதும் அவள் அவற்றைப் பார்த்துவிட்டுச் சிரிப்பதுமாய் இருப்பதைத் தொடர்ந்து அவதானித்த அந்தப் பையனுக்கு ஒருவிதமான சந்தேகம் எற்படுகின்றது. எனவே, தங்கை தனது கைபேசியை வைத்துவிட்டுக் குளிக்கப்போன தருணத்தில் அதை எடுத்து அராய்ந்து பார்க்கிறான். ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து வந்த குறுஞ்செய்திகள் அவனுக்கு ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
        எனவே, அவன் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு யார் என்று அறிய விழைகின்றான்.எதிர்தரப்பில் ஓர் ஆண்குரல் ஒலிப்பதைக் கேட்டு ஆத்திரம் கொள்கின்றான். இங்கு,இரண்டு தரப்பிலும் ஏற்படுகின்ற கொந்தளிப்பான நிலை மைக்குக் காரணம், அவ்விரு            இளம் பெண்பிள்ளைகளும் தவறுசெய்தமைஅல்ல. மாறாக, சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களைக் குற்றவாளிகளாகக் காட்டியமையே.
        ஆனால், இங்கே நாம் சிந்திக்க வேண்டிய ஒரு செய்தி பொதிந்துள்ளது. நம்முடைய பெண்பிள்ளைகள் கைப்பேசி வழியே தமது நம்பியருடன் மட்டும் தொடர்புகொள்ளக் கூடியவர்களாக இருக்கலாம். எனினும், அந்தத் தொடர்பின்போது, எதிர்ப்பராத வகையில் அப்பெண்ணின் உறவினரான் ஆண்களின் கைக்கு அக்கைபேசி சென்றடைய நேர்ந்தால், விரும்பத் தகாத விளைவுகள் ஏற்பட இடமுண்டு என்பது கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.
        சிலபோது, மேலே நாம் சொன்னதுபோல தம் வீட்டுப் பெண் பிள்ளையைக் கண்காணிக்கும் நோக்கிலோ, அல்லது தம் வீட்டுப் பெண்ணின் தோழியைச் சீண்டி விளையாடும் நோக்கிலோ இன்னொரு வகையில் சொல்வதானால், நல்ல நோக்கத்தின் விளைவாகவே தீய எண்ணத்தின் விளைவாகவே ஒரு பெண்பிள்ளைக்கு தனது நண்பியின் கைப்பேசி எண்ணில் இருந்து ஆண்கள் மூலமும் அழைப்புக் கிடைக்கவாய்ப்பு உண்டு என்ற விழிப்புணர்வு நம்முடைய பெண்பிள்ளைகளுக்கு ஊட்டப்பட வேண்டும்.
        எனவே, வழியிலோ வகுப்பிலோ கண்டு சில நாள் பழகும் எந்த ஒரு தோழியை நம்பியும் சட்டென்று நம்முடைய கைப்பேசி எண்னைக் கொடுக்கவே கூடாது என்ற அறிவுறுத்தலை நாம் நமது பிள்ளைகளுக்குக் கண்டிப்பாக வழங்க வேண்டும். எதிர் பாராத வகையில் யாரேனும் ஆண்களிடமிருந்து கைப்பேசியில் அழைப்பு வருமாயின் எக்காரணம் கொண்டும் பேச்சை வளர்க்காமல் உடனே தொடர்பைத் துண்டித்துவிட வேண்டும்.
        அப்படி செய்யாத பட்சத்தில் எற்படக்கூடிய எதிரபாராத விளைவுகளால் எவ்வளவு தூரம் தன்னுடையதும் குடும்பத்தினதும் மானம் சீர்குலைய வாய்ப்புண்டு என்பன பற்றியெல்லாம் நல்ல முறையில் சினேபூவமாக நம்முடைய பிள்ளைகளுக்கு உரிய வசதிகளைச் செய்து கொடுப்பதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. மாறாக, அதை அவர்கள் நல்லமுறையில் பயன்படுத்துகின்றார்களா என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்வதும் நம்முடைய கடமையாகும்.

No comments:

Post a Comment