Thursday, 24 November 2011

வெஸ்ட் இன்டீஸ் ரன்குவிப்பு : இந்தியாவுக்கு நெருக்கடி

மும்பை : இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணி மோதும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 575 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக பிராவோ 166, எட்வர்ட்ஸ் 86, பாவெல் 81 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்துள்ளனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 4,
ஆரோ 3 ஓஜா, சர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸின் இந்த ரன் குவிப்பால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை ஏற்கனவே இந்தியா 2-0 கணக்கில் வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment