கடந்த 2008ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியாகினர். இதன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று, 2008, நவ., 26ம் தேதி மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர். பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2 நாட்கள் கடும் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் பலரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்ததால், அவர்களை உயிருடன் மீட்க நமது வீரர்கள் போராட வேண்டியிருந்து. முடிவில் 10 பயங்கரவாதிகளில் ஒருவரை தவிர, 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குததலில் வெளிநாட்டினர், பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட 166 பேரை பலியாகினர்.
Saturday, 26 November 2011
மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம்

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment