Showing posts with label education. Show all posts
Showing posts with label education. Show all posts

Friday, 25 November 2011

புட்வேர் டெக்னாலஜி – படித்து முடித்தவுடன் வேலை!!

ஒரு மனிதனுக்கு உடை எந்தளவு முக்கியத்து வம் வாய்ந்ததோ, அந்த அளவிற்கு காலணிகளும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. நாகரிக வளர்ச்சிக்கு தக்கபடி காலணி தொழில்நுட்பங்களிலும் மாற்றங்கள் தேவைப்படுகிறது.
இதற்கென வடிவமைக்கப்பட்ட இயந்திரங்களையும், பயிற்சி பெற்ற நபர்களையும் கொண்ட மிக நவீனமான ஒரு துறையாக காலணி தொழில்நுட்பம் உருவாகி வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து புதிய மாடல்களில் காலணிகளை தயாரித்து வழங்குவது உற்பத்தியாளர்களின் கடமையும், வியாபார யுக்தியுமாக இருக்கிறது.
ஆரம்பத்தில் சிந்தனைத்திறன் மட்டுமே மூலதனமாக இருந்த இத்தொழிலில் தற்போது தொழில்நுட்பம் சார்ந்த படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. புதிய நிறுவனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அதற்கேற்ப காலணி வடிவமைப்பாளர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இத்துறையில் மேலாளர், சூப்பர்வைசர் பணிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. வடிவமைப்பாளர்களுக்கு கற்பனை திறனும், படைப்பு திறனும் தேவை.
காலணி தொழில் நுட்பத் தில் டிப்ளமோ முடித்த அறிவியல் பட்டதாரிகளுக்கு எக்சிகியூட்டிவ் அளவிலான பணிகள் கிடைக்கும்.
பிற பட்டதாரிகளுக்கு வடிவமைப்பாளர்களாக வாய்ப்பு உள்ளது. நொய்டா, சென்னையில் உள்ள புட்வேர் டிசைன் அண்டு டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட், சென்னை புட்வேர் பயிற்சி மையம் அல்லது சென்னை தோல் ஆராய்ச்சி மையம் போன்ற ஒரு சில கல்வி நிறுவனங்களில் புட்வேர் டெக்னாலஜி இளநிலை படிப்பாக உள்ளது.
முதுநிலை அளவில் புட்வேர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்கை தேர்வு செய்து படிக்க முடியும். காலணி தொழில்நுட்பத்தில், மனித வள மேம்பாட்டு பிரிவை தேர்வு செய்தும் படிக்க முடியும்.
இந்த 18 மாத டிப்ளமோ படிப்பில் சேர மெக்கானிக்கல் அல்லது புரடக்ஷன் இன்ஜினியரிங்கில் பிஇ அல்லது பிடெக் நிறைவு செய்திருக்க வேண்டும்.
லெதர் டெக்னாலஜியில் இளநிலை படிப்பை நிறைவு செய்தவர்களும், இயற்பியல் அல்லது வேதியியல் பிரிவில் முதுநிலை படிப்பை நிறைவு செய்தவர்களும் கூட இதில் சேரலாம்.  காலணி தொழில்நுட்பத்தில் மேற்பார்வையாளராக பணியாற்ற தனி படிப்பு உள்ளது.
இதில் அறிவியல் பட்டதாரிகள் சேர முடியும். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது தோல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்தவர்களும் இதில் சேரலாம்.
வடிவமைப்புக்கும் ‘டிப்ளமோ இன் புட்வேர் டிசைனிங்’என்ற படிப்பு உள்ளது. நுண்கலையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது வரைதல், வடிவமைத்தல் போன்றவற்றில் ஈடுபாடுள்ள பட்டதாரிகள் இதில் சேர முடியும்.
கல்வி களஞ்சியம்

Thursday, 24 November 2011

உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்


நல்ல ஊதியத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நிச்சயம் வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பதற்கு கல்வி உதவித்தொகையும் கிடைக்கும் என்கிறார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா தென்மண்டலத் தலைவர் பி.ரவி. கம்பெனி செக்ரட்டரி படிப்பு குறித்து  அளித்த பேட்டி:
கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?
இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா கல்வி நிலையம், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதாகும். மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இது செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் தில்லியில் உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் தில்லியில் மண்டல அலுவலகங்களும், 69 கிளை அலுவலகங்களும் உள்ளன.

ரூ. 5 கோடியும் அதற்கு மேலும் மூலதனம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் கட்டாயம் ஒரு கம்பெனி செக்ரட்டரியை நியமிக்க வேண்டும் என்பது இந்திய கம்பெனி சட்ட விதி. அதுபோல பங்குச் சந்தையில் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்துள்ள அனைத்து நிறுவனங்களும் கண்டிப்பாக கம்பெனி செக்ரட்டரியை நியமிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு வேறு படிப்பு படித்தவர்களை நியமிக்கக் கூடாது. இந்தப் பதவியில் அமர கண்டிப்பாக ஏ.சி.எஸ். என்று அழைக்கப்படும் அசோசியேட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

இந்தப் படிப்பு படித்தவர்கள் ஒரு நிறுவனத்தில் என்ன பணியில் அமர்வார்கள்?
சி.எஸ். கோர்ஸ் முடித்து கம்பெனியில் கம்பெனி செக்ரட்டரி பதவியில் அமரும் ஒருவர் படிப்படியாக, நிர்வாக இயக்குனர், கம்பெனியின் தலைவர் பதவியில் அமர முடியும். இதுதவிர கம்பெனி ஆரம்பித்தல், கம்பெனிகள் பல்வேறு துறைகளில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தல், கம்பெனி நீதிமன்றங்களில் ஆஜராக்குதல் போன்ற பல்வேறு பணிகளை செய்தலில் ஒரு கம்பெனி செக்ரட்டரியின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.

சி.எஸ். படிப்பில் சேர அடிப்படை கல்வித் தகுதி என்ன?
பிளஸ் டூ படித்திருந்தாலே போதுமானது. பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பிரிவு எடுத்துப் படித்த மாணவர்களும் இதில் சேரலாம்.

சி.எஸ். படிப்பை பொருத்தவரை ஆரம்ப நிலை (ஃபவுண்டேஷன் புரோகிராம்), நிர்வாக நிலை (எக்ஸிகியூடிவ் புரோகிராம்), தொழில்முறை நிலை (புரபஷனல் புரோகிராம்) என்ற மூன்று படிகள் (stages) உண்டு. இதில் பிளஸ் டூ படித்து முடித்து வரும் மாணவர்கள் கண்டிப்பாக ஃபவுண்டேஷன் புரோகிராமில் படித்து முடித்த பிறகுதான் நிர்வாக நிலையில் சேர முடியும். இதுவே ஒரு மாணவர் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்திருக்கும் பட்சத்தில் அவர் நேரடியாக நிர்வாக நிலையில் படிப்பைத் தொடரலாம். நிர்வாக நிலையில் தேர்ச்சிப் பெற்றால்தான் தொழில்முறை நிலையில் சேர முடியும்.

இளநிலை பட்டப் படிப்பில் வணிகப்பிரிவும், முதுநிலைப் பட்டப் படிப்பில் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பிரிவும் எடுத்து தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு நிர்வாக நிலைப்பிரிவில் 3 தாள்கள் விலக்கு அளிக்கப்படுகிறது.

பொதுவாக நிர்வாக நிலைப்பிரிவில் தேர்வு எழுதும் மாணவர்கள் 6 தாள்களை எதிர்கொள்ள வேண்டும் ரூ.5 கோடிக்கு குறைவாக முதலீடு செய்து நடத்தப்படும் நிறுவனத்தில் நிர்வாக நிலையில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பணியில் சேர்ந்துகொள்ளலாம்.

இந்தப் படிப்பில் சேர பயிற்சிக் கட்டணம் எவ்வளவு?
ஆரம்ப நிலைப் படிப்புக்கான காலம் மொத்தம் எட்டு மாதங்கள். இந்தப் படிப்பில் சேர பயிற்சிக் கட்டணமாக ரூ.3,600 வசூலிக்கப்படுகிறது. நிர்வாக நிலைப் படிப்பு மற்றும் தொழில்முறை நிலைப் படிப்புகளுக்கான காலம் தலா 9 மாதங்கள். இதில் நிர்வாக நிலைப்பிரிவில் சேரும் மாணவர்கள் வணிகவியல் பட்டதாரிகளாக இருக்கும்பட்சத்தில் ரூ.7,000 கட்டணம். மற்ற மாணவர்களுக்கு ரூ.7,750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொழில்முறை நிலை படிப்புக்கு ரூ.7,500 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்தப் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் அளிக்கப்படுகிறதா?
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு குறைவாகவும், பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணத்திலிருந்து அனைத்துக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, ஆரம்ப நிலைப் படிப்புக்கு சேர்த்துக்கொள்ளப்படுவர். அதேபோல் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பில் 75 சதவீதமும், இளநிலை பட்டப் படிப்பில்

60 சதவீதம் எடுத்து தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு நிர்வாக நிலைப் படிப்பில் சேர முழுக் கட்டணமும் விலக்கு அளிக்கப்படுகிறது. ஸ்டூடண்ட் எஜூக்கேஷன் ஃபண்ட் டிரஸ்ட் மூலம் இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

இந்தப் படிப்பில் சேர அட்மிஷன் எப்போது?
வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் சேரும் மாணவர்கள் அந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு எழுதலாம். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சேரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறும் அடிப்படைத் தேர்வை எழுதலாம். பிப்ரவரி 28க்குள் எக்ஸிகியூடிவ் கோர்ஸில் சேருபவர்கள் அதே ஆண்டு டிசம்பரில் 2 பிரிவுகளும்,மே 31க்குள் சேருபவர்கள் அதே ஆண்டு டிசம்பரில் ஒரு பிரிவு மட்டும் தேர்வு எழுதலாம். ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் எக்ஸிகியூடிவ் கோர்ஸில் சேரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2 பிரிவுகளும், நவம்பர் 30க்குள் சேரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூனில் ஒரு பிரிவு தேர்வையும் எழுத முடியும்.

இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. ஆனால், குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும். இந்தியா முழுவதும் இந்தப் படிப்பில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் சேருகிறார்கள். ஆனால், இதில் முழுவதும் தேர்ச்சி பெறும் மாணவர்கள் வெறும் இரண்டாயிரம் மட்டுமே.

இந்தப் படிப்பு முடித்த பிறகு ஏதேனும் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறதா?
புரபஷனல் தேர்வை முடித்த மாணவர்கள், 16 மாத மேலாண்மை பயிற்சிக்கு (மேனேஜ்மெண்ட் டிரெயினிங்)செல்ல வேண்டும். அதற்குப் பிறகு இன்ஸ்டிட்யூட்டில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு அசோசியேட் கம்பெனி செக்ரட்டரி கோர்ஸ் முடித்ததற்கான சான்றிதழ் கிடைக்கும்.

பிராந்திய மொழியில் இந்தப் படிப்பை மேற்கொள்ள முடியுமா?
கம்பெனி செக்ரட்டரி படிப்பைப் பொருத்தவரை மாணவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் தேர்வு எழுதியாகவேண்டும்.

இந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு எப்படி?
சென்னை மண்டலத்தைப் பொருத்தவரை மொத்தம் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கு கொள்கின்றன. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயிலிருந்து7 லட்ச ரூபாய் வரை ஊதியத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 7 லட்சம் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், 30 ஆயிரம் கம்பெனி செக்ரட்டரி மட்டுமே பணியாற்றுகிறார்கள். அப்படியானால், இந்தப் பணிக்கான நபர்களின் தேவையை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல், 2015ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 5,000 நிறுவனங்கள் கிராமப்புறத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும் கண்டிப்பாக ஒரு கம்பெனி செக்ரட்டரி நியமிக்கப்படவேண்டியிருப்பதால், இந்தப் படிப்புக்கான தேவை இன்று இருப்பதைவிட எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக இருக்கும்.

ஸ்மார்ட் கிளாஸ்

மொத்தத்தில் புரியாத விஷயங்களும் புரியும்; தெரியாத தகவல்களும் வந்து குவியும். முன்பு பள்ளியில் மணிக்கணக்கில் படித்து, நாட்கணக்கில் ‘மக்’கப் செய்தாலும் புரியாத விஷயங்கள் இப்போதுள்ள வாண்டூஸ்களுக்கு பிரமாதமாக புரிகின்றன. காரணம், இன்டர்நெட். ஆம், பத்தாண்டுக்கு முன் அமெரிக்காவில், ஐரோப்பிய நாடுகளில் கொடிகட்டிப்பறந்த இந்த ‘ஸ்மார்ட் கிளாஸ்’ என்ற வகுப்பறை முறை, இப்போது இந்தியாவிலும் சிறிது சிறிதாக நுழைந்து கொண்டிருக்கிறது.

தனியார் பள்ளிகளில் எல்லாம் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறைக்கு முழு ஆதரவு தெரிவித்து விட்டன. அரசு பள்ளிகளிலும் ஓரளவுக்கு இதை ஏற்றுக்கொண்டாலும், இன்னும் கரும்பலகை, சாக்பீஸ் முற்றிலும் போகவில்லை. ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் மொத்தமாக கரும்பலகை, சாக்பீஸுக்கு குட்பை சொல்லும் காலம் வந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்.
அதென்ன ஸ்மார்ட் கிளாஸ்கம்ப்யூட்டர் உலகில் மிக முக்கியமானது ஸ்மார்ட் கார்டு, ஸ்மார்ட் கிளாஸ் போன்றவைதான். கதவை திறக்க நாம் போடும் சாவிதான் ‘ஸ்மார்ட் கார்டு’. வங்கியில் தரும் ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் இந்த வகையே. கணக்கில் இருந்து பணத்தை எடுக்க டோக்கன் வாங்கி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம் இப்போது. ஆளில்லா தானியங்கி மையத்தில் கார்டை செருகினால், நம் கணக்கில் இருந்து நள்ளிரவிலும் கூட பணத்தை எடுக்க முடிகிறது.

இதுபோலத்தான் ஸ்மார்ட் கிளாஸ். வகுப்பறை இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒரு மாணவன் படிக்க முடியும். பள்ளியில் வகுப்பறைக்கு வந்து ஆசிரியர் வருகைப்பதிவேடு எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் நெட்வொர்க் முறை பார்த்துக்கொள்ளும். ஒரு சயின்ஸ் பாடத்தை நடத்த வேண்டுமானால், எத்தனை முறை ஆசிரியர் கத்த வேண்டியிருக்கிறது? ஆனால், இதற்கு கம்ப்யூட்டர் இன்டர்நெட் மூலம் ஒரு வீடியோவை போட்டுவிட்டு உட்கார்ந்து விட்டால் போதும்; மாணவர்கள் அத்தனை பேருக்கும் புரிந்து விடும். அப்புறம் என்ன... அந்தப் பாடத்தில் எல்லாரும் நூற்றுக்கு நூறு தானே.

எந்த பாடமாக இருந்தாலும், அதை விஷூவல் ஆக விளக்கினால் புரியும் தானே... அதைத்தான் தருகிறது இன்டர்நெட் வழி ‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறை. கேரளா வரை வந்தாச்சு
பள்ளிக்கல்வியை முடக்கிப்போடுவது இந்தியாவில்தான் நடக்கிறது. வெளிநாடுகளில் பள்ளியில் படிக்காமலேயே சாதித்தவர்கள் உண்டு. கல்லூரியை பாதியில் விட்டு வெளியேறி சாதித்தவர்கள் உண்டு. சமீபத்தில் கேன்சருக்கு பலியான ஆப்பிள் ஐபேட் சாதனை மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ், கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்!
அவருக்கு கைகொடுத்தது தேடல். பாடங்களை ‘மக்கப்’ அடித்து சதம் போடுவதால் எந்த பலனும் இல்லை. புரிந்து கொண்டு, சாதிக்க துணிவதில்தான் ஒருவனின் வெற்றி, சாதனை உள்ளது. அதை இந்த நெட் வழி ‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறை சொல்லித்தருகிறது.

கேரளாவில் இப்போது இந்த முறை வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் இப்போதுதான் நுழைந்துள்ளது.
பலே யூத்ஸ்
இன்றைய யூத்களிடம் ஒரு நாளிதழை தந்தால் படிக்க சோம்பேறித்தனம் காட்டுவர். அதுவே கையில் மொபைல் மட்டும் இருக்கட்டும். நீங்கள் காபியை பக்கத்தில் வைத்துக்கொண்டு, பேப்பரில் படித்து  முடிப்பதற்குள், உலகின் மூலைமுடுக்கில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி துல்லியமாக உங்கள் பிள்ளை சொல்லி விடுவார். காரணம், அவர் கையில் இருக்கும் இன்டர்நெட் மொபைல் போன்தான்.
அந்த அளவுக்கு கையிடுக்கில் எல்லா விவரங்களையும் மொபைல் போனும், இன்டர்நெட்டும் அவர்களுக்கு நொடிக்கு நொடி புது தகவல்களை, புது அனுபவங்களை தருகிறது. அவர்கள் உலகம் மிகவும் வேகமானதுதான். ஆனால், நியாயமானது, நேர்மையானது. 


நோ ப்ராப்ளம்
உங்கள் குட்டீஸ் எப்போது பார்த்தாலும் மொபைலை நோண்டி, நுங்கெடுத்துக் கொண்டிருக்கிறாரா? விட்டு விடுங்கள். அதில் உள்ள விஷயங்களை உள்வாங்கி கொள்வதில் அத்தனை
ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை உணருங்கள்.
எதிர்காலத்தில் எல்லாமே ‘ஸ்மார்ட் கார்டு’ போல, பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’தான். இது யூத்களின் அடுத்த புரட்சி.
கரும்பலகை, சாக்பீசுக்கு முழு டாட்டா சொல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை.     

பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் நுழைய ஆசையா

பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் நுழைய ஆசையா.மத்திய அரசு சார்பில் சிறுபான்மை மாணவர்களுக்காக கீழ்க்கண்ட வகுப்புகள் இலவசமாக நடத்தபடுகிறது.

1.Video Editing
2.Mulitimedia
3.Animation 3 D
4.Digital Still Photography
5.Digital Videography6.Audio sound Engineering.

இவ்வகுப்புகளில் சேர குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும்.வயது 18 முதல் 35 வரை.சென்னையில் வரும் December 1,2 தேதிகளில் நேர்காணல் நடைபெற இருக்கிறது.இது குறித்த விளம்பரம் இம்மாத 27 தேதி அணைத்து தமிழ் பத்திரிக்கைகளிலும் வெளி வர இருக்கிறது.நேர்காணலுக்கு வருவோர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்(MARK LIST),மாற்று சான்றிதழ் (T.C),சாதி (COMMUNITY CERTIFICATE)சான்றிதழ்,வருமான சான்றிதழ் (INCOME CERTIFICATE),இரண்டு புகைப்படம் (PASSPORT SIZE)ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். CONTACT NFDC -044 28192506,28192407