Wednesday, 30 November 2011

சளி, ஜலதோஷம் – இந்த மழைக்காலத்தில் பரவ காரணம் என்ன?

Cold
Cold Virus
காலைல லேட்டா எழுந்தாலே முதல்ல இந்தப் பிரச்சினைதான் வரும். ஸ்கூல், காலேஜ், வேலைக்கு போறவங்க எல்லாரும் பரபரப்பா அப்போ தான் கிளம்பிட்டு இருப்பாங்க. அதனால, எல்லா வேலையும், வீட்ல வேகவேகமா நடக்கும். அந்த வேகத்தில குளிச்சா தலையைக் கூட ஒழுங்கா துவட்ட மாட்டோம்.
பொதுவாக மழைக்காலத்தில் ஜலதோஷத்திற்கு காராணமான கிருமிகள் ஏற்ற வெப்பநிலை அடையும். இதன் காரணமாக எளிதில் இக்கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும். நமக்குள் எளிதில் பரவவும் செய்யும்.
அப்படியே அந்த ஈரத்தலைல எண்ணெயைத் தேய்ச்சிடுவோம். அப்புறம் என்ன ஜலதோஷம்தான். தும்மல், இருமல், மூக்கடைப்பு, தலைவலின்னு எல்லாம் வரிசையா வரும்.
சரி, இந்த ஜலதோஷம் நமக்கு மட்டும்தான் வருதான்னு நீங்க ரொம்ப `பீல் (கவலை)’ பண்ணாதீங்க. அதைப் பற்றி சில தகவலை உங்களுkku நமது கல்வி களஞ்சியத்தில் வாயிலாக பதிவு செய்கிறது.
ஜலதோஷம்ங்கறது ஒருவித அலர்ஜி சம்பந்தமான நோய். இது வந்தா, 3 அல்லது 4 நாட்கள் வரை இருக்கும். இந்த நோய் உலகம் முழுவதும் பரவி இருக்குற நோய் தான்.http://www.kalvikalanjiam.com
மனிதர்களுக்கு `ரைனோ’ என்ற வைரசின் மூலம் ஜலதோஷம் உண்டாகுது.
இந்த நோய்க்கு நிவாரணம் இருக்கு ஆனால் குணப்படுத்தவல்ல எவ்வித சிகிச்சையும் இல்லை!!
இந்த வைரஸ் 130 டிகிரி செல்சியஸ் வரை உள்ள வெப்பநிலையை கூடத் தாங்குமாம். இதை முழுமையாக அழிக்க எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லையாம்.
ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எல்லாம் ஜலதோஷத்தால் உருவாகும் தலைவலியை மட்டும்தான் போக்குமாம்.

யஃஜூஜ், மஃஜூஜ், தஜ்ஜால்?


மனித சமுதாயம் படிப்பனை பெறுவதற்காக ஏராளமான வரலாறு சம்பவங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். கடந்த காலச் சம்பவங்களையும், இனி வரப்போகும் காலங்களில் நடபெற வேண்டிய செய்திகளையும் முன்னறிவிப்பாக சொல்கிறான்.
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிய செய்திகள் அனைத்தும் சத்தியமானவை. கதையோ கற்பனையோ அல்ல. சில செய்திகள் நம் சிற்றறிவிற்கு புலப்படாமல் போனாலும், படைத்த ரப்பிடமிருந்து வந்த உண்மை என்று விசுவாசிகள் அனைவரும் விசுவாசம் கொள்கிறோம். இது போன்ற சில சம்பவங்களை நம் அறிவிற்கு விளங்குமளவு அறிவியல் ஆதாரங்களோடு அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்கிறான்.
    ஒரு வரலாற்று சம்பவத்தை அல்குர்ஆனில் பார்ப்போம். அல்லாஹ்வின் நல்லடியார் துல்கர்னைன் பயணம் செய்கிறார். முதலில் சூரியன் மறையும் மேற்கு திசைக்கும் பின்பு சூரியன் உதயமாகும் கிழக்கு திசை பக்கம் செல்கிறார்.
    (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார். சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்தபோது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; ”துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்”” என்று நாம் கூறினோம்.
    (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்; ”எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.
பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்ைைல. அவர்கள் ”துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜுஜும், மஃஜுஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
அதற்கவர்; ”என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; ”நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் ”உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்”” (என்றார்).
எனவே, (யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை. ”இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள்தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார். அல்குர்ஆன் 18:83-98
யஃஜுஜு, மஃஜுஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள். அல்குர்ஆன் 21:96
இப்படியான ஒரு சமுதாயம் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் வருகிறது. 21 நூற்றாண்டு அறிவியல் கண்களுக்கு இன்னும் அவர்கள் தென்படவில்லை. தடுப்புச் சுவரை துளைத்து, உடைத்து அவர்களை அல்லாஹ் வெளியேற்றும் பொழுது உலகம் அவர்களால் பெரிதும் துன்பப்படும். இந்த விசித்திர குள்ளர்கள் நாம் வாழும் உலகிலேயே எங்கோ மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
  ஃபுளோரஸ் தீவில் விசித்திர குள்ளர்கள்
இந்தோனேஷியா கிழக்குப் பகுதியில் Flores என்ற ஒரு தீவு உள்ளது. இந்த தீவு மலைகளும் காடுகளும் எரிமலைகளும் நிறைந்த ஒன்று. இங்குள்ள கிராமத்தில் வயது முதிர்ந்த பெரியவர் நெல்லிஸ் குயா தனது மூதாதையர்கள் கூறியதாக சொல்லும் விசித்திர கதை.
 இந்த கிரமத்திற்கு அப்பால் உள்ள மலைகளுக்கு பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் கண்கள் பெரிதாகவும் உடல் முழுவதும் ரோமம் மூடியவர்களாகவும், ஒன்றும் விளங்கிக் கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள் என்றும், இவர்கள் அடிக்கடி தங்கள் கிராமத்திற்குள் புகுந்து பயிர்கள், உணவுப் பொருள், பழங்களை திருடிக்கொண்டு ஓடி விடுவார்கள். பெரும் பசிக்காரர்கள். எதையும் தின்பவர்கள். இக்குள்ளர்களை (Ebu gogo) எபு கோகோ என்று அழைப்பதாகவும் கூறினார். இதற்குப் பொருள் எதையும் தின்னும் தின்னிப்பாட்டி.
இது போன்ற கதை இந்தோனேஷியா கிராமங்களில் ஏராளமாய் உண்டு என்பதால் ஆய்வாளர்கள் இக்கதைகளை கற்பனை என ஒதுக்கித் தள்ளினர். ஆனால் 2003ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா வாழ்ந்த கிராமத்திலிருந்து 75 மைல் தொலைவில் ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு, மேற்கண்ட கதைகள் கற்பனையல்ல உண்மைதான் என அறிவித்து உலகத்தை வியக்க வைத்தது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா தொல் பொருள் ஆய்வுக் குழுவினர் டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட் தலைமையில் இவ் எலும்புக் கூட்டுடன் பல மிருகங்களின் எலும்புகளையும் 19 அடி ஆழத்தில் கண்டு பிடித்தனர். முதலில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று நம்பினர். ஏனெனில் மொத்த உயரமே மூன்று அடிதான். இறுதியில் விரிவாக ஆராய்ந்த பொழுது, இது வரை யாரும் அறியாத புதிய மானிட இனம் என்பதை அறிந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயதுடைய பெண்ணின் எலும்பாகும்.
இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோதான். மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும் சிக்கல் நிரம்பியதாகவும் காணப்படுகிறது. இக்கண்டு பிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்கள் மட்டுமே நுட்பமான அறிவு நிறம்பியவர்கள் என்ற கருத்துக்கு மாறாக சிறிய அளவுள்ள மூளையை உடைய இந்த சித்திரக்குள்ளர்கள் வேட்டையாடுதல் வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம் அறிந்தவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. இந்த 3 அடி பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
 இது பற்றி டாக்டர் ரிச்சட் ராபர்ட் கூறும் பொழுது மானிட வரலாற்றில் 18 ஆயிரம் என்பது சமீபமாக ஒன்று. இந்த புதிய இன குள்ள மனிதர்கள் இன்றும் கூட அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இப்புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறினார்.
முதியவர் நெல்லிஸ் குயாவின் கிராமத்தினர், இன்னும் இந்த விசித்திர குள்ளர்கள் மலைகளுக்கு அப்பால் வசிப்பதாக நம்புகின்றனர். இக்கிராமத்தினர் அனைவரும் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். விசித்திர குள்ளர்கலை Ebu Gogo என்று அழைப்பது  யஃஜுஜ், மஃஜுஜின் ஆங்கிலப் பெயரான Yahog, Magog வுக்கு நெருக்கமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இந்த சித்திர குள்ளர்கள் மனித இனத்தின் ஒரு பிரிவினர். இவர்களுக்கு Homo floresiensis என்ற பெயர் இடப்பட்டுள்ளது.
“யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:” என்பது நபிமொழி அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) நூல்: தப்ரானீ
இவர்கள் நூஹ்(அலை) அவர்களின் புதல்வர் ‘யாபிஸ்’ என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு சதம் என்றால் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் மட்டும் 90 சதம்.
    ‘இவர்கள் உயரம் ஒரு சான் அல்லது இரு சான் அதிகபட்சம் மூன்று சான்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்’ என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஹாக்கிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி நாளின்போது வெளிக்கிளம்பி வந்து பெரும் அட்டூழியங்களில் ஈடுபடுவர். ஃபத்ஹுல்பாரி, நூல்: புகாரி 7ம் பாகம் பக்கம் 573
“யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வரும்வரை நீங்கள் போராடிக்கொண்டே இருப்பீர்கள்; அவர்களின் முகம் அகன்றதாகவும், கேடயம் போல்(வட்டமாகவும்) கண்கள் சிறிதளவும், முடிகள் பட்டையாகவும் அமைந்திருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் நூல்கள்: அஹ்மத் தப்ரானீ
கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டின் முக அளவும் கிராம மக்களின் வர்ணிக்கும் ‘எபு கோகோ குள்ளர்களின் அமைப்பும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துல்கர்னைன் அவர்கள் பயனம் செய்த கீழ்திசை இரு மலைகள் சூழ்ந்த அமைப்பு, விளங்கிக்கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள், மேலும் எரிமலை குழம்பு நிறைந்த ஃபுளோரஸ் தீவில் இரும்புப் பாலங்களும் நெருப்பாக்குவதற்கு தேவையான மரங்கள் மற்றும் நிலக்கரியும் அங்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
“யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான், அவர்களில் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக் கண்டு அதன் நீரைப் பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும்போது (தண்னீர் இராது என்பதால்) அந்த இடத்தில் ஒரு சமயத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(அரழி) நூல்: முஸ்லிம்
இக்கூட்டத்தினர் வெளியாகும்போது மக்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்றளவுக்கு அனைத்தையும் தின்று தீர்த்து அநியாயம் செய்வார்கள். அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒரு மாட்டின் தலை இன்று என்ன பெறுமதியோ, அது அன்று நூறு தங்க காசுகளைவிட அதிக வெகுமதியாக இருக்கும்”
துல்கர்னைன் எழுப்பிய தடுப்புச் சுவர் இந்தோனேஷிய தீவுகளில் எதாவது ஒன்றில் இன்ஷா அல்லாஹ் இருக்கலாம். ஃபுளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடும் எலும்புக்கூடும் தரும் ஆய்வுச் செய்திகள், குள்ள மனிதர்கள் வேட்டையாடுவதில் சிறந்தவர்கள், கூர்மையான கற்கலால் ஆன ஆயுதங்களை கொண்டு ராட்சத பல்லி, முயல் அளவில் உள்ள காட்டெலி அன்று வாழ்ந்த குள்ள யானை போன்ற மிருகங்களை வேட்டையாடி வீழ்த்தியுள்ளார்கள். இவ்விடத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி கவனிக்கத்தக்கது.
(யஃஜுஜ், மஃஜுஜ் மடிந்தபின்) அவர்களின் அம்புகளையும், விற்களையும், அம்பாரத் தூளிகளையும் ஏழு ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் பயன்படுத்துவார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(ரழி) நூல்:திர்மிதீ
ஏழு ஆண்டுகள் விறகாக பயன்படுத்துமளவிற்கு அம்பாரக்கூடுகள் பெரும் எண்ணிக்கையில் இருந்தால் இக்கூட்டம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்தாலே இது சாத்தியம். மனிதன் கால்படாத ஏராளாமான காட்டு பிதேசங்கள் இன்றும் இந்தோனேஷிய தீவுகளில் உள்ளன. ஆகவே அறிவியல் சான்றுபடியும் கிராம மக்கள் வழிவழி கதைகள் மூலமும் அல்குர்ஆன் அல்ஹதீஸ் மூலம் அறியும்   யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் இந்தோனேஷிய தீவுகளில் இன்ஷா அல்லாஹ் வாழ்ந்து வரலாம். அல்லாஹ் அறிந்தவன். எது எப்படியோ 3 அடி குள்ள மனிதர்கள் ஆதம்(அலை) சந்ததிகள் என்ற குர்ஆன், ஹதீஸ் முன்னறிவிப்பு இன்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
 ஃபித்னாக்கள் புறப்படும் திசை கீழ்த்திசை
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வெளிக்கிளம்புவதற்கு முன்னதாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். தஜ்ஜாலைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் ஏராளமான செய்திகளை கூறியுள்ளார்கள். தஜ்ஜால் குழப்பவாதி, இனி புதிதாக பிறப்பவன் அல்ல. இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எங்கே என்ற கேள்விக்கு ஓரளவிற்கு ஹதீஸ்களில் பதில்கள் கிடைக்கவே செய்கின்றன.
    தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ‘ஷாம்’ பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கேதான் அவன் அழிவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
    வழிகெடுக்கக்கூடிய தஜ்ஜால் என்னும் ஒற்றைக்கண்ணன், மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் கீழ்த்திஸையில் தோன்றுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அஹ்மத்
நிராகரிப்பின் சிகரம் கீழ்த்திசையில் இருக்கிறது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஅத்தா
நிச்சயமாக இப்லீஸுடைய அரியாசனம் கடலில் இருக்கிறது. எனவே அவன்தான் படையினரை (இப்புவியில் குழப்பன் உண்டு பண்ண) அனுப்புகிறான். அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி) நூல்: முஸ்லிம்
அன்றைய அரபு மக்கள் தங்கள் வியாபாரத் தொடர்பாக தரை மார்க்கமாக சீனா, இந்தோனேஷியா, மலேசியா, மாலத்தீவு, இலங்கை, இந்தியா வரையிலும் சென்று வந்தனர். முன்பு கிருஸ்தவராக இருந்த தமீமுத்தாரி(ரழி) அவர்கள் இவ்வாறு 30 நபர்களுடன் புயலில் சிக்கி ஒரு தீபகற்பத்தில் கப்பலோடு ஒதுங்கினார். அப்பொழுது ‘ஜஸ்ஸாஸா’ என்ற ஒரு பிராணி அவர்களிடம் ‘நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்’ என்று கூறியது. அங்கு அவர்கள் ஒரு பருமனான மனிதனைக் கண்டார்கள். அவனைப்போன்று ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. இரண்டு கரண்டை கால்களுக்கும், முட்டுக் கால்களுக்கும் இரும்பினால் தலை சேர்த்து கட்டப்பட்டிருந்தான். பின்பு அவன் சில கேள்விகள் கேட்டான். இறுதியில் “நான்தான் தஜ்ஜாலாவேன் (இங்கிருந்து) வெளியேற விரைவில் அனுமதி வழங்கப்படலாம்” என்று கூறியதாக தமீமுத்தாரி(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினர். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள்
இவ்விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா? என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ‘ஆம்’ என்றனர். அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான். அல்லது யமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர்: ஃபாத்திமா பிந்த் கைஸ்(ரழி) நூல்: முஸ்லிம்
தஜ்ஜால் கடலில் உள்ள தீவுக்குள் தனி மடாலத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.
ஏமன் கடல் பகுதி. ஷாம் (சிரியா) கடல் பகுதி எல்லாம் மக்களால் அறியப்பட்ட பிரதேசங்கள். மேலும் இங்கு தீவுக்கூட்டங்கள் அதிகம் இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட கிழக்குத் திசையின் கடல் பகுதிகளில் ஏராளமான தீவுகளும், தீபகற்பங்களும் உள்ளன. இந்தோனேஷியாவில் உள்ள மொத்த தீவுகள் 13667. இதில் மனிதர்கள் வசிக்காத அடர்ந்த காடுகள் உள்ள தீவுகள் மட்டும் 6000க்கும் மேல். அதைத் தொடர்ந்துள்ள நமது அந்தமான் தீவுக்கூட்டங்கள் மனிதர்கள் எவரும் வசிக்காத தீவுகள் 265. மாலத்தீவில் மொத்தம் 2000, மனித நடமாட்டம் உள்ள தீவுகள் 199 மட்டுமே. ஆக ஏராளமான தீவுகள் மனிதப் பார்வையில் படாமல் உள்ளன.
    தஜ்ஜால் வருகையின் முக்கிய நோக்கம், தானே இறைவன் என வாதிட்டு மக்களை ஈமான் கொள்ளச் செய்து நரகில் தள்ளுவது. தஜ்ஜாலின் மூலம் இறைவன் மூஃமின்களுக்கு ஏற்படுத்தும் சோதனை கடுமையாக இருக்கும். ஃபித்னாக்களுக்கும் சுனாமி பூகம்பம் போன்ற சோதனைகளும் இந்தோனேஷியா தீவுகளை சூழ்ந்துள்ளது. அல்லஹ்வின் சோதனைக்கு காரணம் பெயரளவுக்கு முஸ்லிம்களாகவும் செயல்களில் மாற்று மதத்தினராக மாறிவிட்டதுதான். நாம் நம்முடைய செயல்களை அல்லாஹ்விற்கு பொருத்தமான முறையில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக உலகெங்கும் தனது அத்தாட்சிகளை வெளிப்படுத்துகிறான். அறிவுள்ளவர் தெரிந்து கொள்ளவும் திருந்திக் கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு.
    நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம். அல்குர்ஆன் 41:53
அல்குர்ஆன் வசனங்களையும் நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பான ஹதீஸையும் ஒப்பிட்டு இக்கட்டுரையை எழுதியுள்ளார். இதன் மிகத்துல்லியமான உண்மை நிலையை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
-Courtesy: ரீட் இஸ்லாம்-
விசித்திர குள்ளர்களைப் பற்றிய சமீபத்திய ஆய்வுகளை சில இனையதளங்களில் காணலாம்.
http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3960001.stmhttp://news.bbc.co.uk/1/hi/sci/tech/3948165.stm   http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4308751.stm
S.ஹழரத் அலி, ஜித்தா
நன்றி:காத்தான்குடி.இன்போ

"புராணங்களும் ராமர் கோவிலும்"-வருகிறது டிசம்பர் -6(கறுப்பு தினம்)


அஸ்ஸலாமு அலைக்கும்..!

சமுதாய உறவுகளே உங்கள் மீது இறைவனுடைய சாந்தியும்,சமாதானமும் நிலவட்டுமாக!

வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வருகை தந்தவுடன் இந்திய அடிமைத்தனத்திற்கு தள்ளப்படுகிறது. ஆம் வணிகம் என்ற பெயரில் ஆங்கிலேயர்களும், பிரிட்டிஸ்காரர்களும் இந்தியாவிற்கு வருகைதந்து தன்னுடைய கட்டுக்கோப்பில் இந்தியாவை மாற்றினார்கள். அதை போல எங்கிருந்தோ வந்த பார்பணர்கள் இந்தியாவின் ஒருமைபாட்டை சிதைக்க விரும்புகிறார்கள். இந்திய நாட்டின் சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கார் அவர்கள் நினைவு நாளான டிசம்பர் 6 அன்றுதான் ஒரு மதத்தின் பள்ளிவாசலை இடித்து சட்டத்தை தூக்கி எரிந்தார்கள் காவி பயங்கரவாதிகள். நடுநிலை கொண்டு இந்து சகோதரர்கள் இந்த கட்டுரையே படிக்கவேண்டுகிறேன்.

1992 என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது டிசம்பர் 6. அன்றுதான் இந்திய உலக அரங்கில் தலைகுனிந்த நாள்.430 ஆண்டுகாலம் வரலாற்று சிறப்பு மிக்க பாபர் பள்ளிவாசல் இடித்த நாள். உண்மையில் அந்த இடம் யாருக்கு சொந்தம்? வரலாற்றில் நடந்தது என்ன என்பதை முஸ்லிம்களாகிய நாமும், நமுடைய தொப்புள் கொடி உறவான மாற்றுமத சகோதரர்களும் நிச்சயமாக தெரிந்துகொள்ளவேண்டும். காரணம் சென்ற ஆண்டு (2010) செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய நீதிமன்ற வரலாற்றின் கருப்பு தினமாக அனுசரிக்கும் நீதியாக அலஹாபாத் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்தது. இந்த தீர்ப்பு ஒரு கட்டபஞ்சாயத்து தீர்ப்பு என்று ராஜேந்தர் சச்சார்,வழக்குரைஞர்கள் ராஜீவ் தவான்,அந்தி அர்ஜுனா,வரலாற்றாசிரியர் டி.என்.ஜா போன்றவர்கள் கூறினார்கள்.

உண்மையில் பாபர் பள்ளிவாசல் வரலாறு என்ன?

தனது பலவீனத்தை தோல்வியை தடுமாற்றத்தை பாபர் போல வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை. டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்குஅவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது.

இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதைதன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர். மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும்ஹிமாயூனுக்கு எழுதிய உயிலில் பாபர் கூறுகிறார்

இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். திரேதா யுகம் முடிவுக்கு வந்தது கிமு 3102 இல். திரேதா யுகத்தில்பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம், ஆனால் கிமு 700 க்கு முன்அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றே இல்லைஎன்கிறது அகழ்வாராய்ச்சி.

பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல்பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்.

ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்தமகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்.

அவனை அவனது சகோதர சகோதரிகளான லட்சுமணனும்சீதையும் பின்தொடர்வர் என்கிறது அந்த சாதக கதை

தந்தை இறந்த பிறகு வாரணாசிக்கே மீண்டும் வந்து சகோதரிசீதையை மணந்து ஆள்வான் ராமன். சமநிலை பிறழாதவன்என்பதுதான் அவனது சிறப்பு.

வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.

இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:

கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.

கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.

அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம். இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.

கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை. இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு. இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.

அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.

ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.

அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது. இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.

அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.

உ.பி.யில் உள்ள அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். ‘இராமர் பிறந்தது உ.பி.யில் உள்ள அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.

அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.

ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.

அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.

”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.

அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.

மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.

நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.

எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர். இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.

‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.

இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.

அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை. குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.

கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர் பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.

‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது. லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.

குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை? அதுபோல் எஸ்எஸ் ஐயர் என்ற ஹிந்து அறிஞர் எழுதிய ஆய்வுக்குறிப்பேட்டுபுத்தகத்தில் விக்ரமாதித்தன் எழுப்பிய திக்கவா, எர்நாக், சான்சி,பாம்ரா, நாச்னா போன்ற இடங்களை பட்டியலிட்டார். ஏழு அடுக்கும்84 கருப்பு கசவடி தூணையும் கொண்ட அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.

ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.

அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை. கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?

பாபரின் வடிவில் மரண தேவனை அனுப்பியிருப்பதாக தனது கிரந்தசாகிபில் வெளிப்படையாக எழுதியவர் சீக்கிய மதத்தை நிறுவிய பாபரின் சமகாலத்தைய குருநானக் அவரும் அயோத்திக்கு வந்து பாபர் மஸ்ஜித்தை பார்க்கிறார்.ஆனால் எங்குமே பாபர் ராமர் கோவிலை இடித்த்தாக சொல்லவில்லை. பயந்திருப்பார் என்று கூட சொல்லலாம். ஆனால் பாபர் இறந்து 9 ஆண்டு கழித்துதான் இறந்தார் குருநானக். அப்போது ஹிமாயூனோ ஒரு அகதியாக திரிந்தான்.

18 ஆம் நூற்றாண்டின் சிப்பாய் கலகம் துவங்கும் வரை அங்கு சைவமரபு தான் செல்வாக்கில் இருந்தது. இந்து அறிஞரான ஆர்.எஸ்.சுக்லாதனது சச்தித்தரர் பரமாணிக் இதிகாஸ் என்ற நூலில் 16 ஆம் பக்கத்தில் பாபர் 500 பிகாசு நிலத்தை அயோத்தி தாண்டதவான்குண்ட கோவிலுக்கு வழங்கியதை குறிப்பிடுகிறார். அதற்கானஆவணம் அக்கோவிலில் இன்றும் உள்ளது.

குவாலியரில் கோவில் சிற்பங்களை ரசித்ததை தனது சுயசரிதையான பாபர் நமாவில் குறிப்பிட்ட பாபர், ராமர் கோவில் இடிக்கப்பட்டதாக கருதப்படும் மார்ச் 1528 இல் அயோத்திக்கேவரவில்லை என்கிறார் அலகாபாத் பல்கலை வரலாற்றாசிரியர் சுசில் சிறீவத்சவா. அப்போது ஆப்கானிய பட்டாணியர்களுடன் போரிட்டு கொண்டிருந்தார் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைஆக்ராவில் தங்கி கார்டனிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.  அயோத்தியின் ஹனுமன் கோவில் மகாந்த் ரகுபர்தாஸ் என்பவர்தான் இன்றுள்ள கட்டுக்கதைக்கு மூலப்புள்ளி.

இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார். இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள், நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பிஎன் பாண்டே வழிகாட்டலில் செர்சிங் என்பவரது அகழவாய்வில் மசூதி குறித்த தகராறு 1855க்கு முன் இருந்தாக எந்த ஆவணமோ கல்வெட்டோ நூலோ இல்லை

பாபர் பள்ளிவாசல் கி.பி.1528 -ல் பேரரசர் பாபர் அவர்களின் கீழ் பணிபுரிந்த ஒரு படைத்தளைவர்ரான மிர்பாக்கி என்பவரால் கட்டப்பட்டது.ஆட்சியாளர் ஜவாங்கீர் அவர்கள் காலம் முதல்தான் இந்த பளிவச்ல் பாபர் பள்ளிவாசல் என்று அழைக்கப்பட்டது.

1855 -ல் பாபர் பள்ளிவாசல் முன்பு ராம் சாபுத்ரா ஒன்றிருந்தது என்று ராம பக்தர்கள் என்று கூறிக் கொண்ட ஒரு கூட்டத்தால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

1857 ல் பாபர் பள்ளிவாசல் முன்பாக சற்று தொலைவில் ஒரு இடத்தில் இந்துக்கள் பூஜா புனஸ்காரங்கள் செய்ய ஆரப்பித்தார்கள்.இதனால் முஸ்லிம்களுக்கும்,இந்துக்களுக்கும் பிரச்னைகள் வராமல் இருக்க ஆங்கிலேயர்களால் இரு இடத்திற்கும் நடுவில் சுவர் ஒன்று எழுப்பப்பட்டது.

1883 ல் மே மாதம் ராம் சாபுத்ராவில் இராமர் கோவில் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த திட்டம் வெற்றி பெறவில்லை.இதனால் 1885 ல் ஜனவரி 15 ல் ஜென்ஸ்தான் காப்பாளராக தன்னை காட்டி கொண்ட ரகுபீர்தாஸ்,பைசாபாத் கீழ் நீதிமன்றத்தில் ராம் சாபுத்ராவில் இராமர் கோவில் கட்ட அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.நீதியால் மறுக்கப்பட்டது.

1934 ல் பாபர் பள்ளிவாசலில் தொழுகையே நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்களையும் தாக்கினார்கள்.இவர்கள் தாக்குதல்களையும் தாண்டி தொடர்ந்து தொழுகையே நிறைவேற்றி வந்தார்கள். இந்த நேரத்தில் பாபர் பள்ளிவாசல் உண்மைகளை கூறும் கல்வெட்டுக்களை காவி தீவிரவாதிகள் பெயர்த்தெடுத்தார்கள்.

1940 இந்த பள்ளிவாசல் யாருக்கு சொந்தம் என்று அந்த பகுதியில் இருக்கும் முஸ்லிம்களாகிய சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கிடையே ஒரு வழக்கு தொடரப்பட்டது.இந்த பள்ளிவாசல் சுன்னி முஸ்லிம்களுக்கு சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.( குறிப்பு-இந்த தீர்ப்பில் இருந்து தெரிகிறது இந்த இடம் முஸ்லிம்களுக்கு சொந்தம் என்று.)

1949 ல் டிசம்பர் 23 ல் சுதந்திர இந்தியாவில் (காந்தியை சுட்டு சுடுகாட்டிற்கு அனுப்பிய)காவி பயங்கரவாதிகளால் இராமர் சிலைகள் வைக்கப்பட்டது. இஷா தொழுகை முடித்து மறுநாள் காலை சுப்ஹு தொழுகை வந்த முஸ்லிம்கள் இராமர் சிலைகள் கட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

1949 அன்றே முஸ்லிம்கள் காவல் நிலையம் சென்று புகார் செய்கிறார்கள். இந்த நிலையே அன்றைய பிரதமர் நேரு அவர்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.உடனே அந்த சிலைகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவு கொடுத்தார் பிரதமர். அனால் இதை கவனத்தில் கொள்ளாத அன்றைய உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை. அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய பகுதி'' என அறிவிக்கிறார்.
இதுதான் நடந்த வரலாற்று உண்மை.

எங்கிருந்தோ வந்த பார்பணர்கள் அன்று முதல் இன்று வரை பாமர இந்து சகோதரர்களை ஆழுமை செய்கிறார்கள். எந்த பார்பணரும் நேரடியாக போராடியது இல்லை. மனித நேயத்தின் அர்த்தமாக திகழ்ந்த சிறந்த மதவாதியும் , நடுநிலைவாதியுமான மஹாத்மா காந்தி அவர்களை ஈவு இரக்கமின்றி துப்பக்கியால் சுட்டு படுகொலை செய்த பார்பண தீவிரவாதிகள் கைகலில் ஒருபோதும் ஆட்சியே கொடுக்காமல் நமது இந்திய தேசத்தை பாதுகாப்போம்.

இந்து கிறித்துவ சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம். பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்.

உதவி - இஸ்லாமிய செய்திகள்
நன்றி:யாழ்முஸ்லிம் 

Tuesday, 29 November 2011

போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லைன் சர்வீஸ்

நாட்டின் மிக பெரிய லஞ்ச ஊழல் நடமாடும் வட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லைன் சர்வீஸ் 80% இன்று காலை முதல் செயல்ப்படும். மீதமுள்ள ஆன்லைன் சேவைகளூம் டிசம்பர் 3ஆம் தேதி முதல் செய்யபடும். ஒவ்வொரு RTO அலுவுலகத்திலும் இப்பொழுது என்ன நம்பர் சீர்யல் ஓடுகிறது TN - 13 - XX - XXXX , என்ன வி ஐ பி நம்பர் இருக்கிறது, லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன், உங்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்போதைய நிலமை, ஒவ்வொரு வாகனத்திற்க்கும் ரோடு டாக்ஸ் ஆன்லைனில் செலுத்துதல், கன்டக்டர் உரிமம் புதுபித்தல், புது வாகன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்ளிகேஷன், ஒட்டுனர் உரிமம் ரோடு டெஸ்ட் ஆன்லைன் அப்பயின்ட்மென்ட், மற்றூம் லோன் ஹைபோதிகேஷன் ஆர் சி புக்கில் இருந்து எடுக்க எந்த ஆர் டி ஓ ஆபிசுக்கு நீங்கள் செல்ல வேண்டும் மற்றூம் வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் டீட்டேயில்ஸ் எல்லாம் இனிமே நம் கையில், இனிமே புரொக்கர் வேண்டவே வேண்டாம், இந்த சேவை தான் நாம் எதிர்பார்த்த சேவை........... நாளை அல்ல்து நாளை மறு நாள் செய்திகளில் வரலாம் ஆனால் நீங்கள் இன்றே கலக்குங்கள்.

1.ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு - Learners License Online Application - http://tnsta.gov.in/transport/appointment.do?_tq=890d1045ac27d24cb2b1732731085482

2.தொடக்க வாகன பதிவு எண் - Today What Number Series in your RTO - http://tnsta.gov.in/transport/rtoStartNoListAct.do

3.வாகன வரி விகிதங்கள் - Tax Rates Details - Vehicle Wise - http://www.tn.gov.in/sta/taxtables.html

4.நிர்வாக எல்லை அறிய - Know your RTO by Postcode - http://tnsta.gov.in/transport/know_RtoLoad.do

5. ஓட்டுனர் உரிமம் டிரைவிங் லைசன்ஸ் ஆன் லைன் அப்பயின்ட்மென்ட் - Online Appointment Booking for Road Test - http://tnsta.gov.in/transport/appointment.do?_tq=51da2bc262553b8d4f4adb3a40eb2af1

6.பொது நிர்வாக விசாரிப்புகள் - General Enquiries - http://tnsta.gov.in/transport/contacts.do

நெஞ்சை நெகிழவைத்தது


தமிழ்நாடு - கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மோதி காளை மாடு இறந்தது. உடன் திரிந்த மாடு, இறந்த மாட்டை தலையால் முட்டி எழுப்பியதை பார்த்தவர்களின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு, இரண்டு காளை மாடுகள் ரோட்டில் முட்டி மோதி விளையாடித்திரிந்தன.அப்போது, பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த மாடுகளில், ஒரு காளை மாடு மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த மாடு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. உடன் இருந்த மாடு பெரும் சத்தத்துடன் சாலையில் விழுந்த மாட்டை தலையில் முட்டி எழுப்பியது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த மாட்டை மற்றொரு மாடு சுற்றி சுற்றி வந்து தலையால் முட்டி எழுப்பியது.மனிதர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், அந்த வழியே செல்வோர் பார்த்தும் பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில், கால்நடைகள் மனிதாபிமானத்துடன் உடன் வந்த மாடு இறந்ததை அறியாமல் முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள் நெஞ்சம் நெகிழந்தனர்.

விபத்தில் சிக்கிய மாடு இறந்ததால், உடன் வந்த காளை மாடு பெரும் சத்தம் போட்டு அந்த பகுதியில் வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்களை துரத்தியது. இதனால், அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில் இருந்து, காளை மாட்டை விரட்டி அடித்தனர். ஆனால், மாடு சிறிது தூரம் ஓடி சென்று அந்த பகுதியையே சுற்றி சுற்றி வந்தது. சாலையில் இறந்த காளை மாட்டை பொதுமக்கள் அகற்றினர்.

Monday, 28 November 2011

ஜெயலலிதா - உழைக்கும் மக்களின் முதல்வரா? உயர்சாதியினரின் தலைவரா?

1969 ஜனவரி 20 ஆம் நாள்...
உடல் நலிவுற்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அண்ணா. உற்சாகம் ததும்ப புன்னகை பூத்த முகத்துடன் மருத்துவமனையில் வந்து இறங்கிய அண்ணா, ஏராளமான புத்தகங்களுடன் உள்ளே நுழைந்தார்.
அங்கு அவர் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வகையில் ஏ.சி அறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரை அங்கும் இங்கும் அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி தயாராக இருந்தது. அமெரிக்காவிலிருந்தும் பம்பாயிலிருந்தும் புற்றுநோய் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அண்ணாவுக்கு என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்ற பதைபதைப்பில் தமிழக மக்கள் ஆழ்ந்தனர். மருத்துவமனையின் ஒவ்வொரு அசைவுகளையும் ஊடகங்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்தன.
திமுக பொருளாளர் சாதிக் பாட்சா தமது அறிக்கைகளின் மூலம் அண்ணாவின் நிலை பற்றிய அறிவிப்புகளை செய்து கொண்டிருந்தார். இத்தனை பரபரப்பும் பதற்றமும் சூழ்ந்து நிற்க அண்ணா மட்டும் அமைதியாக, தாம் கொண்டுவந்த புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தார்.
உயிர் போகும் வேளையில் கூட வாசிப்பை நிறுத்தாத அன்றைய முதல்வர் எங்கே..? உலகத் தரத்துடன் கூடிய ஒரு வாசிப்புச் சாலையை உருக்குலைக்க நினைக்கும் இன்றைய முதல்வர் எங்கே..?
புற்றுநோய் முற்றிய நிலையிலும் புத்தகங்களோடு வந்திறங்கி, மருத்துவமனையைக் கூட நூலகமாக மாற்றினார் அன்று அண்ணா! என்ன நோய் முற்றியதோ தெரியவில்லை, அந்த அண்ணாவின் பெயரால் அமைந்த அழகிய நூலகத்தை மருத்துவமனையாக மாற்றத் துடிக்கிறார் இன்று அம்மா!
"ஜெயலலிதா முதல் முறை ஆண்டபோது 'தடா' அரசு நடத்தினார்; அவர் இரண்டாவது முறை ஆண்டபோது 'பொடா' அரசு நடத்தினார்; இப்போது மூன்றாம் முறை ஆளும்போது 'தடாலடி' அரசு நடத்துகிறார்" என அண்ணா நூலக மீட்புப் போராட்டத்தின்போது சொன்னார் மக்கள் கவிஞர் இன்குலாப்.
ஜெயலலிதாவின் தடா அரசு, ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களையும், அரச பயங்கரவாத எதிர்ப்பு சக்திகளையும் சூறையாடித் தீர்த்த‌து. ஜெயலலிதாவின் பொடா அரசு, மதவெறி எதிர்ப்புப் போராளிகளையும், தமிழீழ ஆர்வலர்களையும் சிறையில் பூட்டி ரசித்தது.
இப்போது ஜெயலலிதாவின் தடாலடி அரசு, விளிம்பு நிலை மக்களின் அறிவு வளங்களை சிதைத்தும் அழித்தும் வருகிறது. ஆக மொத்தத்தில் எப்போதுமே ஜெயா அரசு, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிராகவே இயங்குகிறது.
கடந்த மே மாதம் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், கோட்டையில் இயங்கி வந்த செம்மொழி தமிழாய்வு நூலகத்தைச் சீர்குலைத்தார்; சமச்சீர் கல்விக்குத் தடை விதித்தார்; தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற நிலையை மாற்றினார்; அரசு இடத்தில் இயங்கி வரும் முத்தமிழ்ப் பேரவையை காலி செய்ய உத்தரவிட்டார்; அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்குவேன் என அறிவிப்பு செய்தார். ஜெயலலிதாவின் இத்தகைய ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னாலும் ஒரு பார்ப்பனீயச் சார்பும், இந்துத்துவ சாயலும் இருப்பதைக் காண முடிகிறது.
கல்வியும், கல்வியினால் கைகூடும் அதிகாரமும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களுக்கு எட்டாக் கனியாய் இருக்கின்றன. அடிப்படையிலேயே தரமான கல்வியைப் பெற்று, கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் உயர்சாதியினரே கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சமூக அநீதியைப் போக்கி, அனைத்துத் தரப்பினருக்கும் சமமான தரமான பள்ளிக் கல்வியை வழங்க வழிசெய்கிறது சமச்சீர்க் கல்வி.
காலங்காலமாக கல்வியிலும், அரசு மற்றும் தனியார்த்துறை வேலை வாய்ப்புகளிலும் மேலாண்மை செலுத்தி வரும் உயர்சாதியினரின் பொருளாதார வளமையினால் அவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து வாய்ப்புகளும் எளிதில் கிடைக்கின்றன. ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளின் வாசனையைக் கூட நுகர முடியாமல் கூலி வேலை செய்து பிழைத்து வரும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கு அறிவுசார் தளத்தில் எந்த வாய்ப்பும் எளிதில் கிடைப்பதில்லை. இத்தகைய ஏற்றத்தாழ்வு மிக்க நிலையை மாற்றி, நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், மின்விளக்குகள் வெளிச்சத்தில், உலகின் அரிய நூல்களை எல்லாம் கைகளில் ஏந்திய நிலையில், அமைதியாக அமர்ந்து படிப்பதற்கும் அறிவை வளர்ப்பதற்கும் விளிம்புநிலை மக்களுக்கு வரமாக வாய்த்திருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம்.
jayalalitha_cho_500
உயர்சாதிக் கலைஞர்களின் இசை அரங்கேற்றத்திற்கு ஒரு மியூசிக் அகாடமி இருக்கிறது. நாடகம் நடத்துவதற்கு ஒரு நாரதகாண சபா இருக்கிறது. நடனம் பயில்வதற்கு ஒரு கலாஷேத்ரா இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கலைகளைப் பயிலவும், அரங்கேற்றவும் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு விடையாக அமைந்ததுதான் முத்தமிழ்ப் பேரவை. இயல் இசை நாடகத் துறையில் தமிழ் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த கலைகளையும் கலைஞர்களையும் வார்த்தெடுக்கும் அரும்பணியை அப்பேரவை செய்து வருகிறது.
ஆக, சமச்சீர் கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம், முத்தமிழ்ப் பேரவை ஆகிய எளிய மக்களின் அறிவு வளங்களின் மீதுதான் ஜெயலலிதா தொடர்ச்சியாக கைவைத்துக் கொண்டிருக்கிறார். அவரது இத்தகைய அடாவடிகளை 'ஏதோ கருணாநிதி எதிர்ப்பு' என்ற வகையில் சுருக்கி விடுவதற்கு இங்கே எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் முயலுகின்றன. ஆனால், கருணாநிதி எதிர்ப்பு எனும் நிலையைத் தாண்டி ஒரு பார்ப்பனீய அஜெண்டாவை செயல்படுத்துவதற்கு அவர் முனைந்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி எவரும் இங்கே பேசுவதில்லை.
கருணாநிதி தொடங்கியதை எல்லாம் ஜெயலலிதா முடக்கி விடுவார் என்றால், மதுக்கடைகளை ஏன் முடக்கவில்லை? அண்ணா மேம்பாலம் முதல் அனைத்துப் பாலங்களையும் ஏன் உடைக்கவில்லை? அரசு பொது மருத்துவமனைக்கு கருணாநிதி சூட்டிய ராஜீவ் காந்தியின் பெயரை ஏன் மாற்றவில்லை? எனவே ஜெயலலிதாவின் அதிரடிகளுக்கு 'கருணாநிதி எதிர்ப்பு' மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அவரது ஒவ்வொரு அசைவிலும் பார்ப்பனீயம் மேலோங்கியிருக்கிறது.
'நான் படிக்கும் கல்வியை நீயும் படிப்பதா?' எனும் பார்ப்பனீய மனோபாவம்தான் சமச்சீர் கல்வியைச் சிதைக்கிறது. 'எனக்குச் சமமாக நீயும் வளர்வதா?' எனும் வெறுப்புணர்வுதான் முத்தமிழ்ப் பேரவையை சூறையாடுகிறது. 'எனக்குக் கிடைத்ததெல்லாம் உனக்கும் கிடைப்பதா?' எனும் ஆத்திரம்தான் அண்ணா நூலகத்தை நிர்மூலமாக்குகிறது.
இந்தக் காட்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே மறுபுறம் கிராமம்தோறும் சேரிகள்தோறும் ஆடு மாடுகளை இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. ஒடுக்கப்பட்டோரின் அறிவு வளங்களை அழித்து, அவர்களை மீண்டும் ஆடு மாடு மேய்க்கும் நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறார். இராஜாஜி கண்ட குலக்கல்வித் திட்டத்தின் நவீன வடிவம் தான், ஜெயலலிதாவின் இன்றைய நடவடிக்கைகள் என்பதில் சந்தேகமேயில்லை.
ஐஐடி வளாகத்தில் அமைந்திருக்கும் உயர்தர நூலகத்திற்குள் நுழைவதை, ஒரு சேரிச் சிறுவனால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வென்டின் வாசலைக் கூட, ஒரு ஏழை முஸ்லிம் மாணவனால் நெருங்க முடியாது. ஆனால், அண்ணா நூலகத்தில் சேரிச் சிறுவனால் நுழைய முடியும்; அங்கிருக்கும் அறிவுக் கருவூலங்களை அறிய முடியும்; உலக இலக்கியங்களோடு உறவாட முடியும். சர்ச் பார்க் கான்வென்டில் தரப்படும் உயர்தரக் கல்வியை, ஏழை முஸ்லிம் மாணவனால் சமச்சீர்க் கல்வியின் மூலம் பெற முடியும்.
இத்தகைய சமூகநீதிக்கு வேட்டு வைத்து, மீண்டும் மனுதர்ம ஆதிக்கத்தை நிலைநாட்ட ஜெயலலிதா முனைகிறார். அதனாலேயே சோவின், குருமூர்த்தியின், இராமகோபாலனின், தினமலரின் ஆதரவு மழையில் அவர் நனைகிறார்.

செருப்பு அடி வாங்கிய பத்து பிரபலங்கள்:ப்ளாஷ்பேக்


சமீபத்தில் ஹர்விந்தர் சிங் எனும் வாலிபர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமை தாக்கியதும் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவாரை தாக்கியதும் பரபரப்பாய் பேசப்பட்டது. இச்சூழலில் இந்நேரம் வாசகர்களுக்காக சமீப காலங்களில் பொதுமக்களிடத்தில் தாக்குதலுக்குள்ளான பிரபலங்களை பற்றிய ஒரு பிளாஷ் பேக்...


ஜார்ஜ் புஷ்


பொதுமக்களிடம் செருப்படி வாங்கிய கலாச்சாரத்தை துவக்கி வைத்த பெருமை அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷையே சாரும். தன்னுடைய ஆட்சிகாலத்தில் பொருளாதார தடை எனும் பெயரில் 6 இலட்சம் ஈராக்கிய குழந்தைகளை கொன்ற புஷ் செல்வாக்கிழந்திருந்தார். அச்சூழலில் விடை பெறும் பயணமாக டிசம்பர் 2008 ல் ஈராக் வந்த புஷ் பத்திரிகையாளர்களிடம் பேசி கொண்டிருந்த போது புஷ்ஷின் தவறான ஈராக்கிய கொள்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த முந்ததர் அல் ஜைதி எனும் பத்திரிகையாளர் புஷ்ஷை நாய் என்று திட்டியதோடு தன் 10 அளவு ஷூவை புஷ்ஷை நோக்கி வீசினார். குறி தவறிய போதும் நேரடி ஒளிபரப்பாக இருந்ததால் ஜைதி உலக புகழ் பெற்றதோடு ஈராக்கிய மக்களின் விடை கொடுக்கும் முத்தம் தான் தன் செருப்படி என்றார்.


ப.சிதம்பரம்


உலக அளவில் செருப்படி கலாசாரத்தை துவக்கி வைத்த பெருமை புஷ்ஷுக்கு என்றால் இந்தியாவில் நம்ம உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு அப்பெருமை சாரும். பத்திரிகையாளர்கள் சிபிஐ 1984 சீக்கிய கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லருக்கு எப்பங்குமில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்ததை பற்றி கேட்ட போது பதிலளிக்க மறுத்ததால் ஜர்னைல் சிங் எனும் பத்திரிகையாளர் தன் பாதணிகளை சிதம்பரத்தை நோக்கி வீசினார்


மன்மோகன் சிங்


அஹமதாபாத்தில் ஏப்ரல் 2009 தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் பேசி கொண்டிருந்த போது 21 வயது கணிப்பொறி இஞ்சினியரிங் படிக்கும் மாணவன் ஷூவை வீசினான். எவ்வித நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்று பிரதமர் பெருந்தன்மை காட்டியதும் பிஜேபியின் வெறுப்பு கலாசாரத்தை மோடி தூண்டி விட்டார் என்று காங்கிரஸ்காரர்கள் குறை கூறியதும் சுவையான காட்சிகள்.


பி.எஸ்.எடியூரப்பா


ஏப்ரல் 2009ல் கர்நாடகாவிலுள்ள ஹசன் எனும் இடத்தில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அவரை நோக்கி வீசப்பட்ட செருப்பு குறி தவறி அவரின் மேடையில் விழுந்தது. செருப்பு வீசிய 34 வயது நபர் கைது செய்யப்பட்டார்.


எல். கே. அத்வானி


அதே ஏப்ரல் 2009ல் மத்திய பிரதேசத்தில் ஒரு பொது கூட்டத்தில் பிஜேபி மூத்த தலைவர் அத்வானி பேசிய போது முன்னாள் பிஜேபி நிர்வாகி ஒருவர் அத்வானியின் மீது மர செருப்பை வீசினார். மேலும் வீசியவர் அத்வானி ஒரு போலி இரும்பு மனிதர் என்றும் பிரதமர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றும் கூறினார்.


ஒமர் அப்துல்லா


2010 ஆம் ஆண்டு சுதந்திர தின கொடியேற்றத்தின் போது காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா உரையாற்றிய போது பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் துறையை சார்ந்த ஒருவர் தன்னுடைய ஷூவை ஒமர் அப்துல்லாவை நோக்கி வீசினார். பின்னர் அவர் மன நிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டது.


சுரேஷ் கல்மாடி


மற்றவர்கள் பொது இடத்தில் அவமானப்படுத்தப்பட்ட போது காமென்வெல்த் ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடி தில்லியில் உள்ள சிபிஜ கோர்டில் ஷூவால் தாக்கப்பட்டார். மேலும் தாக்கியவர் இரும்பு கம்பியை கொண்டு கல்மாடியை தாக்க திட்டமிட்டார் என்றும் குற்ற பிண்ணணி உடையவர் என்றும் காவல்துறை கூறியது


எஸ்.பி.எஸ். ரத்தோர்


ருசிகா மானபங்க வழக்கில் குற்றவாளியான ஹரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர் நீதிமன்றத்தில் இருந்து தன்னுடைய காரை நோக்கி சென்று கொண்டிருந்த போது 29 வயது மாணவர் உத்சய் சர்மா மூன்று முறை அவர் முகத்தை குறு கத்தியால் கீறியது பரபரப்பை ஏற்படுத்தியது


பிரசாந்த் பூஷன்


நடத்தப்பட்ட சம்பவங்களிலேயே ஜனநாயக உரிமையான பேச்சுரிமை குறித்த விவாதத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியது. காஷ்மீரின் நிலை குறித்து முடிவெடுக்க காஷ்மீரிகளுக்கே உரிமை உண்டு என்று கருத்து தெரிவித்தமைக்காக இந்து வலது சாரி குழுக்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.


அர்விந்த் கேஜ்ரிவால்


பிரசாந்த் பூஷன் தாக்குதலுக்கு பின் சில நாட்கள் கழித்து அன்னா ஹசாரேவின் குழுவிலுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் லக்னோவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்தும் போது ஊழல் விவகாரத்தில் மக்களை தவறாக திசை திருப்புகிறார். என்று கூறி செருப்பை வீசினார். இது குறித்து கருத்து தெரிவித்த அன்னா ஹசாரே செருப்பை மட்டுமல்ல குண்டுகளை தாங்க தம் குழு தயார் என்றார்.