Sunday, 30 October 2011

அத்வானியின் ரத யாத்திரையை கண்டிக்கும் வகையில் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

புதுடெல்லி:இந்தியாவில் அதிகரித்துவரும் வகுப்புவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், முஸ்லிம்கள் மற்றும் இதர மத சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய-மாநில அரசுகளுக்கு டெல்லியில் நடந்த பாப்புலர் ப்ரண்டின் தேசிய நிர்வாக குழு கோரிக்கை விடுத்துள்ளது.

pfi
புதுடெல்லி:இந்தியாவில் அதிகரித்துவரும் வகுப்புவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், முஸ்லிம்கள் மற்றும் இதர மத சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய-மாநில அரசுகளுக்கு டெல்லியில் நடந்த பாப்புலர் ப்ரண்டின் தேசிய நிர்வாக குழு கோரிக்கை விடுத்துள்ளது.
உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்தராகாண்ட், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களில் முஸ்லிம்களுக்கு மீது நடத்தப்பட்ட வகுப்புவாத தாக்குதல்கள் குறித்த செய்திகளை பாப்புலர் ப்ரண்ட் சுட்டிக்காட்டியுள்ளது. சில மாநிலங்களில் புனித திருக்குர்ஆனை அவமதித்த சம்பவமும் நடந்தேறியுள்ளது. பெரும்பாலான சம்பவங்களில் போலீஸ் காழ்ப்புணர்வுடன் கலவரக்காரர்களுடன் இணைந்து செயல்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
அடுத்து வரவிருக்கும் மக்களவை தேர்தலை கருத்தில்கொண்டு பாசிச சக்திகள் நாட்டில் வகுப்புவாத பிரிவினைகளை உருவாக்கும் முயற்சி என கருதுவதற்கு நியாயங்கள் உள்ளன. ஊழல் ஒழிப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஊடுருவல், அத்வானியின் ரதயாத்திரை, நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் ஆகியன இந்த அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியாகும்.
வகுப்புவாத சக்திகளின் உணர்ச்சியை தூண்டும் செயல்பாடுகளுக்கு பலியாகாமல் மனித உரிமைக்கும், சமூகநீதிக்கும் ஜனநாயக வழிகளில் சக்திப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட சிறுபான்மை மக்களுக்கு பாப்புலர் ப்ரண்டின் நிர்வாக குழு கூட்டம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் நடந்த 16 குண்டு வெடிப்புகளில் ஹிந்துத்துவ சக்திகளின் பங்கிருப்பது குறித்து வெளியான செய்தி குறித்து நிர்வாக குழு கவலை தெரிவித்துள்ளது.
நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா சக்திகளின் பங்கு வெளியான பிறகும் அவர்கள் எழுப்பும் அச்சுறுத்தலை மத்திய-மாநில அரசுகள் சிறியதாக காண்பிக்கின்றன. சங்க்பரிவார அமைப்புகள் மீது நாட்டின் உளவுத்துறை ஏஜன்சிகள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரமாகும் இது. தற்பொழுதும் குண்டுவெடிப்பு வழக்குகளில் விசாரணையின் பெயரால் முஸ்லிம்களை வேட்டையாடும் போக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
1992 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளை குறித்தும் அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு நிர்வாக குழு கோரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 26,27 தேதிகளில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் சமூகநீதி மாநாடு குறித்து நிர்வாக குழு விவாதித்தது.
இக்கூட்டத்தில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய தலைவர் இ.அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். பொது செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் அறிக்கையை தாக்கல் செய்தார். முஹம்மது அலி ஜின்னா, மெளலானா உஸ்மான் பெய்க், பேராசிரியர் பி.கோயா, முஹம்மது ஷஹாபுத்தீன், முஹம்மது காலித் ரஷாதி, யாமுஹிய்யத்தீன், வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப், ஹாமித் முஹம்மது, இல்யாஸ் தும்பே, மெளலவி அஷ்ரஃப், ஒ.எம்.எ.ஸலாம், முஹம்மது ரோஷன், ஒ.எஸ்.இஸ்மாயீல் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆதார் அடையாள அட்டை பதிவு தொடக்கம்

ஆதார் அடையாள அட்டை பெற தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது.

இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள் பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும்இ மருத்துவத்துக்கும்இ மொபைல் போன் இணைப்பு பெறவும்இ இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும்.
அடையாள அட்டை பெற தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ராஇ சென்னையில் துவக்கி வைக்கித்தார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும் நவ. 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும். மேலும் நவ. 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும் அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாகஇ பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்துஇ மேலும் விவரங்களை அறிய 044-28582798, 0431-241245, 0452-2526398, 0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Friday, 21 October 2011

SDPI வெற்றி பெற்ற இடங்கள்

நெல்லை மேற்கு, பத்தமடை பேரூராட்சியில் 4 வது வார்டில் SDPI வேட்பாளர் அசன் காதர் வெற்றிபெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூராட்சியில் நான்கு வார்டுகளை sdpi கைப்பற்றியது

9 வது வார்டில் சையது ,

13 வது வார்டில் அப்துல் ஜப்பார் ,
14 வது வார்டில் ஆயிசா பீவி ,
15 வது வார்டில் முஹம்மத் ரபி ஆகியோர் வெற்றி
கோவையில் SDPI வெற்றி
கோவை மாநகராட்சி 82 வது வார்டு (கோட்டை மேடு) SDPI வேட்பாளர் முஹமது சலீம் 600 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் .

நெல்லை மேற்கு ,பூலங்குடி பேரூராட்சியில் sdpi வெற்றி

பூலங்குடி பேரூராட்சியில் 12 வது வார்டு sdpi வேட்பாளர் நாகூர் மைதீன் வெற்றிபெற்றுள்ளார்


திருச்சி சிறுகனூர் பஞ்சாயத்தில் SDPI வேட்பாளர் வெற்றி
திருச்சி சிறுகனூர் பஞ்சாயத்து 1 வது வார்டு SDPI வேட்பாளர் சகாப் தீன் வெற்றிபெற்றுள்ளர்


முத்துபேட்டையில் இரண்டு வார்டுகளை SDPI கைபற்றியது!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேருராட்சியில் SDPI வேட்பாளர்கள் 8 வது வார்டு பசரியம்மால் 9 வது வார்டு பாவா பக்ருதீன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்


திருப்பூர் வடுகன்காளி பாளையத்தில் sdpi வெற்றி
திருப்பூர் வடுகன்காளி பாளையம் 8 வது வார்டு sdpi வேட்பாளர் முஜிபுரஹ்மான் வெற்றி பெற்றுள்ளார்


திருப்பூர் அறிவொளி நகரில் sdpi வெற்றி
திருப்பூர் அறிவொளி நகர் பஞ்சாயாத்தில் 2 வது வார்டில் SDPI வேட்பாளர் ஜமீலா வெற்றிபெற்றுள்ளார்


செங்கோட்டை நகராட்சி வார்டில் sdpi வெற்றி
செங்கோட்டை நகராட்சி 21 வது வார்டு sdpi வேட்பாளர் செய்யது இப்ராகிம் வெற்றி பெற்றுள்ளார்


கடையநல்லூர் நகராட்சி வார்டில் sdpi வெற்றி
கடையநல்லூர் நகராட்சி 29 வது வார்டில் sdpi வேட்பாளர் நெய்னா முஹமது வெற்றிபெற்றுள்ளார்


தேவி பட்டினத்தில் sdpi வெற்றி
தேவி பட்டினம் பஞ்சாயத்து 4 வது வார்டு sdpi வேட்பாளர் ஷாஜகான் வெற்றிபெற்றுள்ளார்


தஞ்சை திருமங்கலங்குடியில் SDPI வெற்றி
தஞ்சை திருமங்கலங்குடியில் 4 வது வார்டு SDPI வேட்பாளர் ஜாகிர் வெற்றி பெற்றுள்ளார்


மதுரை கரிசல் பட்டியில் SDPI வெற்றி
மதுரை கரிசல்பட்டி பஞ்சாயத்தில் 4 வது வார்டு SDPI வேட்பாளர் அப்துல் ஜமீல் வெற்றிபெற்றுள்ளார்

15வது வார்டு நிலவரம்

15ஆவது வார்டு ஷாஜஹான் பீவி அதிமுக (சகோ.லத்திப் அவர்களின் சகோதரி) வெற்றி

14வது வார்டு நிலவரம்

திமுக சார்பில் போட்டியிட்ட NKSசரிஃப் வெற்றி

13வது வார்டு நிலவரம்


13வது வார்டு வேட்பாளர் காதர் திமுக வெற்றி

12வது வார்டு நிலவரம்

நூர்லாட்ஜ் செய்யது வெற்றி இவருடன் போட்டியிட்ட ஷம்சுல் இஸ்லாம் சங்க வேட்பாளர் ஹனீபா தோல்வியாடைந்துளார்

வார்டு எண்-3 & 4நிலவரம்

அதிரை உள்ளாட்சி தேர்தலில் 3&4-ஆவது வார்டில் அதிமுக வெற்றி.

வார்டு எண்-2 நிலவரம்

2 வது வார்டில் அ தி மு க உதயகுமார் வெற்றி குணசேகரன் தோல்வி அடைந்தார்

வார்டு எண்-1 நிலவரம்

அதிரை உள்ளாட்சி தேர்தலில் 1 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் திரு.அய்யாவு வெற்றி. இவரை எதிர்த்து ஆறுபேர் போட்டியிட்டனர். அவர்களில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் அடங்குவார்.

Thursday, 20 October 2011

இந்திய விசாரணைகளில் குறிவைக்கப்படும் முஸ்லிம்கள் – நீதிபதி மார்கண்டேய கட்ஜு

Justice Markandey Katju
புதுடெல்லி:இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் காவல்துறை முஸ்லிம்களை வேண்டுமென்றே சம்பந்தப்படுத்துவதாக சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காவல்துறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு இந்திய காவல்துறை தடயவியல் துறையில் மிகவும் குறைந்த அளவே பயிற்றுவிக்கப்படுவதால் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளை முடிக்கமுடியாமல் திணறுகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் உண்மையான குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சந்தேகிக்கும் நபரை கைது செய்து அவர்களின் மீது அவ்வழக்குகள் திணிக்கப்படுவதாக பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
மேலும் குண்டு வெடிப்புகளை ஆய்வு செய்ய போதுமான பயிற்சியும் அறிவியல் சாதனங்களும் இல்லாததால் அவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் செயல்படுகின்றனர் என்றும் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் அங்கு வசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களை கைது செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பெங்களுர் தகவல் தொழிற்நுட்ப வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் சமீபத்தில் நடந்த புது தில்லி குண்டு வெடிப்பு ஆகிய குண்டு வெடிப்புகளையும் சேர்த்து கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள அனைத்து குண்டு வெடிப்புகளிலும் இன்னும் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்கப் படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் கட்ஜு கூறியதாவது; ‘கைது செய்யப்பட முஸ்லிம்கள் குற்றத்தை ஒப்புகொள்ள கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர் என்று கூறியுள்ள அவர் குறிப்பாக கிராமப் புறங்களில் பணி புரியும் காவல்துறையினர் குற்றம் நடந்தவுடன் தாங்கள் உடனடியான குற்றவாளியை கைது செய்ததாக காட்டிகொள்வதற்காக இது போன்ற தவறுகளில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்றும் கூறினார்.
கடந்த 2006 -ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகள் கழித்து குற்றம் அற்றவர் என்று விடுதலையாகி இருக்கும் கஷ்மீரை சேர்ந்த இளைஞர் இம்ரான் கிர்மானிக்கு ஏற்பட்டிருக்கும் நீதி மறுப்பே இதற்கு சிறந்த உதாரணம் ஆகும் என்றும் கூறினார்.
மார்கண்டேய கட்ஜு தற்போது இந்திய பத்திரிக்கை கழகத்தின் தலைவராக உள்ளார். மேலும் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டால் தாம் மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறினார். மேலும் இவர் தலைமை நீதிபதியாக இருக்கும்போது அப்பாவி நபரை காவல்துறை என்கவுண்டர் என்ற பெயரில் கொலை செய்தால் அவர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் என்பதும் மற்றும் கௌரவ கொலைகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை !

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை !
RIGHT TO INFORMATION


திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை சம்பந்தமாக தொடர்ந்து முயன்று கொண்டிருக்கும் இருக்கும் இத்தருணத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் நமக்கு கிடைத்த நல்ல செய்தி யாதெனில் , திருவாரூர் - காரைக்குடி திருத்துறைபூண்டி மற்றும் அகஸ்தியன்பள்ளி மார்க்கங்களுக்கு பூர்வாங்க ஏற்பாடுகள் தயாராகியுள்ளது தெரியவருகிறது.



மேற்கண்ட அகல ரயில் பாதைத் திட்டம் எப்போது நிறைவேறும் என்று கேட்டறிந்தோம். அதற்குப் பதில் அளித்துள்ள இரயில்வே நிர்வாகம், மேற்கண்ட திட்டம் முடிவுறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் திட்டம் குறுப்பிட்ட பாதையில் முறையாக சென்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.


மேலும் , தற்போதுள்ள மீட்டர் கேஜ் அகற்றும் பணிக்காக டெண்டர் கோரி இன்று THE HINDU பத்திரிக்கையில் விளமபரமும் வந்துள்ளது. இதன் மூலம் மேற்சொன்ன பதிலுக்கு உத்தரவாதம் அளிதாற்போல் உள்ளதை உணர முடிகிறது.



மற்றுமொரு ஒரு முக்கியமான தகவல் , கணினி மூலம் பதிவு செய்யும் டிக்கெட்டுகளை இனிமேல் பிரிண்ட் எடுக்க தேவையில்லை. உங்கள் கைபேசி ( பிரயாணம் செய்யும் நபரின் கை பேசி )க்கு SMS மூலம் வரும் தகவலை காண்பித்தால் போதும். இது மக்களிடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது .


இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் நமது அகல ரயில் பாதை திட்டம் நிறைவேறும் என்று நம்புவோமாக !


 

Wednesday, 12 October 2011

திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு!!



மனித நேய மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் அப்துல் அக்கீம், இன்று திருச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

சங்கம் ஹோட்டலில் நடந்த இந்த சந்திப்பில் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் அவருடன் வந்திருந்தனர். மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டனர்

ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களுடன் ஒரு சிறை அனுபவம் .

“நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனதுதான் என்னுடையது. இந்த உலகத்தில் நீங்கள் சுவர்க்கமாகக் கருதும் எப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் நான் எனது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாரில்லை. உங்களால் நரகமாக்கப்பட்ட இந்தப் பூமிதான் எனக்கு, உங்களது சுவர்க்க பூமியைவிட மிகவும் விருப்பத்திற்குரியது.”…….
உடலைப் பலவீனப்படுத்தும் நோய்களையும் யூத வெஞ்சிறையில் கொடிய சித்திரவதைகளையும் பொருட்படுத்தாமல் பிறந்த மண்ணிற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் உயிர் நாடியாகத் திகழ்ந்த அஹ்மத் யாஸீன் அவர்களுடன் சிறையில் ஐந்து மாதங்கள் உடனிருந்து சேவை புரிந்த சிறைத்தோழர் முஹ்ஸின் அபூ அய்துவா அவர்கள் அந்த வீரத்தியாகி மரணமடைந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவருடனான சிறை அனுபவ நினைவலைகளை பத்திரிகை உல கோடு பகிர்ந்துகொள்கிறார்.

பதற்றப்படாத உள்ளமும் வார்த் தைகளால் விபரிக்க முடியாத துணிவும் கொண்ட ஒரு மாமனிதரின் முன்னால் நிற்கிறேன் என்ற எண்ணம் எனக்கு பல முறை ஏற்பட்டதுண்டு. உடல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தா லும் அவருடைய சிந்தனைகளுக்கோ அறிவுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்பட வில்லை. தெளிவான சிந்தனைகளும் சீரிய பார்வையும் அவரை பிற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இஸ்லரேலியக் கொடூரங்கள் அக்கிரமமான ஏகாதிபத்திய ஆசைகள் ஆகியவற்றின் அஸ்திவாரத்தை தகர்த் தெறிவதுதான் அவருடைய உறுதியான சிந்தனையாக இருந்தது. இதுதான் அவரை பிற தலைவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தியது.

இதுவரை கண்டிராத இடையாராத போராட்ட வீரியம் கொண்ட உருக்கு மனிதராக ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்கள் திகழ்ந்தாலும் ஒரு மலரின் தூய்மையைப் போன்றவர் அவர். அதிசயிக்கத்தக்க குணநலன்களைக் கொண்ட அந்த மனிதரையும் தங்களுக்கேற்பட்ட அவமதிப்பிற்கு (பலஸ்தீன் பூமியை இஸ்ரேல் அபகரித்தது) செங்குருதியால் பதிலளிக்கும் அவர்களு டைய தோழர்களையும் பற்றி வார்த்தைகளால் விபரிப்பது எங்களது மொழி யில் முடியாத ஒன்று. ஆனாலும் முன்னோர்களைப் பற்றிய நினைவலை களை அவர்களைப் பின்தொடர்வோர் தங்களது நாவின் மூலம் உயிர்ப்பிப்பது அவர்களுக்கு செய்யும் செஞ்சோற்றுக் கடனாகும்.

* தங்களுடைய கட்டுரைகளில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத துணிவு கொண்ட ஒரு மாமனிதர் என்று ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களை நீங் கள் குறிப்பிடுகிறீர்கள். உங்களது ஐந்து மாத சிறை வாழ்க்கையில் இத்தகைய உவமையைப் போன்று ஏதேனும் நிகழ்வுகளை அவரிடம் கண்டீர்களா?

இது சம்பந்தமாக நான் கூற விரும்புவது என்னவென்றால் ஷெய்க் அஹ் மத் யாஸீன் அவர்களைப் பற்றி அவர் களுடைய ஆதரவாளர்களும் நண்பர் களும் கூறுவதைவிட அவர்களின் எதிரிகள் கூட ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர் களின் நெஞ்சுறுதியையும் அவர்கள் தாம் கொண்ட இலட்சியத்தில்- வார்த்தை களால் விபரிக்க முடியாத உறுதியையும் அங்கீகரித்தார்கள். இது சம்பந்தமாக அவர்களுடனான இரண்டு அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கி றேன்.

நானும் ஷெய்க் அவர்களும் செய்த குற்றத்தின் விசாரணை நாடகத்திற்குப் பின் நாங்கள் இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்படவேண்டுமென்ற தீர்ப்பை நான் அறிந்தேன். ஷெய்க் அவர்களின் அருகாமை எனக்கு மகிழ்ச் சியை ஏற்படுத்தியது. ஆனாலும் நோயா ளியான ஒரு மனிதருக்கு சிறைத் தண்டனை அளித்ததை அறிந்து நான் நிலைகுலைந்தேன், சிறைஅதிகாரி யோடு நான் வாதிட்டேன்.

“வயோதிபரான ஒரு நிரபராதியை சிறையில் அடைக்கும் அளவுக்கும் மனி தத் தன்மை இழந்தவரா நீங்கள்?” என்று நான் கேட்டபோது அந்த நபர் இவ் வாறு பதிலளித்தார். “உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து நடக்கக் கூட இய லாத இந்த மனிதரை இனியும் சிறையில் அடைத்து எங்களுக்கு என்ன பயன்? நாங்கள் அவருடைய மூளையையும் கேடுகெட்ட அறிவையும் தான் சிறைவைக்கிறோம்”.

ஷெய்க் அவர்களை உடல்ரீதியாக சித்திரவதை செய்வதைக் கண்டு பொருக்க இயலாத நான் அந்த சிறை அதிகாரியிடம் கேட்டேன், “எதற்காக அந்த நோயா ளியான மனிதரை துன் புறுத்துகிறீர்கள். ஒரு ஊனமுற்றவரை அடித்து துன்பு றுத்துவதன் மூலம் உங்கள் வீரத்தை வெளிப்படுத்துகின்றீர்களா?” என்று. அதற்கு அந்த சிறை அதிகாரி கூறினான், “யார் கூறினார் இவர் நோயாளி என்று. அவருடைய தலையும் மூளையும் ஆரோக்கியமாக வல்லவா இருக் கின்றது” என்று.

சுருக்கமாகக் கூறினால் தான் கொண்ட இலட்சியத்திற்காக எந்த எல்லை வரை செல்லவும் எத்தகைய சித்திரவதைகளையும் தாங்கவும் உறுதிபடைத்த ஷெய்க் அவர்களின் தியாக மனநிலையை எதிரிகள்கூட அங்கீக ரித்தார்கள் என்பதுதான்.

* ஏதேனும் காரியங்களுக்காக ஷெய்க் அவர்களை எதிரிகள், பயமு றுத்தல், சித்திரவதை செய்தல் போன்ற தந்திரங்களைப் பயன்படுத் தியதை உங்களால் நினைவுகூற இயலுமா?

முடியும் என்பது மட்டுமல்ல. ஒன்றிற்கு மேற்பட்ட தடவை சிறை உயரதிகாரி களின் விலை குறைந்த மிரட்டல் தந்திரங்களையும் கேடு கெட்ட ஆசை வார்த்தைகளையும் ஷெய்க் அவர்கள் சந்தித்ததுண்டு. ஹமாஸ் போராளிகள் கடத்திச் சென்ற ஈலாத் ஸெய்பூன் என்ற இஸ்ரேலிய இராணுவ வீரனைப் பற்றிய விபரமளிக்க வேண்டி சிறை அதிகாரிகள் ஷெய்க் அவர்களை நிர்ப்பந் தப்படுத்தினார்கள்.

ஷெய்க் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்துமா றும் அவ்வாறு செய்தால் உலகத்தில் அவர் விரும்பும் எந்தப் பகுதியிலும் சுகபோகமாக வாழ்வதற்கு ஏற்ற வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் காட்டினர். ஆனால், எவராலும் அழிக்க இயலாத மன உறுதியுடன் பளிச்சிடும் உறுதியான வார்த்தைகளால் ஷெய்க் அவர்கள் அளித்த பதில் ஒவ்வொரு பலஸ்தீன சகோதரனும் மன தில் பூட்டிப் பாது காக்க வேண்டியவை.

“நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அடக்கம் செய்யப்படவேண்டுமென்று எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனதுதான் என்னுடையது. இந்த உலகத்தில் நீங்கள் சுவர்க்க மாகக் கருதும் எப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் நான் எனது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாரில்லை. உங்களால் நரகமாக்கப்பட்ட இந்தப் பூமிதான் எனக்கு, உங்களது சுவர்க்க பூமியைவிட மிகவும் விருப்பத் திற் குரியது.

சிறைக்கு வெளியேயுள்ள ஓர் அனுபவத்தைக் கூறுகிறேன். சில அமெரிக்க அறபு தலைவர்கள் இஸ்ரேல் உலவுத் துறை வட்டாரங்களின் சதித்திட்டங் களைப் பற்றிய இரகசியத் தகவலை அளித்தார்கள். ஷெய்க் அவர்கள் அமெ ரிக்காவின் உதவிக்கு இவ்வாறு பதில ளித்தார்கள்: “எவரும் எனக்காக வருந்த வேண்டிய தேவையில்லை. தற்காப் புப் போரைப் பற்றிய பூரண அறி வோடுதான் நாங்கள் இந்தப் பணியை ஏற்று செயல்படுத்தத் துவங்கியிருக் கிறோம். நாங்கள் இப்பணியைத் துவக் கிவைத்தது சொந்த நாட்டிற்காக இரத்த சாட்சிகளாக மாறத்தான்”.

தொடர்ந்து அவர் கூறிய வார்த்தைகள் யூத ஸியோனிஸ்டுகளின் காதுகளில் இடிமுழக்கமாக இறங்கக் கூடியவை. பலஸ்தீனிலுள்ள பிஞ்சுக் குழந்தைக ளின் குருதியா உங்கள் வயிற்றுக்கு விருப்பமானது? என்னை மட்டும் எதற் காக இந்தப் பூவுலகில் மீதம் வைத்துள்ளீர்கள்? பிறக்கும் பொழுதே கஷ்டங் களைத் தாங்குவதற்கு விதிக்கப்பட் அந்தக் குழந்தைகளின் ஆன்மா வைக் காட்டிலும் என்னுடைய ஆன்மாவிற்கு மதிப்பொன்றுமில்லை.

நீங்கள் என்னைத்தான் கொல்ல முயல்கின்றீர்கள் என்றால் அதற்காக நீங்கள் சிரமப்படத் தேவையில்லை. உங்கள் இலக்கு நானென்றால் அது ஒருபோதும் தவறாது. என்னுடைய ஒவ்வொரு நகர்வும் எல்லோரும் அறி யும் விதமாகப் பகிரங்கமானது. உங்களுடைய கரங்களால் கொல்லப்பட வேண்டும் என்பதே எனது இறுதி இலட்சியம்.

நாங்கள் நெஞ்சுறுதியின் உடன் பிறப்புக்கள். போராட்டத்தின் தீப் பிழம்புகள் சிதறும் தலைமுறையின் உற்ற நண்பர்கள். தன்மானத்தின் பாதுகாப்பிற்கா கத்தான் போர் செய்யும் உறுதி பூண்டிருக்கிறோம் என்று அமெ ரிக்க அறபு லகத்தோடு கூறுங்கள்.

* தன்னைப் பீடித்திருக்கும் நோய்களோடு ஷெய்க் அவர்கள் எவ்வாறு சிறைக் கொட்டகையில் மன ரீதியான, உடல் ரீதியான சித்திர வதைகளை எதிர் கொண்டார்கள்?

உண்மையில் என்னவென்றால் ஒருநாள் கூட ஷெய்க் அவர்கள் தனக்கு ஏற் படும் சிரமங்கள் குறித்து குறைபட்டுக் கொள்ள மாட்டார்கள். தன்னைப் பின் தொடரும் நோய்களுடனேயே எப்பொழுதும் உதட்டில் புன்சிரிப் போடும் இருப்பார்கள். வெறுப்பு அல்லது பொறுக்க இயலாத தன்மையின் ஒரு அம்சம்கூட அவர்களின் ஜொலிக்கும் முகத்திலோ அல்லது அமைதியான வார்த்தைகளிலோ வெளிப்படாது.

அலை அடங்கிய கடல் போன்ற உள்ளமும், சாந்த கம்பீர முகமும்தான் அவர் களுடைய அடையாளம். உதடுகள் எப்பொழுதும் பிரார்த்தனையிலேயே இருக்கும். அல்குர்ஆன் தான் அவர்களுடைய மொழி. அதன் காரணமாகத் தானோ என்னவோ அவருடைய மார்க்க-அரசியல் நிலைப்பாடுகளில் ஒரு போதும் பிழைகள் நிகழாதது. அதேபோலவே அவர் சோதனைகளை உறுதி யோடு எதிர்கொண்டதும் என்று என்னால் கூற இயலும்.

ஜமாஅத்தாக தொழுவதற்குக் கூட இயலாத ஒரு குறுகிய இடத்தில்தான் நானும் ஷெய்க் அவர்களும் இன்னொரு சகோதரரும் அடைக்கப்பட்டிருந் தோம். வடக்கு பலஸ்தீனில் ஒரு மறைவான தரக்குறைவான சிறைக் கூட மாக இருந்தது அது. உடம்புகளிலுள்ள எழும்புகளைக்கூட துளைக்கும் கடும் குளிர் நிலவும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் போர்த்துவதற்கு ஒரு போர்வைகூட இல்லாமல் அந்த நோயாளியான வயோதிப மனிதர் கழித்தது, ஐந்து மாதங்கள். ஒலிவ் மரங்கள்கூட குளிர்ந்து விறைத்துப் போய் நிற்கும் அந்தத் துன்புறுத்தும் இரவுகளில் கதவுகள்கூட இல்லாத இரும்பு ஜன்னல் களைக் கொண்ட அந்தக் குறுகிய அறையில் தங்குவதற்கு நேர்ந்த பிறகும் ஷெய்க் அவர்கள் எந்தக் குறைகளையும் முறையிடத் தயாரானதில்லை.

அதுமட்டுமல்ல, அந்தச் சிறையில் எங்கள் மூன்றுபேரைத் தவிர மற்ற அனை வருக்கும் போர்வை வழங்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் யூதர்கள். இதுபற்றி நான் ஷெய்க் அவர்களிடம் “பிற சிறைக்கைதிகளுக்கு போர்வை வழங்கப்பட் டுள்ளது, நமக்கு வழங்கப்படவில்லை. இதனைக் கேட்பது நமது உரிமையல் லவா? என்று கேட்டேன். அதற்கு ஷெய்க் அவர்கள் அளித்த பதில், நாம் வசிப் பது சிறைக் கூடத்தில், நட்சத்திர ஹோட்டலிலல்ல.

இன்னொரு சூழலில் சிறைக் கைதிகளிடம் காட்டுமிராண்டித்தனமான முறை யில் நடந்துகொள்ளும் ஸியோனிஸ்டுகளின் மறுக்கும் நட வடிக்கைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு ஷெய்க் அவர்களிடம் ஒப்புதல் கேட்ட பொழுது ஷெய்க் அவர்கள் கூறினார்கள், “நாம் இருப்பது சிறைக்கூடத்தில். மனிதத் தன்மையை இழந்துவிட்ட எதிரிகளிடம் உரிமை யைக் கோருவது என்பது முட்டாள்த்தனம் என்பதைத் தவிர வேறு என்ன? நீங்கள் உண்ணாவிரதம் இருந்துகொள்ளுங்கள். அதில் நான் கலந்துகொள்ள மாட்டேன்” என்று.

* விசாரணைகளை ஷெய்க் அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்?

விசாரணையின்போது ஷெய்க் அவர்களைப் பின்தொடர எங்களுக்கு அனுமதி யில்லாததால் விசாரணைக் கூண்டில் ஷெய்க் அவர்களின் பதில் எவ்வாறு இருந்தது என்பதை அறிய எங்களால் இயலாதுபோனது. ஆனாலும் விசார ணைக்கு முந்திய இரவில் ஷெய்க் அவர்கள் பூரணமாக விசாரணைக்குத் தயாராவார்கள். தன்மானம் ஜொலிக்கும் முகத்தைக் கொண்டவர்களாக ஷெய்க் அவர்கள் அவ்வேளை களில் திகழ்வார்கள்.

கடினமான மூலநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அதிகமான இரத்தம் வெளி யாகும். மேலும் பொறுக்க இயலாத வேதனையும் அவர்களுக்கு ஏற்படும். இதனால் அவர்கள் சில மாத்திரைகளை உட்கொண்ட பிறகே விசாரணையை சந்திக்கச் செல்வார்கள். அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பிறரின் உதவி தேவைப்படும். ஷெய்க் அவர்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் எதிரிகளிடம் தனக்கு உதவி புரிய அனுமதித்ததே இல்லை.

விசாரணைகளுக்கு முந்திய நாளே பிறரின் உதவி இல்லாமல்தான் இந்த மாத்திரைகளை உட்கொள்வார்கள். அல்லாஹ்வின் எதிரிகளிடமிருந்து ஒரு மிடர் தண்ணீர்கூட வாங்கிக் குடிக்காமல் இருப்பதற்கு விசாரணை தினங்க ளில் நோன்பிருக்கும் ஷெய்க் அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

* ஐந்துமாத சிறையனுபவமானாலும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாட்க ளில் மனதைப் பாதித்த ஏதேனும் நிகழ்வுகள் பற்றிக் கூற இயலுமா?

ஐந்து மாதம் ஷெய்க் அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்ததை நான் மிக பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தக் காலக்கட்டத்தில் மறக்கவிய லாப் பல சம்பவங்களும் நடந்தது. ஒரு நாட்காலியில் அமர்ந்து கட்டி லில் சாய்ந்துகொண்டுதான் ஷெய்க் அவர்கள் குர்ஆனை ஓதவும், சிறையில் அபூர்வ மாகக் கிடைக்கும் நூல்களையும் படிப்பார்கள். நூல்களின் பக்கங்களைப் புரட்ட சைகை காண்பிக்கும்பொழுது நான் அதனைப் புரட்டிக் கொடுப்பேன்.

ஒருமுறை நான் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாலும் களைப்பா லும் தூங்கிப் போனேன். திடீரென நான் தூக்கத்திலிருந்து விழித்தபோது நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. ஷெய்க் அவர்கள் நூலின் பக்கத்தைப் புரட்ட தலையை அசைத்தவாறு தலையையும் நெஞ்சையும் புத்தகத்தின் அருகில் கொண்டு வந்து நாக்கை வெளியில் நீட்டி அதனால் புத்தகத்தின் பக்கத்தைப் புரட்ட முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். இது ஒருபோதும் மறக்கவியலா நிகழ்ச்சியாக இருந்தது.

அக்காட்சியினால் துக்கமும் குற்ற உணர்வும் ஆச்சரியமும் உள்ளத்தில் தோன்றவே நான் ஷெய்க் அவர்களிடம் கேட்டேன், ஏன் உதவிக்கு என்னை எழுப்பவில்லை?

அதற்கு ஷெய்க் அவர்கள் கூறியபதில் அவர்மீது நான் கொண்டிருந்த மதிப்பை பன்மடங்காக்கியது. ஷெய்க் அவர்கள் கூறினார்கள், “எனக்கு சுய மாக செய்ய முடியும் காரியத்தை நான்தான் செய்ய வேண்டுமென்று உறுதி கொண்டுள்ளேன். உங்களுடைய உதவி மட்டும் இல்லாவிட்டாலும் தனியாக எழுந்துநிற்கவும் என்னால் இயலும்”.

இதைகேட்ட எனக்கு சிரிப்பு தோன்றியது. பக்கவாத நோயால் பீடிக்கப்பட்ட, இருகால்களையும் பயன்படுத்த இயலாத அந்த முதியவர் கம்பை ஊன்றிய வாறு எழுந்து நடப்பதும், ஒரு அடியெடுத்து வைக்கும்போதே தரையில் வீழ்வதும் மீண்டும் அதிக ரித்த ஊக்கத்தோடு கம்பை ஊன்றிய வாறு எழுந்து நிற்பதையும் நான் காண்பதுண்டு.

சிறிது காலத்திற்குப் பின் அவருடைய இயக்கத் தோழர்கள் அவருக்கு சக்கர நாட்காலி ஒன்றை வாங்கிக் கொடுத்தார்கள். நோயினால் துன்புற்ற வேளையி லும் சிறையில் கொடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதும் அறி வைத் தேடுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதை அந்த முதியவர் எங்களுக்குக் கற்பித்தார்.

நன்றி: விடியல் வெள்ளி

Monday, 10 October 2011

அதிரையில் எஸ்.டி.பி.ஐ பேரணி

அதிரையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக சனிகிழமை காலை பிரச்சார ஊர்வளம் நடத்தபட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர்தலில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ வேட்ப்பாளர்களும் கலந்து கொண்டனர்.



இப்பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) மற்றும் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(CFI) ஆகிய அமைப்புகளிருந்து

கலந்துகொண்டனர்.
 

அடுத்தடுத்து வரும் நோட்டிஸ்ஸால் பரபரப்பு!

அதிரையின் சம்சுல் இஸ்லாம் சங்க வேட்பாளர்கள் என அறிவித்து அவர்களுக்கு ஆதரவாக செக்கடி மேட்டில் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பதாகையும் வேட்பாளர்கள் வெளியிட்ட நோட்டிசும். நாங்கள் சங்க வேட்பாளர்களே என முகல்லாவாசிகளிடம் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று?என மக்கள் கேட்கின்றனர்



Wednesday, 5 October 2011

தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ யின் வெற்றிக் கணக்கு துவங்கியது



சென்னை: தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வெற்றிக்கணக்கு நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே அதன் வெற்றிக்கணக்கு தொடங்கியுள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எஸ்.டி.பி.ஐ (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) என்னும் அரசியல் பேரியக்கம் தொடங்கப்பட்டது. சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான அரசிய்ல் சக்தியாய் திகழ வேண்டும் என்ற அடிப்படையில் எஸ்.டி.பி.ஐ நாடு முழுவதும் வேகத்துடனும் அதே சமயம் விவேகத்துடனும் பயனித்து வருகிறது.

தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் தனது வெற்றிக் கணக்கை தொடங்கியது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் எந்தக்கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து முதன் முறையாக களம் இறங்கிய எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் தோல்வி அடைந்தாலும் கணிசமான வாக்குகளை பெற்று பெறும் பெறும் கட்சிகளின் புருவத்தை உயரவைத்தது.

தற்போது நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் முதன் முறையாக இஸ்லாமிய, கிறிஸ்தவ இயக்கங்கள் மற்றும்க் தலித்கள் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து கூட்டணியாக தேர்தல் களம் காண இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஊராட்சிகளிலும், வார்டுகளிலும் எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழகத்தில் இரு மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் முன்னரே எஸ்.டி.பி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் அதே சமயம் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இனி வரும் காலங்களில் எஸ்.டி.பி.ஐ இந்திய தேசத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கீழ்கண்ட எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
எண் ஊர் பெயர் வார்டு எண் வெற்றிபெற்றவரின் பெயர் மாவட்டம்
1 சித்தார்கோட்டை 5 பரகத் நிஷா இராமநாதபுரம்
2 சிக்கல் 6 பஷீர் அஹமது இராமநாதபுரம்
3 ஏர்வாடி 66 சிதுரத் பேகம் இராமநாதபுரம்
4 சிறுபோது 2 செய்யது அலி இராமநாதபுரம்
5 மல்லிப்பட்டிணம் 3 நஜிமுன்னிஷா தஞ்சாவூர்
6 இருமேணி 3 அப்துல் ஹக் இராமநாதபுரம்

7 கேம்பலபாத்
ரிஃபாய் ஆதம் பாஷா தூத்துக்குடி
8 செய்துங்கநல்லூர்
ஜொஹரா தூத்துக்குடி
9 மியான்பள்ளி
ஜீனத் தூத்துக்குடி
குறிப்பு: தகவல் 03.10.2011 வரை

முத்துப்பேட்டை பேரூராட்சியின் தேர்தல் வாக்குறுதி! மாவட்ட SDPI கட்சி வெளியீடு:


முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் தேர்தல் பணிக்குழுக் கூட்டம் 01.10.2011 ஆம் தேதியன்று இக்கட்சியின் மாவட்ட தலைவர். தப்ரே ஆழம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதில் மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பல முக்கிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப் பட்டு, பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சித்திக் மச்சன் என்கிற அ.அபூபகர் சித்திக் அவர்கள் சார்பாக தேர்தல் வாக்குறுதியாக பின் வருபவன் வற்றை செய்து கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகள்:
1 ) முத்துப்பேட்டை பேரூராட்சியில் சேரக் கூடிய மக்களின் வரிப்பனமான பொது நிதிலிருந்து இறைவன் மீது ஆணையாக ஒரு ருபாய் கூட ஊழல் செய் மாட்டோம்.
2 ) முத்துப்பேட்டை மக்களின் கனவான, முத்துப்பேட்டையை தாலுக்கவாக மாற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசை அணுகி எல்லாவிதமான முயர்த்சிகளும் மேற்கொள்ளப் படும்.
3 ) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பணிகள் முடிக்கப் படாமல் உள்ள சிமென்ட் சாலைகளை உடனடியாக விரைந்து பணிகள் நடக்க உரிய நடவடிக்கை எடுப்போம்.
4 ) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் உடைந்து பழுதான கழிவு நீர் வடிக்கால்களை முன்னுரிமை அடிப்படையில் சீர் செய்து பொது சுகதரத்தை பாதுகாப்போம்.
5 ) வடிக்கால் வசதியில்லாத அனைத்து வார்டுகளிலும் உடனடியாக வடிகால் வசதி அமைய நடவடிக்கை எடுப்பது.
6 ) ஆங்காங்கே சேரும் குப்பை, கூளங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த அதிக கவனம் செலுத்துவது.
7 ) பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க, ஊர் எல்லைக்குள் பன்றிகள் இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்துவது.
8 ) பேட்டை, செம்படவான்கடு, மருதங்காவளி, தேற்குகாடு மக்களின் குடிநீர் பிரச்சனையை கவனத்தில் கொண்டு புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைப்பது.
9 ) செயல் இலக்கச் செய்யப்பட பரக்கலக்கோட்டை நீரேற்று நிலையத்தை, அவசிய நேரங்களில் பயன்படுத்தும் வகையில் புதுப்பித்து செயல்பட்டு நிலைமைக்கு கொண்டு வந்து தினமும் இருமுறை தண்ணீர் கிடைக்க வழிவகை செய்வது.
10 ) சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் நடைபெறாமல், சுகாதாரமான குடிநீர் விநியோகம் கிடைக்க ஆவண செய்வது.
11 ) இந்து. முஸ்லிம், கிருஸ்தவ, தலித் மக்களிடயே ஒற்றுமையை ஏற்படுத்தி, முத்துப்பேட்டையை அமைதி பூங்காவாக மாற்றுவோம்.
12 ) பிறப்பு, இறப்பு பதிவேடுகள் பராமரிப்பு முறையை (சப்ரிஜ்ஸ்டர் ஆபிசில் ஒப்படைக்கப் பட்ட பதிவேடுகளை திரும்பப் பெற்று) மக்களை அலைகளிக்காமல் மக்களுக்கான சேவையாக செய்து வருவோம்.
13 ) எந்த காரணம் கொண்டும் (வரிவித்திபு முறையிலும் மக்களுக்கான சேவைகள் கிடைப்பதிலும்) நிர்வாகத்தால் மக்களை அவத்திக்குள்ளக்கும் எவ்வித சிலையும், செய்ய அனுமதிக்க மாட்டோம்.
14 ) பேரூராட்சிக்கு வரவேண்டிய பல லட்ச ரூபாய் வாரக் கடனை வசூல் செய்து, மக்கள் மக்கள் நலத்திட்டங்களை செய்வோம்.
15 ) சொத்து வரி விதிப்பதில் ABC மண்டல பிரிப்பு முறையை அரசாணைபடி மாற்றியமைப்போம், இனி வருங்காலங்களில் எக்காரணம் கொண்டும் சொத்து வரி விதிப்பு உயர்வு செய்ய அனுமதிக்க மாட்டோம்.
16 ) அரசு ஆண்கள், மேன்கள், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர், மாணவியர், ஆசிரியர் நலன் கருதி குடிநீர், கழிவறை வசதிகளை உடனடியாக செய்து தர முழு முயற்ச்சி எடுப்போம்.
17 ) அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ள மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி செயல் பட முழு கவனம் செலுத்துவோம்.
18 ) அரசு அறிவிக்கும் அனைத்து வித நலத்திட்டங்களும் (இலவசங்கள் உள்பட) மக்களுக்கு டிரைவில் விடுபடாமல் கிடைக்க முழு கவனம் செலுத்துவோம்.
19 ) பேரூராட்சிக்கு சொந்தமான அனைத்து குளங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றி தருவோம்.

இவன்
சோசியல் டெமாக்ரடிக் கட்சி (SDPI)
தேர்தல் பணிக்குழு, முத்துப்பேட்டை

அதிரை 13வது வார்டு வேட்பாளரின் உறுதிமொழி!

13வது வார்டு வேட்பாளரின் உறுதிமொழி!



அஸ்ஸலாமு அலைக்கும், வரஹ்..!
SDPI உதயமாகி, தடைகள் பல கடந்து இந்திய அரசியலில் தவிர்க்க இயலாத சக்தியாக,
பேரொழுச்சிபெற்று திகழ்கிறது.(அல்ஹம்துலில்லாஹ்!)
மருத்துவ சேவை.. மருத்துவ உதவி.. கல்வி உதவி.. கல்வி விழிப்புணர்வு.. மரக்கன்று நடுதல்.

மேலும் சமூதாய பிரச்சனைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளுதல் என பல்வேறு சேவைகளை செவ்வனே செய்து எவ்வித பிரதிபலனும்எதிர்பாராமல் முழுமையாக கடந்த பல வருடங்கலாக அணைத்து தரப்பு மக்களுக்காக செய்து வருகின்றோம்.

இன்ஷாஅல்லாஹ்! ஊராட்ச்சி தேர்தலில் நான் 13 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு SDPI யின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன் நான் வெற்றிப்பெற்றால்...

நம் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு, சாலைவசதி, வாய்கால் தூர்வாறுதல், குளம் தூர்வாறுதல், சாலையோர பூங்கா அமைப்பது, மின்கம்பங்களை முறையாக பராமரித்து மின் விளக்குகளை பொருத்தஆவண செய்வது போன்ற இதர அடிப்படை வசதிகள் அணைத்தையும், மத்திய, மாநில அரசு திட்டங்கள் அணைத்தையும் நடைமுறைபடுத்துவது, லஞ்சம் லாவன்ய மற்ற, ஊழல் அற்ற பேரூராட்ச்சியை உருவாக்க போராடுவது என பல்வேறு எண்ணங்களை நிறைவேற்ற.

வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் .SDPI யின் வேட்பாளராக போட்டியிடும் எனக்கு வாய்ப்பளித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாய் 13வது வார்டு வாக்காள பெருமக்களை கேட்டுக்கொள்கிறேன்.


இவன்:

Z.முகமது இல்யாஸ்

த/பெ:முகமது ஜெக்கரியா

அலைப்பேசி எண் :9944997022

குறிப்பு :அதிரை மூன் எந்த ஒருகட்ச்சிக்கும் வேட்பாளருக்கும் ஆதரவல்ல.
இது போன்று நமதூரில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களது உறுதி மொழியை அனுப்பிதந்தால் உடனே பதிவேற்ற ஆவன செய்யபடும்.

Tuesday, 4 October 2011

நவராத்திரி பூஜை செய்யும் முஸ்லீம் பெண்கள் !

நரமாமிச மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் தான் இந்த இழிநிலை.இவர்கள் இணை வைத்து விட்டார்கள் இவர்கள் இசுலாமியர் இல்லை என சொல்லுவதை விட்டு விட்டு இவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார் ?,இந்த நிலை ஏற்பட்டதற்கான காரணம் எது?இதன் பின்னணி என்ன?
அகிலபாரதீய வித்யார்த்தி பரிசத் எனும் பெயரில்செயல் படும் நாசகர பாசிச காவி கூட்டத்தின் மாணவ அமைப்பின் உழைப்பின் பலனை பாரீர்.இவர்கள் தான் கல்லூரியில் பயிலும் நம் சமுதாய மாணவிகளை வழிகெடுப்பது.ஸ்மார்ட் பிரென்ட் எனும் பெயரில் பாசிச வெறி நாய்களை நண்பர்களாக அறிமுகம் செய்துவைத்து நம் சகோதரிகளிடம் ஆசை வார்த்தைகளை தூண்டி வீட்டை விட்டு வெளியேற செய்து வழி கெடுப்பதுதான் இவர்களின் முக்கிய குறிக்கோள்.எச்சரிக்கை சகோதரர்களே.பெண்களை ரீசாஜ் கார்டு வாங்கி ரீசார்ஜ் செய்ய சொல்லுங்கள்.அல்லது வீட்டில் உள்ள ஆண்கள் ரீசார்ஜ் செய்து கொடுங்கள்.ஈசி ரீசார்ஜ் செய்யும் கடைகளில் இருந்து ஈசி ரீசார்ஜ் செய்யும் நம் சமுதாய பெண்களின் நம்பரை எடுத்து முதலில் மெசேஜும் பின்பு மயக்கும் வார்த்தைகளை பேசியும் வழிகெடுக்கும் யுக்தியை தற்போது கையாளுகின்றனர்.எனவே தயவு செய்து ஈசி ரீசார்ஜ் செய்வதானால் ஆண்கள் சென்று செய்துகொடுங்கள்.
இப்புகைப்படங்கள் ராமேஸ்வரத்தில் நடந்த கடல்முர்ருகை போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது.சங்க்பரிவார பாசிஸ்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் ராமேஸ்வரத்தில் கிடைத்த வெற்றி என தலைப்பிட்டு இதை தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!
நரமாமிச மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் தான் இந்த இழிநிலை.இவர்கள் இணை வைத்து விட்டார்கள் இவர்கள் இசுலாமியர் இல்லை என சொல்லுவதை விட்டு விட்டு இவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார் ?,இந்த நிலை ஏற்பட்டதற்கான காரணம் எது?இதன் பின்னணி என்ன?என்பதனை சிந்திக்க வேண்டுகிறேன்.சங்கபரிவார பயங்கரவாதிகளின் நூறாண்டு செயல் திட்டத்தின் விளைவு தான் இது என்கிற உண்மையை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.இந்தியா இந்து தேசம்.நீ இங்கே வாழ வேண்டுமெனில் தொப்பி தாடியுடன் நாமும் இட்டுக்கொள்.அல்லாஹு அக்பர் என்பதுடன் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் சொல்.அப்படியெனில் மட்டுமே நீ இந்த நாட்டில் மூன்றாம் தர குடிமகனாய் வசிக்க முடியும் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுத்து அதை செயல்படுத்தும் வெறியோடு பல பிரிவுகளாய் பிரிந்து ஆனால் ஒரே நோக்கத்திற்கு ஆர்.எஸ்.எஸ்.எனும் ஒரே தலைமைக்கு கட்டுப்பட்டு அதி தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள்.அரசு துறை அதிகார வர்க்கம்,ஆளும் வர்க்கம்,மீடியா,இணையதளம் இப்படி எல்லாவகையிலும் செயல்பட்டு வருகின்றனர்.நமக்கோ இயக்க சண்டை போடவும் ,அடுத்தவர்களின் குறைகளை கண்டறிந்து அதை பரப்புவது ,பல பிரிவுகளாய் பிரிந்து செல்லவுமே நேரம் சரியாக இருக்கிறது.ஏதோ இது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கவில்லை.சமிப காலமாய் இது அதிகரித்து வருகிறது.தமிழகத்திலும் கூட பழனி,சபரி மலைக்கு பாதயாத்திரை செல்வது,விநாயகர் சதுர்த்தி அன்று வரவேற்பு செய்வது ,நம் பெண்கள் ஹிந்து சமூகத்தை சேர்ந்தவருடன் வீட்டை விட்டு வெளியேறுவது
அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மோடியை அடுத்த பிரதமராக முன்னிறுத்த பாஜக தயாராகிவிட்டது. பிரசாரமும் சமூக வலைத்தளங்கள் மூலம் மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் நமது நிலையோ சொல்லி தெரியவேண்டியதில்லை. நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.போலி ஒற்றுமையோ நிஜ ஒற்றுமையோ தயவு செய்து ஒன்று சேருங்கள்.சமுதாய நலனுக்கு என்று சொல்லி சொல்லியே பல பிரிவுகளாய் பிரிந்து இந்த சமுதாயம் பலவீனப்பட்டு போனது தான் மிச்சம்.இயக்கவாதிகளே இயக்க மாயையிலிருந்து மீளுங்கள்.சமுதாய நலன் நாடும் நல்லுள்ளங்களே இயக்க தலைமைகளிடம் ஒன்று பட வற்புறுத்துங்கள். வலியுறுத்துங்கள்..


நன்றி : EMANAI

எஸ்டிபிஐ வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு


ஐந்து பஞ்சயாத்து வார்டுகளில் எஸ்டிபிஐ சார்பாக நிறுத்த பெற்ற வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யபட்டனர் அதன் விவரம்:


மல்லிபட்டினம்-03 நஜிமுன்னிஷா
சித்தார்கோட்டை-05 பரகத் நிஷா
சிக்கல்-06 பஷீர் அஹ்மத்
ஏர்வாடி-06 சிதுரத் பேகம்
சிறுபோது-02 செய்யது அலி

Sunday, 2 October 2011

துறைமுகம் தொகுதி 60வது வார்டில் எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர் பிரச்சாரம் தொடங்கியது .

சென்னை: துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 60வது வார்டு சார்பாக எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் அவர்கள் போட்டியிடுகிறார். கவுன்சிலர் பதவிக்கான பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்கினார். இன்று வெள்ளிக்கிழமை (30.09.2011) அங்கப்பன் தெருவில் இருக்கின்ற ஈத்கா மஸ்ஜித் மற்றும் இளையான்குடி மஸ்ஜிதுகளில் ஜும்மா தொழுகைக்கு பிறகு வாக்குகளை சேகரித்தார்.

எஸ்.டி.பி.ஐ அரசியல் கட்சி தொடங்கிய நாள் முதற்கொண்டு துறைமுகம் தொகுதியின் தலைவராக அமீர் சுல்தான் விளங்கிவருகிறார். துடிப்பான இளைஞராக இருக்கும் இவர் தனது தொகுதியில் பல மேம்பாட்டு பணிகளை செய்துள்ளார். குப்பைகளை சுத்தம் செய்தல், சாக்கடை அடைப்பை சரிசெய்தல், மின்சார வெட்டு போன்ற இடையூறுகளுக்காக மாநகராட்சியை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல் போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகிறார். ஆள் பலம், பண பலம் கொண்ட அரசியல் காலகட்டத்தில் எந்த ஒரு பலமும் இல்லாமல் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆணையின் பெயரில் இன்று தனது வாழ்க்கையில் முதன் முதலாக அரசியல் யுத்தம் நடத்த இருக்கிறார். தான் போட்டியிடுகின்ற 60வது வார்டில் குறிகிய காலத்திலேயெ பலரிடம் நன்மதிப்பை பெற்றவராக விளங்குகிறார்.



கடந்த 10 ஆண்டுகளாக சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் அமிர் சுல்தான் அவர்களை ஆதரித்து பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நீங்கள் துறைமுகம் பகுதி 60வது வார்டுக்கு உட்பட்டவராக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் எஸ்.டி.பி.ஐற்கு வாக்களிக்க வேண்டுன் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் நாளை முதல் துவங்குகிறது

ஐதரபாத்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற நவம்பர் மாதம் டெல்லியில் நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார துவக்க விழாவை சமூக நீதிக்காக போராடிய தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதன் தொடக்க பிரச்சாரம் ஆந்திர மாநிலம் ஐதரபாத்தில் நாளை நடக்க இருக்கிறது.ஐதரபாத் சார்மினார் அருகே உள்ள கில்வத் திடலில் வைத்து தொடக்க பிரச்சார நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சமூக நீதிக்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக உரை நிகழ்த்தப்படும்.


ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்டின் ஊடக தொடர்பாளர் அப்துல் லத்தீஃப் அவர்கள் கூறும் போது "மக்களுக்கு எதிராக, தேசத்திற்கு எதிராக‌ செயல்பட நினைக்கும் அனைத்து தீய சக்திகளுக்கு எதிராகவும், அதே சமயம் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வலிமைக்காக முன் நின்று போராடக்கூடிய ஒரு சமூக இயக்கம் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவாகும்".


எல்லா மக்களுக்கும் சம் நீதி கிடைக்கவேண்டுமானால் மக்கள் மத்தியில் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனவே மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மாநாட்டிலும் சரி அதற்கு முன்பு மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரத்திலும் சரி மக்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு கொடுக்கப்படும். "நீதியால் தேசத்தை புணரமைப்போம்" என்ற கோஷத்தின் அடிப்படையில் சமூக நீதி மாநாடு நடைபெறும்" இவ்வாறு லத்தீஃப் கூறினார்.


ஆந்திர மாநிலத்தலைவர் ஆரிஃப் அஹமது அவர்கள் கூறும்போது தொடக்க பிரச்சார நிகழ்ச்சிக்கு பின்பு மாநில செயற்குழு கூட்டம் பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் எடுத்துசெல்லும் முகமாக பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரங்கள், சுவர் விளம்பரங்கள், தெருமுனைக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படும் என்று கூறினார்.

உள்ளாட்சித்தேர்தலில் பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் கைகோர்த்தது!





தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.


இந்தக் கூட்டணியில்

1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை

2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா

4. இந்தியன் நேஷனல் லீக்

5. சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை

6. தேசிய லீக் கட்சி

7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த்

9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்

10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை

12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா

13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்

14. இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளும், 6 கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை உள்ளன.







மொத்தமுள்ள 9 மாநகராட்சி மேயர் பதவிகளில், சென்னை உள்பட 3 மாநகராட்சிகளில் இஸ்லாமிய கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மாநகராட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்.


சென்னை மாவட்ட மேயர் வேட்பாளர் அமீர்

மேயர் தொகுதிகளில் மட்டும்தான் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர், வார்டுகளில் யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் போட்டியிடுவார்கள்





சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI)வின் வட சென்னை மாவட்டத் தலைவர் S.அமீர் போட்டியிடுகிறார்.