Showing posts with label பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. Show all posts
Showing posts with label பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. Show all posts
Saturday, 3 March 2012
Thursday, 3 November 2011
அத்வானி ரதயாத்திரையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு அப்பாவி முஸ்லிம்களை குறிவைக்கும் காவல்துறை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
நந்தித் I & II, மாலேகான் I & II, கான்பூர், அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், கோவா, சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், தென்காசி என நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் வெளிவந்த சங்பரிவார்களின் தொடர்பை மறைக்க, அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சங்பரிவார பின்புலத்தோடு கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருப்பதுதான் ஊழல் ஒழிப்பு நாடகம்.
இந்த போலியான ரத யாத்திரை தமிழகத்தில் மதுரை வந்து விட்டு செல்லும் போது திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி என்ற கிராமத்தில் பாலத்தின் அடியில்ஒரு பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குண்டு வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படும் ஆலம்பட்டி கிராமத்திற்குச் சென்று குண்டை பார்த்தவுடன் இது ‘முஸ்லிம்கள் வைத்த குண்டு’ என்று கண்டு பிடித்துவிட்டதாம் காவல்துறை. இந்தியாவில் நடந்து வரும் நிகழ்வுகளைப் பொறுத்தவரை குண்டு வெடித்தவுடன் ஸ்பாட்டுக்குப் போகõமலேயே முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி விடுவார்கள்.
இங்கு முன்பாகவே கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதால் ஸ்பாட்டுக்குப் போய் முஸ்லிம்கள் தான் என்றுள்ளனர். இது ஒன்றுதான் தமிழக போலீசார் காட்டிய வித்தியாசம். உடனே கேரளாவுக்குச் சென்றோம், அங்கு சென்றோம் என்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு ஏன் செல்லவில்லை என்பது தெரியவில்லை.
27.10.2011 அன்று மதுரை வந்தார் அத்வானி. 28.08.2011 அன்று திருமங்கலம் வழியாக ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, கேரளா என பயணத்திட்டம் இருந்ததாக கூறும் காவல்துறை 26.10.2011 அன்று நள்ளிரவில்தான் போலீசாருக்கே அத்வானி பயணம் செய்யும் பாதை எது என தெரியும் என்றும் சொல்லுகின்றனர்.
அப்படியிருக்கும் போது ஒரே நாளில் இந்த திட்டத்தைத் தீட்டி செயல்படுத்தியவர்கள் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்ததாக தெரியவில்லை.
கடந்த காலங்களில் 24.01.2008 அன்று தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் அவர்களே குண்டு வைத்ததையும் குண்டு வெடித்த இடத்தில் தொப்பி கண்டெடுக்கப்பட்டதையும் அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு நேர்மையான விசாரணை நடத்தி உடனடியாக உண்மையை கண்டு பிடித்ததையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் இதனை முஸ்லிம்கள்தான் செய்தார்கள், இல்லையென்றாலும் முஸ்லிம்கள்தான் செய்ததாக காட்ட வேண்டும் என்ற முடிவுடன்தான் ஆரம்பம் முதலே செயல்பட்டது காவல்துறை. அன்று இரவு பத்திரிகையாளர்களிடமும் முஸ்லிம்கள்தான் இதனை செய்தார்கள் என்ற தொனியில்பேசியுள்ளது காவல்துறை. யாருடைய உத்தரவின் பெயரில் அப்படி செயல்பட்டார்கள் என்பதும் தெரியவில்லை.
சரியான கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
ஆனால், இறுதியில் எல்லா வழக்குகளிலும் வழக்கமாக சொல்வது போன்று செல்போனை வைத்து கண்டுபிடித்தோம் என்று இரண்டு முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். இந்தியாவில் சமீப காலமாக நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளிலும் இதே போன்று செல்போன் ஆதாரம், இமெயில் ஆதாரம், எஸ்.எம்.எஸ். ஆதாரம் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் அப்பாவிகள், இந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்.ஐ சேர்ந்தவர்கள் என்பது ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களின் வாக்கு மூலங்களின் மூலமும் பல கைதுகள் மூலமும் நிரூபணமாகிவருவதை அனைவரும் அறிவோம்.
இச்சம்பவத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக போராடி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை இவ்வழக்கில் சேர்த்து விடவேண்டும் என்ற அலாதியான ஆர்வம் அல்லது உத்தரவு போலீசாரிடையே காணப்பட்டது.
28.10.2011 அன்று ஸ்ரீவில்லிபுதூரில் ‘டீ’ குடித்துக்கொண்டிருந்த பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினரான ஷாஜஹானை காவல்நிலையம் அழைத்துச் சென்று அன்று வெள்ளிக் கிழமை தொழுகைக்கும் அனுமதியளிக்கõமல் மாலை வரை காவல் நிலையத்தில் வைத்து பின்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கைது என்று எழுதி அவரிடம் கையெழுத்து வாங்கி விட்டுள்ளனர்.
பின்னர் 01.11.2011 அன்று நள்ளிரவில் பாப்புலர் ஃப்ரண்டின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளரான சர்தார் மற்றும் நவாஸ் ஆகியோரை கைது செய்து சென்றுள்ளனர்.
கைது செய்து எங்கு வைத்திருக்கின்றார்கள் என்பதைக்கூட தெரியப்படுத்தாமல் மேலிடத்து உத்தரவு வரும் வரை நாங்கள் எதுவும் சொல்வதற்கு இல்லை என்றுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை துவங்கியவுடன் 02.11.2011 அன்று காலை 9.30 மணியளவில் அவர்களை விடுவித்துள்ளனர்.
அத்வானி மதுரைக்கு வருகை தந்திருந்த போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் ஊழலுக்கு எதிராக யாத்திரை நடத்துவதை கண்டித்து நோட்டீஸ் விநியோகம் செய்தது. அது காவல்துறைக்கும் தெரியும், அப்போதே அழைத்துப் பேசினார்கள். நோட்டீஸ் கொடுப்பது எங்களின் ஜனநாயக உரிமை என்று சொல்லிவிட்டு வந்தோம்.
காவல்துறை இது போன்ற தகிடுதத்தங்களை செய்வார்கள் என்பதை அறிந்தே விநியோகிப்பட்ட நோட்டீசுடன் நாம் பத்திரிகையாளர்களுக்கு செய்தியும் கொடுத்தோம். ஆனாலும் காவல்துறை பாப்புலர் ஃப்ரண்ட்டை விடாமல் துரத்தி வருகின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் சமீப காலமாக மத்திய அரசுக்கு வைத்து வரும் கோரிக்கைதான் இதற்கு காரணம். 1992ல் இருந்து இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் மீள்விசாரனை செய்ய வேண்டும், அந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் அழுத்தமாக முன்வைத்து வருகின்றது. அதே போன்று சமீபத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகளின் சந்திப்பில் நாட்டில் நடைபெற்ற 16 குண்டு வெடிப்புகளுக்கு பின்னணியில் இருப்பது இந்துத்துவ ஃபாசிஸ பயங்கரவாதிகள்தான் என்ற மிகவும் ஆபத்தான அறிவிப்பு குறித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு தன்னுடைய கவலையை பதிவு செய்தது.
நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் இருப்பது சங்பரிவார இந்துத்துவ ஃபாசிஸ சக்திகள்தான் என்பது மீண்டும், மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த பின்பும் மத்திய, மாநில அரசுகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப் போக்கையும், அமைதியையும் கடைபிடித்து வருகின்றன. இனியாவது உளவுத்துறை நிறுனங்கள் இந்துத்துவ ஃபாசிஸ அமைப்புகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.
விசாரணை என்ற பெயரில் மீண்டும், மீண்டும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். விசாரணை என்ற பெயரில் சிறுபான்மையினர் குறிவைக்கப்பட மாட்டார்கள் என்ற பிரதமரின் வாக்குறுதி உடனடியாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகின்றது.
ஆக மொத்தத்தில் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு பா.ஜ.க.விற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற விதத்திலும், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையும் மனதில் கொண்டு பா.ஜ.க.வின் மனதை குளிர வைக்கவும் ஆட்சிக்கு வந்த சில காலங்களிலேயே இத்தகைய முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.
Thanks for popularfrontofindia
வன்முறையை கட்டுப்படுத்தி, பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்; மத்திய, மாநில அரசுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட்வேண்டுகோள்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீபகாலமாக நடந்து வரும் மதரீதியாக மற்றும் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு முஸ்லிம்கள், இதர மதரீதியான சிறுபான்னமையினரின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் வழங்கவேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு டெல்லியில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக முஸ்லிம் சமூகத்திற்கெதிரான வன்முறைகள் குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்தர்கண்ட், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. சில மாநிலங்களில் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர் ஆனை அவமதிக்கும் சம்பவங்களும் நடைபெற்றது. இதில் பெரும்பாலான சம்பவங்களில் போலீஸ் துறை வன்முறையாளர்களோடு கை கோர்த்துக் கொண்டு நாங்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராகத்தான் செயல்படுவோம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
வரவிருக்கின்ற பாராளுமன்ற மற்றும் சில மாநில சட்டமன்ற தேர்தல்களை மனதிற்கொண்டு மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் சதியில் ஃபாசிஸ சங்பரிவார சக்திகள் ஈடுபட்டுவருகின்றன என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது.
நரேந்திர மோடியின் சத்தியாகிரக நாடகம், அதைத் தொடர்ந்து அத்வானியின் ரதயாத்திரை மேலும் சில ஊழல் எதிர்ப்பு இயக்கங்களில் ஊடுறுவியுள்ள ஆர்.எஸ்.எஸ். காரர்கள் போன்ற அனைத்துமே மேற்குறிப்பிட்ட அரசியல் நாடகத்தின் பகுதிகள்தான்.
காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொள்பவர்கள் ஃபாசிஸ்டுகளால் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்கு விடப்பட்டுள்ள சவாலை துணிவுடன் எதிர்கொள்ளவில்லை என்பதுதான் இதில் கவலைக்குரிய விஷயமாகும்.
மேலும் சிறுபான்மையினர் தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் கலவரம் மற்றும் வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டுமெனில், சிறுபான்மையினர் அவர்களின் மனித உரிமைகள், சமூக நீதி மற்றும் சமூகத்தை சக்திபடுத்துதல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்த ஜனநாயக நீதியான முயற்சிகள் மற்றும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
சமீபத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகளின் சந்திப்பில் நாட்டில் நடைபெற்ற 16 குண்டு வெடிப்புகளுக்கு பின்னணியில் இருப்பது இந்துத்துவ ஃபாசிஸ பயங்கரவாதிகள்தான் என்ற மிகவும் ஆபத்தான அறிவிப்பு குறித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு தன்னுடைய கவலையை பதிவு செய்தது.
நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் இருப்பது சங்பரிவார இந்துத்துவ ஃபாசிஸ சக்திகள்தான் என்பது மீண்டும், மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த பின்பும் மத்திய, மாநில அரசுகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப் போக்கையும், அமைதியையும் கடைபிடித்து வருகின்றன. இனியாவது உளவுத்துறை நிறுனங்கள் இந்துத்துவ ஃபாசிஸ அமைப்புகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.
விசாரணை என்ற பெயரில் மீண்டும், மீண்டும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்.
விசாரணை என்ற பெயரில் சிறுபான்மையினர் குறிவைக்கப்பட மாட்டார்கள் என்ற பிரதமரின் வாக்குறுதி உடனடியாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று 1992ல் இருந்து நாட்டில் நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கேட்டுக்கொண்டது.
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் நவம்பர் 26,27 ஆகிய தேதிகளில் புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் நடத்தவிருக்கும் “சமூக நீதி மாநாடு” தொடர்பான செயல்திட்டங்களையும் முடிவு செய்தது.
மாநாடு தொடர்பாக நாட்டின் பல்வேறு பாகங்களில் நடந்து வரும் பிரச்சார நிகழ்ச்சிகளை மீளாய்வு செய்த தேசிய செயற்குழு நவம்பர் 26ம் தேதி “சக்திபடுத்துதலை நோக்கி” என்ற தலைப்பில் கலந்தாய்வும், “நீதிக்கான மக்களின் உரிமைகள்” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கமும் நடைபெறும் என அறிவித்துள்ளது.
27ம் தேதி மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் இப்பொதுக்கூட்டத்திற்கு டெல்லியைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலிருந்து மக்கள் அலைகடலென திரண்டு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று நாட்டின் நாலாபுறங்களில் இருந்தும் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழு கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். ஷரீப், தேசிய துணைத்தலைவர் முகம்மது அலி ஜின்னா, மௌலானா உஸ்மான் பெய்க், பேரா. பி. கோயா, முஹம்மது சஹாப்தீன், முஹம்மத் ஹாலித் ரஷாதி, யாமுகைதீன், வழ. கே.பி. முகம்மது ஷரீப், ஹாமித் முஹம்மத், இல்யாஸ் தும்பே, கரமன அஷ்ரப் மௌலவி, ஓ.எம்.ஏ. ஸலாம், முஹம்மது ரோஷன் மற்றும் ஏ.எஸ். இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sunday, 2 October 2011
சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் நாளை முதல் துவங்குகிறது
ஐதரபாத்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற நவம்பர் மாதம் டெல்லியில் நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார துவக்க விழாவை சமூக நீதிக்காக போராடிய தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதன் தொடக்க பிரச்சாரம் ஆந்திர மாநிலம் ஐதரபாத்தில் நாளை நடக்க இருக்கிறது.ஐதரபாத் சார்மினார் அருகே உள்ள கில்வத் திடலில் வைத்து தொடக்க பிரச்சார நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சமூக நீதிக்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக உரை நிகழ்த்தப்படும்.
ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்டின் ஊடக தொடர்பாளர் அப்துல் லத்தீஃப் அவர்கள் கூறும் போது "மக்களுக்கு எதிராக, தேசத்திற்கு எதிராக செயல்பட நினைக்கும் அனைத்து தீய சக்திகளுக்கு எதிராகவும், அதே சமயம் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வலிமைக்காக முன் நின்று போராடக்கூடிய ஒரு சமூக இயக்கம் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவாகும்".
எல்லா மக்களுக்கும் சம் நீதி கிடைக்கவேண்டுமானால் மக்கள் மத்தியில் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனவே மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மாநாட்டிலும் சரி அதற்கு முன்பு மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரத்திலும் சரி மக்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு கொடுக்கப்படும். "நீதியால் தேசத்தை புணரமைப்போம்" என்ற கோஷத்தின் அடிப்படையில் சமூக நீதி மாநாடு நடைபெறும்" இவ்வாறு லத்தீஃப் கூறினார்.
ஆந்திர மாநிலத்தலைவர் ஆரிஃப் அஹமது அவர்கள் கூறும்போது தொடக்க பிரச்சார நிகழ்ச்சிக்கு பின்பு மாநில செயற்குழு கூட்டம் பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் எடுத்துசெல்லும் முகமாக பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரங்கள், சுவர் விளம்பரங்கள், தெருமுனைக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படும் என்று கூறினார்.
Read more...
Read more...
Subscribe to:
Posts (Atom)

