சென்னை: துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 60வது வார்டு சார்பாக எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் அவர்கள் போட்டியிடுகிறார். கவுன்சிலர் பதவிக்கான பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்கினார். இன்று வெள்ளிக்கிழமை (30.09.2011) அங்கப்பன் தெருவில் இருக்கின்ற ஈத்கா மஸ்ஜித் மற்றும் இளையான்குடி மஸ்ஜிதுகளில் ஜும்மா தொழுகைக்கு பிறகு வாக்குகளை சேகரித்தார்.
எஸ்.டி.பி.ஐ அரசியல் கட்சி தொடங்கிய நாள் முதற்கொண்டு துறைமுகம் தொகுதியின் தலைவராக அமீர் சுல்தான் விளங்கிவருகிறார். துடிப்பான இளைஞராக இருக்கும் இவர் தனது தொகுதியில் பல மேம்பாட்டு பணிகளை செய்துள்ளார். குப்பைகளை சுத்தம் செய்தல், சாக்கடை அடைப்பை சரிசெய்தல், மின்சார வெட்டு போன்ற இடையூறுகளுக்காக மாநகராட்சியை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல் போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகிறார். ஆள் பலம், பண பலம் கொண்ட அரசியல் காலகட்டத்தில் எந்த ஒரு பலமும் இல்லாமல் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆணையின் பெயரில் இன்று தனது வாழ்க்கையில் முதன் முதலாக அரசியல் யுத்தம் நடத்த இருக்கிறார். தான் போட்டியிடுகின்ற 60வது வார்டில் குறிகிய காலத்திலேயெ பலரிடம் நன்மதிப்பை பெற்றவராக விளங்குகிறார்.

No comments:
Post a Comment