திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை !
RIGHT TO INFORMATION
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை சம்பந்தமாக தொடர்ந்து முயன்று கொண்டிருக்கும் இருக்கும் இத்தருணத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூ லம் நமக்கு கிடைத்த நல்ல செய்தி யாதெனில் , திருவாரூர் - காரைக்குடி திருத்துறைபூண்டி மற்றும் அகஸ்தியன்பள்ளி மார்க்கங்களுக்கு பூர்வாங்க ஏற்பாடுகள் தயாராகியுள்ளது தெரியவருகிறது.
மேற்கண்ட அகல ரயில் பாதைத் திட்டம் எப்போது நிறைவேறும் என்று கேட்டறிந்தோம். அதற்குப் பதில் அளித்துள்ள இரயில்வே நிர்வாகம், மேற்கண்ட திட்டம் முடிவுறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் திட்டம் குறுப்பிட்ட பாதையில் முறையாக சென்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் , தற்போதுள்ள மீட்டர் கேஜ் அகற்றும் பணிக்காக டெண்டர் கோரி இன்று THE HINDU பத்திரிக்கையில் விளமபரமும் வந்துள்ளது. இதன் மூலம் மேற்சொன்ன பதிலுக்கு உத்தரவாதம் அளிதாற்போல் உள்ளதை உணர முடிகிறது.
மற்றுமொரு ஒரு முக்கியமான தகவல் , கணினி மூலம் பதிவு செய்யும் டிக்கெட்டுகளை இனிமேல் பிரிண்ட் எடுக்க தேவையி ல்லை. உங்கள் கைபேசி ( பிரயாணம் செய்யும் நபரின் கை பேசி )க்கு SMS மூலம் வரும் தகவலை காண்பித்தால் போதும். இது மக்களிடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது .
இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் நமது அகல ரயில் பாதை திட்டம் நிறைவேறும் என்று நம்புவோமாக !



No comments:
Post a Comment