Wednesday, 7 September 2011

நடுரோட்டில் மின்கம்பம்! உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள்!


அதிராம்பட்டினம் மின்சார வாரியத்திற்கு இலவசமாக நிலம் வழங்கியவர்கள் அதிரை முஸ்லிம்கள்.(அதிரை ரூரல் டெவலப்மென்ட்-அர்டா). இதற்கு பிரதி பலனாக அதிரை மின்சார வாரியத்தின் பாராமுகம் உலக பிரசித்தம் :))) என்பதோடு அவ்வப்போது இதுகுறித்த செய்திகளை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளோம்.


இவற்றை எல்லாம் அதிரை மின்சார வாரியம் பெருமையாக கருதுகிறதோ என்னவோ, பேராபத்து விளைவிக்கும் இதுபோன்ற சம்பவங்களை கண்டு கொள்வதே இல்லை!

படத்திலிருக்கும் மின்கம்பம் அதிரை ஆஸ்பத்திரி தெருவில் புதுப்பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ளது. பலவருடங்களாக குளத்துக் கரையில் இருந்த இந்த மின்கம்பம் குளம் தூர்ந்து நடைபாதையாகிய பிறகு தெருவின் நடுவில் அமைந்துள்ளது.

அதிரையில் மின்கம்பிகளின் உதவியால்!!! வீதியில் விழாமல் நிற்கும் துருப்பிடித்த மின்கம்பம் பார்த்திருக்கிறோம். வீட்டுகூரைக்குமேல் செல்லும் உயரழுத்த மின்கம்பி குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆஸ்பத்திரி தெருவில் நடுரோட்டில் அமைந்துள்ள அதியச மின்கம்பம் குறித்து தற்போது பார்க்கலாமா? (அதிரை மின்வாரியத்தின் பாராமுகத்தால் இன்னும் என்னென்ன அதியம் நிகழப்போகிறதோ? :)


இவ்வழியில் வேகமாகச் செல்லும் வாகன் ஓட்டிகள் இதை கவனிக்கத் தவறினால் பயங்கர கோரவிபத்துகளுக்கு வாய்ப்புள்ளது. (அல்லாஹ் பாதுகாப்பானாக)

இவ்விசயத்தை ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த சகோ.ஜஹபர் அவர்கள் சில வருடங்களுக்குமுன் புகாராக எழுதி, மேலதிகாரி அதைப் பெற்றுக் கொண்டதற்கு கையொப்பம் பெற்ற பிறகும் முறையான நடவடிக்கை எடுத்த பாடில்லை.

(மின்சார வாரியத்தில் வடை சாப்பிடுகிறார்களா? என்பதை யாராவது புலணாய்வாளர்கள் ஆய்வு செய்வதோடு, வடையை பரிமாற எந்த வகையான காகிதங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தால் நல்லது :)

உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது எங்கள் வேலையல்ல என்று பஞ்சாயத்து போர்டும், பஞ்சாயத்து போர்டிலிருந்து நிதி வரவில்லை என்று மின்சார வாரியமும் ஒதுங்கிக் கொள்ளமலாமல் பொதுநல நோக்கில் இதை முன்வந்து ஒதுக்குப்புறமாக மாற்றி வைத்தால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்.

மின்சார வாரியம் கவனிக்குமா?

No comments:

Post a Comment