Monday, 26 September 2011

We Are With Popularfront – peoples!


இந்த தேசத்தை வல்லரசாக மாற்றவிடமாட்டோம்!

இந்த தேசத்தை அந்நியர்களிடம் அடமானம் வைப்போம்!
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுப்போம்!
இந்தியாவில் ஜாதிக்கொடுமையை ஒழிய விடமாட்டோம்!
சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை கொடுக்கமாட்டோம்!
ஃபசிஸசங்கப்பரிவார கூட்டத்தினருக்கு பல்லக்கு தூக்குவோம்!

இவற்றிற்காக எங்களை எதிர்க்கும் அமைப்பாக நீங்கள் இருந்தால்….! உங்களை தடை செய்து, உங்களை முடக்குவதற்கான‌ எல்லா வேலைகளிலும் ஈடுபடுவோம்!

இப்படிக்கு,

இந்திய அரசாங்கம் + உளவுத்துறை + ஊடகங்கள்

ஆம்! இதுதான் இன்றைய நிலை….

சுதந்திரம், நீதி, பாதுகாப்பு இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி புதிய பாதையில் புதிய இந்தியாவை உருவாக்கும் பாரதூரமான பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது ஆட்சியாளர்களுக்கும், ஆதிக்க வர்கத்தினருக்கு இனிக்கவா போகிறது?

சில வருடங்களுக்கு முன்னால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தென் மாவட்டங்களான கேரளா, தமிழ் நாடு மற்றும் கர நாடாகாவில் மட்டுமே இயங்கி வந்த இயக்கமாக இருந்தது. ஆனால் அல்லாஹ்வுடைய கிருபையை கொண்டு இன்று இந்திய தேசம் முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கால்பதித்து ஆக்கப்பூர்வமான பல பணிகளை செய்து வருகிறது. ஒரு தேசிய இயக்கம் தன்னுடைய தேசிய அலுவலகத்தை தென் இந்தியாவில் வைத்திருப்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்பதனால் சமீபத்தில் தன்னுடைய தேசிய தலைமை அலுவலகத்தை தலை நகரமாம் டெல்லிக்கு மாற்றியது.

இதனால் பொறுக்க முடியாத உளவுத்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகளை பத்திரிக்கைகளில் பிரசுரிக்க தூண்டி வருகிறது. அதன் அடிப்படையில் டெக்கன் கிரோனிக்கல் பத்திரிக்கை இன்று பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான பல செய்திகளை பிரசுரித்துள்ளது. நிச்சயமாக இது டெக்கன் கிரோனிக்கல் ஆசிரியரின் தலையில் உதித்தது அல்ல என்பது நமக்கு நன்றாகவே புலப்படுகிறது. டெக்கன் கிரோனிக்கம் வெறும் அம்புதான், அதனை எய்தவர்களோ உளவுத்துறையினர் என்பதை யாரும் சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

பரமக்குடி தலித்துக்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, SDPI ஆர்ப்பாட்டம்.....


Sunday, 25 September 2011

வெள்ளி அன்று அதிரையில் புதுப்பட்டினம் கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வியாழன் அன்று நடந்த புதுப்பட்டினம் கலவரத்தை கண்டித்து வெள்ளி அன்று அதிரையில் மதியம் 2 .30pm மணியளவில் சுமார்100 பேரு கொண்டு காவிகளை கண்டித்தும் மற்றும் காவல் துறையை நடவடிக்கை எடுக்க சொல்லியும் ,பாதுக்கப்பு ஏற்பாடு அதிகரிக சொல்லியும் தக்வா பள்ளிலிருந்து பேரணியாக அதிரை பேருந்திற்கு வந்து அங்கு சாலை மரியலுடன் கண்டனத்தை காட்டி ஆர்ப்பாட்டத்தை முடித்தனர்

தமுமுக சகோதரர் உரையாற்றுகிறார்





சகோதரர் அப்துல்லா உரையாற்றிகிறார்




Tuesday, 20 September 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா – ஒரு IB report!!


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கத்தை பற்றி விமர்சிப்பவரா நீங்கள்? அதனுடைய செயல்பாடுகள் இதுவரை உங்களுக்கு என்னவென்று தெரியவில்லையா? பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கத்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் மனதிலே உதிக்கின்றனவா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கு பதில் தரும் என்று நம்புகிறேன்…!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள்
நாமறிந்த வகையில் நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்பு இது ஒரு மதசார்பற்ற நாடு என்று நம் முன்னோர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஃபாசிஸ சங்கப்பரிவாரங்களால் இந்த நாட்டை இந்து நாடாக மாற்றியே தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு நீண்ட கால திட்டங்களை தீட்டி அதன் விளைவாக நாடு முழுவதும் கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தின் உயிரும், மானமும் மலிவாக பலியாக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் வி.டி. இராஜ சேகர் போன்ற மாற்று சமுதாய தலைவர்களே ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட அதே வழிமுறைகளைத்தான் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்த காலச் சூழ்நிலையில், இந்தியாவில் இஸ்லாம் நிலை நிறுத்தப்படவேண்டும்,  இஸ்லாமிய சமுதாயம் மானத்தோடும், கண்ணியத்தோடும், தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற உண்ணத இலட்சியங்களோடு இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கை நெறியாகக் கொண்டு  கேரள மாநிலத்தில் ஒரு சில சகோதரர்களால் சரியான மாற்று திட்டங்களோடும், அடித்தளத்துடனும் துவங்கப்பட்டதுதான்  இந்த “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” என்று இந்திய மக்களால் அறியப்படும் ஒரு தேசிய இயக்கமாகும்.
இன்று இதன் வளர்ச்சி பல மாநிலங்களை கடந்து தேசிய அளவில் குறிப்பாக வட மாநிலங்களில் பலமாக அடித்தளமிட்டுவருகிறது. இதே லட்சியத்தோடு சமுதாயத்தில் பல்வேறு கிளைகளையும் உருவாக்கி ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபடுத்த வேண்டும் என்ற உண்ணத நோக்கோடு பல துணை பிரிவுகளை நாடு முழுவதும் உருவாக்கி நடத்தி வருகிறது.கொள்கையே இல்லையென்றால் ஒரு அமைப்பால் இவ்வளவு தூரம் வளர்ச்சியை அடைய முடியாது என்பது சிந்திப்பவர்களுக்கு தெளிவாக விளங்கும் என கருதுகிறேன்.
ஓரளவு வளர்ச்சி அடைந்த பிறகு இயக்கத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது என்பது எல்லா அமைப்பிற்கும் பொதுவான விஷயம். அதன் அடிப்படையில் தமிழகத்தில் இயக்கம் வளர்ச்சி அடைந்த பிறகு எம்.என்.பி (மனித நீதிப் பாசறை) என்ற பெயர் சூட்டிய பிறகு கொள்கைக்கு மாற்றமில்லாத வகையில் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் இயக்கத்தின் ஆரம்ப கால கட்டத்தில் ஜனநாயகம் கூடாது என்று நிலையில் செயல்பட்டாலுல், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாழக்கூடிய முஸ்லிம்களின் அவல நிலையை பார்க்கும்போது, இந்தியாவில் எல்லா குடிமக்களுக்கும் சமமான நீதியும், சுதந்திரமும், பாதுகாப்பும் கிடைக்கச்செய்யவேண்டுமென்றால் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்கள் பங்கெடுத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று அறிந்தவுடன் நாம் முன்னர் இருந்த நிலையை  விட்டு முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எல்லா ரீதியான போராட்டங்களையும் செயல்படுத்த தொடங்கினோம்.
உங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள், அப்படியானால் உங்களுடைய பலம் குன்றிவிடும், நீங்கள் கோழைகளாகிவிடுவீர்கள்” என்று திருமறைக்குர்ஆன் வசனத்திற்கேற்ப சமூகத்தின் ஒற்றுமைக்காக போராடி வரும் இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பல சமூகப்பணிகளை பாரபட்சமின்றி செய்து வருகிறோம். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட‌ கடலூர் மாவட்டம் முதற்கொண்டு பல இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். யூதர்களால் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டும், மேலை நாட்டவர்களால் பொருளாதார தடையின் மூலமாக கடுமையான நெருக்கடிக்கு ஆளான பாலஸ்தீன மக்களுக்காக வீதிதோறும் இறங்கி மக்களிடம் பொருளாதாரத்தை வசூலித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்தோம். அதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்னால் பீஹாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒவ்வொரு மஸ்ஜிதுகள், முக்கிய பஜார்கள் என பல்வேறு இடங்களில் தமிழகம் முழுவதும் வசூலித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். மேலுமா சில ஆண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பல்லாயிறக்கணக்கான மக்கள் வீட்டை இழந்து, குடும்பத்தை இழந்து, அநாதைகளாயினர். அவர்களின் துயரை துடைக்க நம்மாலான முயற்சியாக மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் வீடுவீடாக சென்று துணிமணிகளை பெற்று அவர்களுக்காக அனுப்பி வைத்திருக்கிறோம்.
அதே போன்று ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் ஃபித்ரா கடமையுள்ளவர்களிடமிருந்து ஃபித்ரா பணத்தை வசூலித்து ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யும் பணியை கடந்த பல வருடங்களாக செய்து வருகிறோம். மாவட்டம் ரீதியாக வசூல் செய்த பணத்தின் கணக்கு விபரங்களை ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்திற்கு பிறகு வெளிவரும் “விடியல் வெள்ளி”என்னும் பத்திரிக்கையில் வெளியிட்டு வருகிறோம்.
கோவை சிறைவாசிகளுக்காக தொடர்ந்து நமது இயக்கம் போராடி வருகிறது. ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவும், சட்டத்தின் மூலமாகவும்  ஒவ்வொரு வருடமும் தமிழக அரசுக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுபவர்களுக்கு கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றோம்.
பாப்புலர் ஃப்ரண்டின் பொருளாதார நிலை:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முழு நேர ஊழியர்களுக்கு வாழ்வாதாரத்திற்காக உதவித்தொகை இயக்கத்தின் உறுப்பினர்கள் தரும் மாத சந்தாவிலிருந்து கொடுக்கப்படுகிறது.  முழு நேர ஊழியர்களுக்கு வழங்கப்படுவது சம்பளம் இல்லை, அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உதவித்தொகை அல்லாஹ்விற்காக இரவு, பகல் பாராமல் உழைப்பவர்களுக்கு கூலி கொடுக்க மனிதர்களால் முடியாது. அல்லாஹ் மறுமையில் வழங்குவான். மேலும் ரமலான் மாதத்தில் ஜகாத் வசூலித்து அதன் மூலம் சமூகப் பணிகளை செய்து வருகிறது. மேலும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் மாநாடுகளாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, மற்ற நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றிற்கும் சமூக பணிகளில் அக்கறை உள்ளவர்களிடம் சென்று அவர்களால் இயன்ற பொருளாதார உதவியை செய்யுமாறு கேட்டதின் அடிப்படையில் அவர்கள் வழங்கும் பணத்தைக் கொண்டு இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
http://pfikaraikal.files.wordpress.com/2011/09/popularfrontpix2528252529.jpg?w=300
 நிர்வாகிகள் தேர்வும் செய்யும் முறை:
பாப்புலர் ஃப்ரண்டின் கிளை நிர்வாகிகள் முதற்கொண்டு தேசிய நிற்வாகிகள் வரை ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள். இங்கே தனி மனித ஆதிக்கத்திற்கு இடமில்லை.  இங்கே தன்னாட்சி செய்யும் தனி நபர்கள் கிடையாது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை  தெளிவான ஜனநாயக முறையில் (இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு) புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முறையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாப்புலர் ஃப்ரண்டில் கட்டுப்படுதலும், செயல்பாடுகளும் தான் முக்கியமே தவிர தனி நபர்களுக்கு முக்கியத்துவமில்லை.
சுதந்திர தின அணிவகுப்பு:

இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை, சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதியில்லை என்று சங்கப்பரிவாரங்களும், உளவுத்துறையினரும் கைகோர்த்து செயல்பட்ட காலச் சூழ்நிலையில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் தனது கொடி அணிவகுப்பை நடத்தி “உங்களை அழித்தொழிக்க எங்கள் படை தயாராகிவிட்டது!” என்று அச்சுறுத்திய  நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுத்துக்கொண்ட சிறப்பான செயல்திட்டம் தான் முஸ்லிம்களின் சுதந்திர  போராட்ட தியாகங்களை வெளிக்கொண்டு வரும் முகமாகவும், சுதந்திர தினத்தை தடையின்றி நெஞ்சு நிமிர்த்தி கொண்டாடுவோமென்றும், இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க நாங்களும் தயாராகிவிட்டோமெனவும் எழுச்சியுடன் சுதந்திர தின அணிவகுப்பினை நடத்தி வருகிறது.
http://popularfrontindia.org/pp/sites/default/files/16%20prde%206-756465.JPG
அதில் ஒரு பகுதிதான் பேண்டு வாத்திய முறையும். பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் தேசியக்கொடிக்கு மதிப்பவர்கள். ஆனால் அதற்கு ஒரு சக்தி இருப்பதாகவோ அல்லது அதை வணங்கவோ செய்கிறார்கள் என்று கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம்.
“எண்ணங்களை பொறுத்தே செயல்கள் அமையும்” என்பது நபிமொழி. அல்லாஹ் உங்கள் உடைகளையோ, உடைமைகளையோ பார்ப்பதில்லை மாறாக உங்களது உள்ளங்களைத்தான் பார்க்கின்றான் என்பது குர்ஆன் கூறும் வார்த்தைகள். பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் ஏக இறைவனைத் தவிர யாரையும், எதையும் வணங்கமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள்.
தீவிரவாதத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஒருபோதும் ஆதரிக்காது:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “ஜிஹாத்” என்ற பெயரில் நடக்கும் குண்டுவெடிப்பு போன்ற முட்டாள்த்தனமான செயல்களை ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை, அதனை செய்ததும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து வெறிபிடித்த இயக்கங்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வகுத்துத்தந்திருக்கக்கூடிய வழிமுறைகளை பின்பற்றி சமுதாய இளைஞர்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், அறிவிரீதியாகவும் பலப்படுத்தும் பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
மஹாத்மா காந்தி அவர்கள் இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபாவான ஹஜ்ரத் உமர் (ரழி) அவர்கள் செய்த ஆட்சியை போன்று கொண்டு வரவேண்டும் என்று விரும்பினார். அது போன்ற ஆட்சி முறையை கொண்டு வர முடியாவிட்டாலும் கூட அதற்கான முயற்ச்சிகளைத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுத்து வருகிறது. நன்மையை ஏவி திமையை தடுக்கும் பணியில் அரசியலும் உண்டு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பாக தென் இந்தியாவில் (கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு) மட்டுமே செயல்பட்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் தற்போது வட மாநிலங்களில் அதிக அளவில் வளர்ந்து வருகிறது (அல்ஹம்துலில்லாஹ்!) அதற்கான ஆரம்பம்தான் பி.ஜே.பி சங்கப்பரிவாரங்களின் கோட்டையாக இருந்த ராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் கடுமையாக போராடினார்கள். இறைவன் அருளால் வெற்றி பெற்றார்கள்.
தோழமை உணர்வு:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த போராட்டங்களாக இருந்தாலும் சரி அவ்வனைத்திலும் சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகளை அழைக்காமல் இருந்ததில்லை. என்ன தான் சமூக இயக்கங்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்த சமூகத்தின் மீது கொண்ட அக்கறையின் பொருட்டு சமூகத்தின் எல்லா இயக்க நிர்வாகிகளையும் நமது நிகழ்ச்சிகளுக்காக அழைத்துள்ளோம். அதே போன்று அவர்கள் அழைத்தும் நமது நிர்வாகிகள் கலந்தும் கொண்டிருக்கிறார்கள்.
தமுமுக‌வைச் சேர்ந்த சகோதரர் ஹாஜா கனி
சகோதரர் லியாகத் அலி (சிறுபான்மை புரட்சி இயக்கம்)
சகோதரர் முனீர் (இந்திய தவ்ஹீத் ஜமாத்)
எஸ்.எம்.ஹிதாயத்துல்லா (தமிழ் இலக்கிய கழகம்) மற்றும் பலர்
கே.எம்.ஷரீஃப் (தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் நாடு)
ஷரீஅத் பாதுகாப்பு பேரவை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் நாடு தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில்
இன்று அல்லாஹ்வினுடைய உதவியைக்  கொண்டு நமது இயக்கம் பல்வேறு பரினாமங்களாக வளர்ந்து அடர்த்தியான வேறுடன் இன்று இந்திய தேசம் முழுவதும் பரவி வருகிறது. “பாப்புலர் ஃப்ரண்ட்” என்று கோஷமிட்டால் “ஜிந்தாபாத் ஜிந்தாபாத்” என்று கூறுவதற்கு எல்லா மாநிலங்களிலும் நமது சகோதரர்கள் உண்டு (குஜராத் உட்பட). http://pfikaraikal.files.wordpress.com/2011/09/163277_1499570899591_1543711546_31076595_149006_n.jpg?w=227&h=227சுதந்திரம், நீதி மற்றும் பாதுகாப்பு அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் போராடிவருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் தங்களது செல்வாக்கினை பயன்படுத்தி எப்படியாயினும் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்ய வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். அதனுடைய வெளிப்பாடு தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக இன்று ஊடங்களால் வெளியிடப்படும் அவதூறு செய்திகள்.”அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்! ஆனால் அல்லாஹ்வோ சூழ்ச்சியாளர்களெக்கெல்லாம் சூழ்ச்சியாளன்” எனவே அல்லாஹ்வுடைய உதவியை கொண்டு லட்சியத்தை நிச்சயமாக ஒரு நாள் அடைந்தே தீருவோம்! இன்ஷா அல்லாஹ்!
எனவே ஊடகங்கள் தரும் செய்தியை அப்படியே நம்பி விடவேண்டாம். அது நல்ல செய்தியாக இருந்தாலும் சரியே! ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான்…
முஃமீன்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால், அதை தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள் (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம், பின்னர் நீங்கள் செய்ததைப் பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல் குர்ஆன் 49:6)
யாவற்றை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

Sunday, 18 September 2011

உரிமைகளுக்காக போராடுவோம்! கேம்பஸ் ஃப்ரண்ட்!!

கோவை: கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (மாணவர்களுக்கான தேசிய அமைப்பு) சார்பாக மக்கள் உரிமைகளுக்காக போராடுவோம் எனும் பெயரில் தேசிய அளவிலான விழுப்புணர்வுப் பிரச்சாரத்தை 2011 செப் 12 முதல் 19 வரை நடத்த அவ்வமைப்பின் தேசிய குழு தீர்மானித்தது. 

இதனடிப்படையில் அவ்வமைப்பின் சார்பில் தமிழகத்திலும் கருத்தரங்கள், பேரணிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாயில்முனைக் கூட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.
தமிழகத்தில் இப்பிரச்சாரத்தின் துவக்கமாக 12\09\2011 மாலை 7 மணியளவில் கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள திவ்யோதயா ஹாலில் ‘மக்கள் உரிமைகளுக்காக போரடுவோம்’ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. 

இதற்கு மாநில தலைவர் எஸ்.முஹம்மது ஷாஃபி, தலைமை ஏற்று, போலி என்கவுன்டர்கள், அஸ்ஸாம், மனிப்பூர் மற்றும் கஷ்மீரில் ராணுவத்தின் அத்துமீறல்கள், கருப்புச் சட்டங்களின் மூலம் நடைப்பெறும் அரச பயங்கரவாதம் ஆகியவற்றால் சிறுபான்மை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் இவற்றிற்கு எதிராக நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் மாணவ சமூகம் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

NCHRO வின் மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா.மோகன், மாணவர்களின் சக்தி குறித்தும் உலகில் நடந்த அநீதி அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் ஏற்படுத்திய புரட்சி குறித்தும் பேசினார். பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் மு. முஹம்மது இஸ்மாயில் பத்திரிக்கைத்துறை ஆதிக்க சக்திகளின் கைகளில் சிக்கியிருப்பதையும், மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில் கார்ப்பரேட் மீடியாக்களின் பங்கு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்.

கேம்பஸ் ஃப்ரண்டின் மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது தம்பி தனது முடிவுரையில் நாளைய இந்தியாவை வழிநடத்த போகும் தலைவர்களான மாணவ சமூகம் மக்களின் உரிமைகளை அறிந்து கொள்ளவில்லையெனில் நம் தேசம்அடிமைகளின் தேசமாக மாறிவிடும். எனவே நம் உரிமைகளை அறிந்து அவற்றை மீட்கவும் பாதுகாக்கவும் சபதமேற்று போராட வேண்டும் என கேட்டுகொண்டார். இந்நிகழ்ச்சி கேம்பஸ் ஃப்ரண்டின் கோவை சட்டக் கல்லூரி யூனிட் செயலாளர் சுலைஹா பர்வீன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

"சமூக நீதி மாநாடு" டெல்லியில் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம்

புது டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மற்றுமோர் மைல்கல்லாக  வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களுக்கு தேசிய அளவிலான "சமூக நீதி மாநாடு"  (SOCIAL JUSTICE CONFERENCE) ஓன்றை நடத்த தீர்மானித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

                                                                       

இம்மாநாட்டின் அமர்வுகள் முழுவதும் சமூகத்தின் நீதிக்கான போராட்டம் சம்பந்தமான கலந்தாலோசனைகள், கருத்தங்கங்கள் நடைபெற இருக்கின்றன. இறுதியாக நவம்பர் 27ஆம் தேதி அன்று மாபெரும் பொதுக்கூட்டத்துடன் இந்த மாநாடு நிறைவடையும். இன்ஷா அல்லாஹ் இந்த மாநாட்டிற்கான வேலைகல் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிரசித்திப்பெற்ற ராம்லீலா மைதானத்தில் வைத்து இம்மாநாடு நடைபெறவுள்ளது என்பது கூடுதல் தகவலாகும். இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரச்சாரங்கள் நடைபெற உள்ளன.
                                                              

தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் கூறும்போது இம்மாநாட்டை நடத்துவதற்கான நோக்கம் சமூக மக்கள் மத்தியில் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மேலும் இந்தியாவில் வாழக்கூடிய எல்லாதரப்பு மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை போராடி பெற வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாநாடு நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.

"நீதியின் மூலம் தேசத்தை கட்டி எழுப்புவோம்" என்ற முழக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக இம்மாநாடு அமையும் என்றார்.
மாநாட்டின் பணிகளை தொடங்குவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவரும் முன்னால் தமிழக தலைவருமான முஹம்மது அலி ஜின்னா அவர்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளார். முஹம்மது ஷாஃபி மற்றும் முஹம்மது ரோஷன் ஆகியோரும் மாநாட்டின் நடத்தாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கே.எம். ஷரீஃப் அவர்கள் தெரிவித்தார்.

 தேசிய தலைவர் ஈ.எம். அப்துர் ரஹ்மான், முஹம்மது ஷஹாபுதீன், முஹம்மது காலித், மெளலானா உஸ்மான் பேக், மெளலானா கலீமுல்லாஹ் ரஷாதி, வழக்கறிஞர் கே.பி. முஹம்மது ஷரீஃப்  மற்றும் சிலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tuesday, 13 September 2011

விடியல் வெள்ளீ

இந்த மாத‌ விடியல்........
                   
                                          

Monday, 12 September 2011

தமுமுகவின் சமய நல்லிணக்க பெருவிழா மற்றும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதிரை கிளை சார்பில் மாபெரும் சமய நல்லிணக்க பெருவிழா மற்றும் அவசர கால ஊர்தி(ஆம்புலன்ஸ்) அர்பணிப்பு விழா என இருபெரும் விழா மிக சிறப்பாக நடந்தேறியது.(நேற்று 11 - 09 - 11)அல்ஹம்துலில்லாஹ்.
சரியாக மாலை 07:22 மணிக்கு மவ்லவி A.H அப்துர் ரசீது ரஹ்மானி அவர்கள் கிராத் ஓத, அதிரை நகர த.மு.மு.க தலைவர் ஜனாப் B. உமர் தம்பி மரைக்காயர் அவர்களின் தலைமையில் விழா துவங்கியது.
முன்னதாக கிழக்கு கடற்கரைச்சாலை (அண்ணா சிலை அருகே) யில் த.மு.மு.க வின் கொடியை மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். வரவேற்புரை M.O. செய்யது முகம்மது புஹாரி (நகர பொருளாளர் த.மு.மு.க) நிகழ்த்தினார்கள்.
இவ்விழாவில் த.மு.மு.க வின் தலைமை கழக நிர்வாகிகள்சகோதரர் S.ஹைதர் அலி(மாநில பொதுச்செயலாளர் த.மு.மு.க), சகோதரர் M.தமிமுன் அன்சாரி(மாநில துணை பொதுச்செயலாளர் ம.ம.க), சகோதரர் J.ஹாஜா கனி(மாநில செயலாளர் த.மு.மு.க) ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அவசரகால ஊர்தியை(ஆம்புலன்ஸ்) அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அர்பணிப்பு செய்தார்கள். இவ்விழாவினை சகோதரர் J.கலந்தர்(முன்னால் மாவட்ட செயலாளர் ம.ம.க)அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இறுதியாக நன்றியுரை M.H. தையூப்(நகர செயலாளர் த.மு.மு.க) அவர்கள் நவிழ விழா இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்

சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு.











இவர்கள் போலீஸா! பயங்கரவாதிகளா!

SEP 11, பரமக்குடியில் இமானுவேல்‌ சேகரன் நிகழ்ச்சியில் தமிழகமக்கள் முன்னேறக்கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கலந்து கொள்வதற்காக செல்லமுயன்றார். அவர் நெல்லை மாவட்டம் வல்லநாடு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். .

ஜான்பாண்டியனை கைது செய்ததாக செய்தி பரவியதையடுத்து பரமக்குடியில் மறியல், கலவரம் ஆகியவை ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கலவரத்தை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து வன்முறை நீடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் முதலில் 3 பேர் உயிரிழந்தனர்.. பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பரமக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி, சுற்று வட்டார கிராமங்களில் பாதுகாப்புக்காக 3ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  போலீஸ் வாகனம் எரிப்பு, துப்பாக்கிச் சூடு, 144 தடை உத்தரவையடுத்து பரமக்குடியில் பதற்றம் நிலவுகிறது.

1, பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு வைகோ கண்டனம்!  அமைதி காக்க வேண்டுகோள்!

2, இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று துப்பாக்கி சூடு: காவல்துறை அணுகுமுறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!

அதிரை மூன்: இப்படியாக குடிமக்களை கொன்று பயங்கரவாத போலீஸ் துறை சாதனை படைத்துள்ளது! மக்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதை சமாளிக்க கண்ணீர்புகை, தடியடி, ரப்பர் குண்டு பிரயோகம், தண்ணீரை பீச்சி அடிப்பது இப்படி நடத்துவது தவறல்ல அதை மீறி துப்பாக்கி சூடு நடத்துவது வடிகட்டிய அயோக்கியத்தனம் பயங்கரவாதம்.

வெறும் கையேடு கலவரம் செய்யும் மக்களை துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கு அல்ல உங்கள் கைகளில் துப்பாக்கிகள்  கொடுக்கப்பட்டிருப்பது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு அவர்களை பாதுகாப்பதை விட்டவிட்டு கலவரத்தை சமாளிக்க முடியாமல் துப்பாக்கி மூலம் உயிர்களை பறித்தது கடைந்தெடுத்த பயங்கரவாதம்.

கலவரம் செய்யும் மக்களை கலைக்க  தண்ணீரை பீச்சி அடிக்கும் வாகனம், ரப்பர் தோட்டாக்கள், கற்களை கொண்டு அடித்தால் அடி மேலே விழாமல் தடுக்க பைபர் தடுப்புகள் என்று இவர்களுக்கு மக்கள் வரிபணத்தில் வாங்கி கொடுக்கப்பட்டிருக்கும் கவசங்களோ ஏராளம். இப்படி இவர்கள் நோகாமல் நொங்கு திங்க!  கல்லடி படாமல், சுலபமாக கொஞ்சபேரை சுட்டு கொன்று கலவரத்தை அடக்கி விட நினைகிறார்கள். மொத்தத்தில் இவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்ச்சிகளும், சம்பளமும் வீண்தான்.  வீணாக மக்கள் பணத்தில் மக்களை கொல்ல ஒரு பயங்கரவாத படை உருவாக்கப்பட்டிருகிறது என்பதே  உண்மை.
நட்புடன்: புதியதென்றல்.

Sunday, 11 September 2011

அப்பாவியின் குரல் . டெல்லி குண்டுவெடிப்பு மிருகத்தனமானது – அப்சல் குரு

imagesCAO38ICF
டெல்லி:கடந்த புதனன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு கோழைத்தனமானது மட்டும்மல்லாமல் மிருகத்தனமானது என்பதாக பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது டெல்லி சிறையில் வாடிவரும் அப்சல் குரு கூறியுள்ளார்.
எந்த ஒரு மதமும் அப்பாவிகளை கொலைச் செய்ய கூறுவதில்லை என்று கூறியுள்ள அப்சல், இதில் என் பெயரை சமந்தப்படுத்துவது என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது என் பெயரை கலங்கப்படுத்தவும், அரசியல் லாபதிற்கும் செய்யப்படுவதாக தன் வக்கீல் என்.டி.பஞ்சொளி மூலம் விடுத்துள்ள அறிக்கையில் அப்சல் கூறியுள்ளார்.
முன்னதாக, ஹுஜி அமைப்பின் பெயரில் வந்த இமெயிலில் அப்சலை விடுவிக்கும் முகமாக டெல்லி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிரை மூன்

தூக்கு தண்டனை கைதியாக இருந்தால்லும், அவர்கள்ளுடைய கருத்தையும், கேல்கவேண்டும் என்பதுதான் உலக நியதி.அது எல்லாம் அப்சல் குரு என்ற மனிதனிடம் மட்டும் மீற படுவதின் மர்மம்தான் என்ன?குற்றம் செய்த நபர் சொல்வதை நான் கேற்க முடியாது என்று சொன்னால் எதற்கு கோர்ட், எதற்கு நீதிபதி, நாட்டை உளவு துறை என்னும் பொய்யனிடம் ஒப்படைத்து விட்டு போங்கள்! மக்களின் வரி பணமாவது மிச்ச படட்டும்.

இது தான் ................................................இந்திய ஜன ...................................நாஆஆஆ ..........................யகமா?

அதிரையில் பாதாள சாக்கடை அமைக்க அளவை துவங்கியது!

தமிழகத்தில் 559 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த வாரம் உத்தரவிட்டார்.
அதன்படி அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடை அமைக்க நில அளவை துரிதமாக நடந்து வருகிறது.

நில அளவையை அதிமுக அதிரை நகர துணை செயலாளர் எம்.ஏ.முகமது தமீம் பார்வையிட்டு ஆலோசனை சொன்னபோது எடுத்த படம்.

அதிரையில் நேற்று (08/09/2011) முற்பகல் வரை எடுத்த அளவையின் படி 47 கி.மீ.ஆகும். மொத்தம் 70 கி.மீ வரை இருக்கலாம் என மதிப்பீடுவதாக’’ நில அளவையர் அதிரை போஸ்ட்டிடம் சொன்னார்.

இந்த அளவை அதிரையின் வழிப்பாதைகள் அனைத்தும் ஒன்றும் விடாமல் எடுக்கப்படும்.

பாதாள சாக்கடை திட்டத்தால் ஏற்படும் நன்மைகள்:


பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமைத்து பராமரிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் ஆரோக்கத்துக்கு நிரந்தர பயனளிக்கும். கழிவு நீர், சாக்கடை நீர் திறந்த வெளியில் தேக்கம் தவிர்க்கப்படும். துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும். வீட்டிற்குள் அமைக்கும் செப்டிக் டேங்க் அவசியமில்லை. கொசுவினால் பரவும் யானைக்கால் நோய் முற்றிலும் தடுக்கப்படும். நோய் பரப்பும் சில பூச்சுகள், கிருமிகள் உற்பத்தியை தடுத்து நோய் பரவுதை தடுக்கலாம். கழிவு நீர் தேக்கத்தால் கிணற்று நீர், ஆழ்த்துளை கிணற்று நீர் மாசுப்படுவது தவிர்க்கப்படுகிறது. பன்றி போன்ற விலங்கினங்களின் தொல்லை குறையும்.


மழைக்காலத்தில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் வழிந்து ஓடாது. பாதாள சாக்கடையில் வெளியேற்றப்படும் கழிவுநீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தர நிர்ணயப்படி சுத்தம் செய்வதால், அந்நீரை விவசாயத்திற்கு மீண்டும் பயன்படுத்தலாம். விவசாயத்திற்கு சுத்திரிக்கப்பட்ட சாக்கடை நீர் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அதனால், சுற்றுப்புழ சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயன் அளிக்கும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நரேந்திர மோடியின் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் – டீஸ்டா

imagesCAE6H9HS
புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை ஊழல் புரிந்துள்ளதாக சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் புகார் அளித்துள்ளார்.

குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அளித்துள்ள மனுவில் டீஸ்டா குறிப்பிட்டுள்ளதாவது: அரசு பொது கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி அரசு நிலங்களை பெரும் தொழில் அதிபர்களுக்கு பங்கீடு செய்து சொந்த லாபத்தை முதல்வர் மோடி உள்ளிட்டவர்கள் சம்பாதித்துள்ளனர்.

குஜராத்தில் நடைபெற்றுவரும் இந்த பெரும் ஊழலை சி.பி.ஐயோ அல்லது தேசிய புலனாய்வு ஏஜன்சியோ(என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டும்.

டீஸ்டா இந்த புகார் மனுவுடன் மோடி மற்றும் அவரது சகாக்களின் பல்வேறு ஊழல்கள் குறித்த ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். பெரும் தொழில் அதிபர்களுக்கு அரசு நிலத்தை பங்கீடு செய்து அளித்தது பொதுநலனை கருதி அல்ல. மாறாக முதல்வரும், அமைச்சர்களும் தங்களது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

முதல்வரே நேரடியாக இந்த ஊழல்களில் ஈடுபட்டுள்ளதால் மாநில ஏஜன்சிகளின் விசாரணை சரியாக அமையாது. மாநிலத்தின் உயர் அதிகாரிகளும், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அமைச்சர்களின் தனிப்பட்ட பணியாளர்களைப் போல பணியாற்றுகின்றனர்.

குஜராத்தில் சட்டம் முழுமையாக தோல்வியை தழுவிவிட்டது. ஊழலுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை

பதிவுச்செய்யக் கூட போலீசாரால் இயலவில்லை என டீஸ்டா மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி

ஜகாத் வசூலிப்பை உளவுப் பார்க்க வேண்டும் என்னும் சுற்றறிக்கையை திரும்பப் பெறவேண்டும் – பாப்புலர் ஃபிரண்ட்

ஹைதராபாத்:இந்தியாவில் முஸ்லிம்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் மற்றும் முஸ்லிம் மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் இயக்கங்களை கண்காணிப்பதையும் அவற்றின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாய் இருப்பதையும் தொழிலாக கொண்டுள்ள சில பாசிச சிந்தனை கொண்ட அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் இந்நாட்டின் சாபக்கேடு என்று சொன்னால் அது மிகையாகது. அவ்வாறு பாசிச சிந்தனை கொண்ட ஒரு சுற்றறிக்கைதான் ஆந்திர காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரால் தற்போது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர பிரிவுக்கு எதிராக ஆந்திராவில் அமலில் உள்ளது.


பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ரமலான் மாதத்தில் எவ்வளவு ஜகாத் வசூலித்தார்கள் என்பதை உளவு பார்க்குமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணைதான் அது. இவ்வாணையை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய ஆணையை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர பிரிவு மாநிலத் தலைவர் முஹம்மது ஆரிப் ஆந்திராவின் முதலமைச்சரையும் உள்துறை அமைச்சரையும் வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர பிரிவு மாநிலத் தலைவர் முஹம்மது ஆரிப் கூறியதாவது; பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் முஸ்லிம்களால் நிறுவப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பு. இவ்வமைப்பு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. ஆந்திர மாநிலத்தின் குர்நூல் மாவட்டத்தில் இதற்கு மாநில தலைமையிடம் உள்ளது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஆந்திராவையும் சேர்த்து நாடு முழுவதும் கல்வி, பொருளாதாரம், சமூக சேவை மற்றும் அவசரகால உதவி போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளை செய்துவருகிறது. மேலும் இவ்வமைப்பு கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் பாசிச தீவிரவாதிகளால் இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் ஏற்படும் பாதிப்புக்கு எதிராக வெளிப்படையாக போராடி வருகிறது.

எனவே பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் ரமலான் மாத வசூலிப்பை உளவு பார்க்க மாநில காவல்துறை ஆணை பிறப்பித்திருப்பது நீதிக்கு எதிரானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். மேலும் ஜகாத் கொடுத்தவர்கள் மற்றும் வாங்கியவர்களின் பெயர் விவரங்களை கேட்பது சிறுபான்மையினரின் உரிமைகளை மீறுவது ஆகும் என தெரிவித்தார்.

மேலும் முஹம்மது ஆரிப் கூறியதாவது; பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்ட இயக்கமோ அல்லது மறைவாக செயல்களை செய்யக்கூடிய இயக்கமோ அல்ல. இதுவரை இவ்வமைப்பின் உறுப்பினர்கள் யாரும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர் என்று கைது செய்யப்படவும் இல்லை. மேலும் இவ்வமைப்புக்கு இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு இருப்பதாக எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் சில பத்திரிக்கைகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தீவிரவாத செய்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அவற்றிற்கு போலீசிடம் ஆதாரம் இருப்பதாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. இது போன்ற அடிப்படை ஆதாரம் இல்லாமல் வரும் செய்திகள் எல்லாம் மாநில காவல்துறை உயர் பதவிகளில் இருக்கும் சில பாசிச தரகுகளின் ஜோடிப்பாகதான் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார்.

மதசார்பற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் ஆந்திராவில் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவது முதல் முறை அல்ல என்றும் ஏற்கனவே மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் பல அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சிறையில் வைத்து சித்ரவதை செய்ததும் இறுதியில் மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தது ஹிந்துத்வா தீவிரவாதிகள் என்று கண்டறியப்பட்டதும் நாடறிந்த உண்மை என்று கூறினார்.

முஸ்லிம்களின் மத உரிமையான ஜகாத்தை பற்றி கவலைப்படும் மாநில காவல்துறை ஹிந்துத்வா பாசிசவாதிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பது பற்றி ஏன் கவலை கொள்வது இல்லை என வினவியுள்ளார்.

இதுபோன்ற பாசிச சிந்தனை கொண்ட ஹிந்துத்வாவாதிகள் காவல்துறையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு பாசிச சிந்தனை கொண்ட ஹிந்துத்வா போலிஸ் அதிகாரிகளை நீக்கவில்லை என்றால் சிறுபான்மை அமைப்புகளும் மனித உரிமைக் கழகமும் இணைந்து மாநிலம் முழுவதும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source:
Thoothuonline.com

Saturday, 10 September 2011

ஹஜ் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!

                                                                                                                                                                                                                                               நன்றி :மணிச்சுடர்

Thursday, 8 September 2011

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு : பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம் !




untitledடெல்லி அப்பாவிகள் பலரின் உயிரைக் குடித்த, பலருக்குப் படுகாயத்தை ஏற்படுத்திய டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
“இந்தக் கொடூரச் செயலைச் செய்த உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்”  என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
அவர் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தச் சம்பவம் மீண்டும் பயங்கரவாதத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் அமைதியைக் குலைக்கும் இந்தச் சம்பவம், தேசத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்தச் சம்பவம் நாட்டின் தலைநகரிலேயே நடந்துள்ளது. காவல்துறையும், நுண்ணறிவுத் துறையினரும் இதற்கு மூளையாகச் செயல்பட்டவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பாவிகள் குறி வைக்கப்படாமலிருக்க உறுதிசெய்ய வேண்டும்.
மீடியா இந்தச் சம்பவத்தைத் திசை திருப்பாமல், தேவையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்காமல் இருக்கவேண்டும். அப்படிச் செய்தால் அது விசாரணையைத் தவறான கோணத்தில் கொண்டு செல்ல உதவும். இதனால் அப்பாவிகள் குறி வைக்கப்படுவர். இந்த மாதிரி நெருக்கடியான நிலையில் நாட்டின் நலனுக்காக அனைத்து குடிமக்களும் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.
வகுப்புவாத சக்திகள் தங்கள் அசிங்கமான விளையாட்டுகளை விளையாட யாரும் அனுமதிக்கக் கூடாது. இந்தக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் இ.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Wednesday, 7 September 2011

கிழக்கு கடற்கரை சாலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு: ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை: கிழக்கு கடற்கரை சாலை கன்னியாகுமரி வரை நீடிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார்.

சட்டசபையில் 110 விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார் ஜெயலலிதா. அதில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்படும் பல்வேறு உள் கட்டமைப்புகளில் சாலை உள்கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில், சாலைப் போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளின் வேகமான வளர்ச்சிக்கு சாலைக் கட்டமைப்பின் வளர்ச்சி அடிப்படையாக உள்ளது.

இதன் அடிப்படையில், சென்னை முதல் தூத்துக்குடி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை, பல்வேறு கட்டங்களில், ஆசிய வங்கி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் அகலப்படுத்தப்பட்டு மேம்பாடு செய்யப்பட்டது. தென் மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரியில் வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக இந்தச் சாலையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

இந்தச் சாலையினால் ஏற்படும் பயன்களைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் வரையில் உள்ள 113 கிலோமீட்டர் சாலைப் பகுதி 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழித் தடமாக அகலப்படுத்தப்பட்டு மேம்பாடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சாலைப் பணியின் கீழ், 9 புறவழிச் சாலைகள், 3 பெரிய பாலங்கள் மற்றும் 1 ரயில்வே மேம்பாலம் ஆகியவை அமைக்கப்படும்.

இதே போன்று, சிவகங்கை மற்றும் எடப்பாடி நகரங்களில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படக் கூடிய பாதிப்பை பெருமளவில் குறைக்கும் வகையில், 10.60 கிலோ மீட்டர் நீளத்தில் சிவகங்கை புறவழிச் சாலையும்; 8.60 கிலோ மீட்டர் நீளத்தில் எடப்பாடி புறவழிச் சாலையும் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்காக, நடப்பாண்டில், சிவகங்கை நகரத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; எடப்பாடி நகரத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

740 கோடி ரூபாய் மதிப்பில், 23 புதிய ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் கட்டும் பணிகள் 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் 4 பணிகளும்; திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பணிகளும்; வேலூர் மாவட்டத்தில் 4 பணிகளும்; விழுப்புரம் மாவட்டத்தில் 3 பணிகளும்; கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 பணிகளும்; சேலம் மாவட்டத்தில் 3 பணிகளும்; ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் தலா 1 பணியும் மேற்கொள்ளப்படும்.

பயண நேரத்தையும், தூரத்தையும் வெகுவாகக் குறைக்கும் நோக்குடன், இணைக்கப்படாத ஊர்களை இணைக்கும் வகையில், நபார்டு வங்கி நிதியுதவியுடன், 18 மாவட்டங்களில், 151 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 65 பாலங்கள், நடப்பாண்டில் கட்டப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 8 புதிய பாலங்களும், 57 குறுகிய, பழுதடைந்த பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்களும் கட்டப்படும்.

நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படும் சாலைகள், பல்வேறு வகையான போக்குவரத்திற்கு உட்படுவதால், விபத்துகள் அதிகரிப்பதுடன், நெரிசலும் கூடுகிறது. ஆகவே, இந்தச் சாலைகளின் பராமரிப்பிற்கு தனி கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

இதன் முதற்கட்டமாக, சோதனை முறையில், சென்னையில் உள்ள அண்ணா சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை மற்றும் உள்வட்டச் சாலைகளை முழுமையாக, ஒருங்கிணைந்த முறையில் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த திட்டமிடும் பணி மேற்கொள்ளப்படும். பாதசாரிகள், இரு சக்கர வாகனங்கள், சிறு வாகனங்கள், பெரு வாகனங்கள் போன்ற அனைத்து விதமான போக்குவரத்து, பல்வேறு போக்குவரத்துகளுக்கு இடையிலான மாறுதல்கள், வாகன நிறுத்த வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், சாலைக் குறியீடு மற்றும் சமிக்ஞைகள்; பிற துறை சார்ந்த சேவைக் குழாய் வசதிகள்; மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்; சுற்றுப்புறத்தை பசுமையாக்குதலுக்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இது திட்டமிடப்படும். இந்தத் திட்டம் விரைவில் தயாரிக்கப்பட்டு, இச்சாலைகள் மேம்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

சிறப்பாக நடந்து முடிந்த -எலும்பு கனிம சத்து கண்டறியும் இலவச முகாம்.

பட்டுக்கோட்டை பெஸ்ட் ஆர்த்தோ சென்டர் மற்றும் அதிராம்பட்டினம் ஃபேமிலி மார்ட் சூப்பர மார்க்கெட், காசிம் ரியல் எஸ்டேட், சம்சுல் இஸ்லாம் சங்கம் சேர்ந்து நடத்திய எலும்பு கனிம சத்து கண்டறியும் இலவச முகாம் நேற்று 04 - 09 - 2011 ஞாயிற்றுக் கிழமை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் மதியம் 2:00 மணியிலிருந்து மாலை 7.30 மணிவரை நடைபெற்றது.சுமார் 160பேர்கலந்துகொன்டனர் .