Tuesday, 20 March 2012

சிங்கள பயங்கரவாததிற்கு ஆதரவு அளித்த RSS இயக்கம்



 ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது.

இந்த விஷயத்தில் இந்தியா ஒரு முழுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று  ""RSS இயக்கத்தின்அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைசரில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்தியாவின் பூகோள ரீதியான நன்மையை  கணக்கில் கொண்டு, உறுதியான நிலைப்பாட்டை  எடுக்க வேண்டும்.மேற்கத்திய நாடுகள் முழுமையான ஒரு கவலையுடன்இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசின் விஷயத்தில், அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ தலையிட வேண்டிய அவசியம் இல்லை. 

இலங்கை அரசுக்கு எதிராக, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை கூறும் போது, அவர்களுக்கு எதிராக சண்டையிட்ட விடுதலைப் புலிகளை அமைதியானவர்கள் என்றோ, ஆயுதமற்றவர்கள்என்றோ கூற முடியாது. நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், டாங்குகள் என, முழுமையான படைக்கலம் அவர்களிடம் இருந்தது.

சிந்திக்கவும்:  காந்தி படுகொலை, தொடர் குண்டு வெடிப்பு, மதக்கலவரங்கள்  என்று இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வந்த ஒரு இயக்கம்தான் RSS இயக்கம். ஒரு பயங்கரவாததிற்கு இன்னொரு பயங்கரவாதத்தால் தான் துணை போக முடியும் என்பதை இதன் மூலம் RSS நிரூபித்துள்ளது.

RSS இயக்கத்தின் அடிவருடிகளான  சுப்பிரமணிய சுவாமி, மற்றும் பார்பன கூட்டங்கள் ஈழத்து இன அழிவுக்கு எதிராக ராஜீவ் காந்தி கொலையை காரணமாக சொல்லி அதை திசை திருப்ப முயன்றனர். வசதியாக ராஜீவ் அமைதிப்படை என்கிற கொலைகார படை மூலம் நடத்திய அக்கிரமங்களை மறைத்தனர். 

ஈழத்திலே அமைதி ஏற்படுத்துகிறோம்  என்று சொல்லி அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை  கொன்று குவித்து, பெண்களை கற்பழித்து மானபங்கப்படுத்தி கொடூரங்களைநிகழ்த்திய ஒரு கேவலமான படையை அனுப்பி பிரதமர் என்கிற ஒரு உயர்பதவியை பயன்படுத்தி பயங்கரவாத செயல்புரிந்தார் ராஜிவ்காந்தி. 

மேற்கத்திய நாடுகள் முழுமையான ஒரு கவலையுடன் இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை என்று  கூறுவது  குஜராத் இனப்படுகொலை, காஷ்மீரில் ராணுவ பயங்கரவாதம், சத்திஸ்கரில் பழங்குடி மக்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை போன்றவற்றை நடத்திய ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்தியா நிகழ்த்திய பயங்கரவாதங்கள் வெளிஉலகிற்கு வந்துவிடுமோ என்கிற அச்சம். 

இலங்கையில் நடந்த போர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதை தொடர்ந்து இந்தியாவில் நடந்தமதக்கலவரங்களும், ராணுவ, மனித உரிமை மீறல்களும் உலக அரங்கில் கொண்டு செல்லப்படும். ஏற்கனவே மோடிக்கு அமெரிக்காவுக்கு போவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு பெயர்களில் இயக்கங்கள் நடத்தி நிதிவசூல் செய்து வருகிறது RSS இயக்கம்.  உலக அரங்கில் RSS ஒரு  பயங்கரவாத இயக்கம் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டால் அதன் நிதிவருவாய் நின்றுபோகும் என்கிற பயம்.

ஹிந்துக்களை, ஹிந்து கோவில்களை பாதுகாக்கிறோம், ராமருக்கு கோவில் கட்ட போகிறோம்என்று சொல்லி மசூதியை இடித்த சூரப்புலிகள் இப்போது யாழ்பாணத்தில் இருக்கும்கோவில்களை இடித்து அதில் புத்த விகார் காட்டுகிறான் சிங்கள வெறியன். அதை குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் அவர்களின் பரிவாரங்களான இந்து முன்னணி, பஜ்ரங்தள், சிவசேனை, இந்து மக்கள் கட்சி என்று ஒருத்தனும் வாய்திறக்க வில்லை.

ஈழத்திலே கொல்லப்பட்டது ஹிந்துக்கள் இல்லையா?  ஈழத்து ஹிந்துக்களால் தங்களுக்கு ஒரு  லாபமும் இல்லை அதுதான் இந்த மவுனத்திற்கு காரணம். இது இந்தியாவை ஆட்சி செய்ய பிராமணர்கள் போட்ட ஹிந்து முகமூடி. ஆனால் கஷ்மீர் இந்துக்களை பற்றி மட்டும் ரொம்ப கவலைப்படுவார்கள் ஏன் என்றால் அது  உயர் ஜாதி பண்டிட்டுகள் ஆட்சே. ஜாதிகொடுமையால் கொல்லப்படும் தலித் மக்கள் குறித்து பேசமாட்டார்கள். அதுகுறித்து கேட்டால்? ஜாதி ஏற்றத்தாழ்வு வேண்டும்! ஆனால் ஜாதி கொடுமை கூடாது என்று விநோதமாக பதிலளிப்பர்.


இலங்கையில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதுகுறித்து நீதி விசாரணை தேவை என்பதை மனித நேயம் கொண்ட யாராலும் மறுக்க முடியாது.  போரில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் அங்கே மீறப்பட்டுள்ளது. இதை சானல் 4  வீடியோ ஆவணம் தெளிவாக விளக்குகிறது. தீர்மானத்தை யார் கொண்டுவருகிறார்கள் என்பது இங்கே முக்கியம் அல்ல அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையே மனித நேயம் கொண்ட ஒவ்வொருவரின் கருத்தாகும்.

    *மலர்விழி*        
thanks to sinthikkavum blogger

Saturday, 3 March 2012

IAS,IPS, IFS போன்ற 25 சிவில் சர்விஸ் பணிகளில் சேர ஒரு அரிய வாய்ப்பு .


சீனாவில் கலவரம் : முஸ்லிம்களை வெட்டி படுகொலை செய்த கொடூர கும்பல் !



'Violent mobs': Rioting in China's Xingjiang province has left 12 dead,
சீனாவின் வடமேற்கே உள்ள சின்ஜியாங் உய்குர் பகுதியில் துர்க் மொழி பேசும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஹன் பிரிவு சீன மக்களும் அதிகம் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாகவே இப்பகுதியில் இன மோதல் அடிக்கடி நடந்து வருகிறது. 2009ல் ஏற்பட்ட மோதலில் 200க்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஜூலையிலும் கலவரம் வெடித்தது. 32 முஸ்லிம்கள்   பலியாயினர். இந்நிலையில், சின்ஜியாங் பகுதியில் உள்ள யெச்செங் கவுன்டியில் நேற்று முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் தொடங்கியது 
இதில் 12 முஸ்லிம்கள் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர். அரசு வாகனங்கள், அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கல்வீச்சு, துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடந்தன. கலவரத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.

Thursday, 23 February 2012

“ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!!




கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சி தென்னூர் எவர்கிரீன் துவக்கப்பள்ளியில் மாநிலத்தலைவர் முஹம்மது ஷாஃபி தலைமையில் நடைபெற்றது.“ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!! ” என்ற முழக்கத்துடன் சரியாக பகல் 02:30 மணியளவில் மாநில பிரதிநிதிகள் மாநாடு இனிதே துவங்கியது. மாநில செயலாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா முஹம்மது அவர்கள் வரவேற்புரையாற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார்.பின்னர் மாநில பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2012-2013 ஆண்டிற்கான புதிய மாநில நிர்வாகிகளை தேசிய செயலாளர் மெஹஃபூஸ் அறிவித்தார்.





 
மாநில தலைவர்:

முகம்மது தம்பி (அதிராம்பட்டினம்)

மாநில துணைத் தலைவர்: சாகுல் சஹீத் (ராம்னாடு)

மாநில பொதுச் செயலாளர்: சத்தார் (திருச்சி)

மாநில செயலாளர்: அராபாத் (திருநெல்வேலி)
                       

மாநில பொருளாளர்:முஹைதீன் (தஞ்சை)

மாநில செயற்குழு உறுப்பினர்கள்:


1. ராஜா முஹம்மது (மதுரை)

2. ஜமிஷா (மேட்டுப்பாளையம்)

3. அப்துல்லாஹ் (சென்னை)

4. பக்ருதீன் (மதுரை)

5. ஹனீப் (கோவை)

6. அப்துர் ரஹ்மான் (காயல்பட்டினம்)



புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் முகம்மது தம்பி அவர்கள் மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தினார். சிறப்பு விருந்தினராக திருச்சிM.I.E.T. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், முனைவர் P.M.மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு வலிமையான எதிர்கால இந்தியாவை உருவாக்கும் கடமையும், பொறுப்பும் மாணவ சமூகத்தையே சாரும் என உரையற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI - ன் தமிழக மாநில பொது செயலாளர் ரஃபீக் அஹமத், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில செயலாளர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் கர்நாடகா மாநில செயலாளர் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக, கீழ்கண்ட மாநாட்டுத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்ட தலைவர் ஃபக்ருதீன் அவர்களின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் காலாண்டு இதழான 'கேம்பஸ் டுடே' யை கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தேசிய செயலாளர் மெஹஃபுஸ் வெளியிட்டார்.
தீர்மானம்

1.    இன்றைய கல்வி நிறுவனங்கள் சேவை மனப்பான்மையிலிருந்து விலகி, கொள்ளை லாபம் ஈட்டும் வியாபார நிறுவனங்களக  மாறி இருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு, உயர்கல்வி வரை இலவசமாக வழங்க கோரியும், கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் அடுத்த கல்வியாண்டிற்கான சேர்க்கை முன்பதிவு மற்றும் கல்விக் கொள்ளையினை தடுத்து நிறுத்தும்படியான சட்டம் இயற்றுவதோடு, அனைத்து அரசு கல்வி நிறுவனங்களின் தரத்தினை உயர்த்த வேண்டும் எனவும் இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
 2.    நம் சமூகத்தின் நாளைய தலைவர்களான மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதை கருத்தில் கொண்டு அரசு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு, கல்வி வளாகங்களில் 100 மீட்டருக்கு உட்பட்டு இருக்கும் மது மற்றும் புகையிலை விற்பதற்கான தடையை 500 மீட்டராக உயர்த்த சட்டம் இயற்ற வேண்டும் என இம்மாநாடு அரசை வலியுறுத்துகிறது.
 3.   கல்வி வளாகங்களில் கட்டுப்பாடு எனும் பெயரில் மாணவர்களுக்கு மத்தியில் அவர்களது மத சுதந்திரத்தை பறிப்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற நடவடிக்கைளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவன்மையாக கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இம்மாநாட்டின் மூலம் அரசை வலியுறுத்துகிறது.
 4.    பள்ளி, கல்லுரிகளில் மாணவியர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளும், மன உளைச்சலால் பெருகிவரும் மரணங்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
 5. சமூகங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை களையும்விதமாக அனைத்து சமூக மக்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் தகுந்த இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கையின் பரிந்துறைப் படி சிறுபான்மையினருக்கான 15% இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
 6.    பள்ளி, கல்லூரிகளின் துவக்க மற்றும் நிறைவு நேரங்களில் பேருந்தின் கூட்ட நெரிசலால் படிகளில் செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாவதை அரசு கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கென இலவச மற்றும் மாணவ தனி பேருந்தினை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறது.
 7.    மாணவர்களுக்கு இடையே ஒற்றுமை, சமூக மற்றும் தெளிந்த அரசியல் சிந்தனையை உருவாக்கிட கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடத்துவதன் மூலம், கல்லூரி வளாங்களில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய அரசினை வலியுறுத்துகிறது.
 8.    பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இறுதித் தேர்வுகள் நெருங்கும் வேளையில், அறிவிக்கப்பட்ட 8 மணி நேர மின்வெட்டும், திடீர் மின்வெட்டுக்களும் மிகுந்த சிரமத்தை ஏற்ப்டுத்துகிறது. இந்நிலையை களைய விரைவு நடவடிக்கைகள் வேண்டுமெனவும், குறந்தபட்சமாக, இறுதித் தேர்வுகள் முடியும் வரை முற்றிலும் மின்வெட்டுக்கள் நீக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதோடு, அமல்படுத்த இருக்கும் மின் கட்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
 9.    உயிருக்கு உலைவைக்கும் அணுஉலைகளை உலகின் பல்வேறு நாடுகள் மூடிவரும் நிலையில், மின் உற்பத்திக்கு நம் தேசத்தில் பல்வேறு வழிமுறைகள் இருந்தும் அதனை விரிவுபடுத்தாமல், திறக்க இருக்கும் கூடங்குளம் அணுஉலையை மக்கள் நலன் கருதி நிரந்தரமாக மூடவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
 10.                        அத்துமீறும் அதிகாரமளிக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம், மனித உரிமைகளுக்கு சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற மனித உரிமைகளை மாய்க்கும், ஜனநாயகத்திற்கெதிரான கறுப்புச் சட்டங்கள் திரும்பப்பெற வேண்டுமெனவும், தீவிரவாத முத்திரை குத்துப்பட்டு போலி எண்கவுண்டருக்கு உள்ளாக்கப்படும் அவலங்களும் மாய்க்கப்பட்டு, குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் இம்மாநாடு வலியிறுத்துகிறது.
 11.                        உலகின் கள்ள நாடும், எல்லை ஆக்கிரமிப்பு  நாடுமான இஸ்ரேல், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தினையும், குண்டு வெடிப்பு கலாச்சாரத்தினையும், விதைத்துவரும்  நிலையில் இஸ்ரேலுடனான இந்திய இராஜ்ஜிய உறவுகள் முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என இம்மாநாடு மத்திய அரசினை வலியுறுத்துகிறது.
 12.   அரசு  மற்றும்  அரசு  உதவி பெறும் கல்வி  நிறுவனங்களில் போதிய உள்கட்டமைப்புவசதியின்மையால் அதில் பயிலும் மாணவர்களின் கல்வி நிலையும் பாதுகாப்பு நிலையும்அபாயகர நிலையில் உள்ளது. மாநாடு நடைபெற்று கொண்டிருக்கும் திருச்சி தென்னூர் குத்பிஷாநகரில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்ற அளவிற்கு பள்ளியின் கூரை மிகவும்மோசமாக பழுதடைந்துள்ளது. பள்ளியின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு சமூக விரோதிகள் இரவுநேரங்களில் பயன்படுத்தும் சட்ட விரோத கூடாரமாக மாறிவருகிறது. எனவே மேற்கண்ட பள்ளிக்கூடம் உட்பட அனைத்து பள்ளிக்கூடம் மீதும் தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தக்கநடவடிக்கை எடுத்து உள்கட்டமைப்புகளை குறுகிய காலத்தில் சீரமைக்க வேண்டுமெனகேட்டுகொள்கிறது.
 13.  கேம்பஸ் ஃப்ரண்டின் நடப்பாண்டிற்கான வளர்ச்சி நிதியை அளித்து, பணிகள் மேம்பட உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இம்மாநாட்டின் மூலம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

Sunday, 22 January 2012

தானே’ புயல் நிவாரண நிதி: ரூ.19.81 கோடி திரண்டது

சென்னை: தானே புயல் நிவாரண நிதியாக 19 கோடியே 81 லட்ச ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 30 ம்தேதி வங்கக் கடலில் உருவான தானே புயல் கடலூருக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவ பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பல தரப்பில் இருந்தும் நிவாரணம் குவியத்தொடங்கியுள்ளது. 

19 கோடி திரண்டது

புயல் நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரணத் தொகையில் ஜன.20ம் தேதி வரை ரூ.19,81,22,769 சேர்ந்துள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 5 January 2012

ஆப்கானில் விபச்சாரத்திற்கு ஒத்துழைக்காத புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்


Sahar Gul

காபூல்: விபச்சாரத்திற்கு இணங்க மறுத்த 15 வயது புதுமணப் பெண்ணை கடந்த 5 மாதங்களாக கழிவறைக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படு்ததிய அவரது மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சாஹர் குல்(15). அவருக்கும் பக்லான் மாகாணத்தைச் சேர்ந்த குலாம் சாகி(30) என்னும் ராணுவ வீரருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமணப் பெண்ணை குலாம் வீட்டார் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க நினைத்தனர். இதனால் குல்லை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து அவர்கள் குல்லை சிகரட்டால் சுட்டும், உருட்டுக் கட்டையால் அடித்தும், கை நகங்களைப் பிய்த்தும், முடியைப் பிடித்து இழுத்தும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். குல்லை வீட்டின் கீழ்தளத்தில் உள்ள கழிவறையில் கடந்த 5 மாதங்களாக அடைத்து வைத்து அவருக்கு போதிய உணவு கூட கொடுக்காமல் பாடாய் படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த பக்லான் மாகாண போலீசார் வீட்டின் கதவை உடைத்து குல்லை காப்பாற்றினர். உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த குல்லை காபூலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மீட்கப்பட்டு 6 நாட்களாகியும் குல்லின் ஒரு கண் வீங்கி மூடிக் கொண்டுள்ளது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவரது கணவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி்த் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பலஸ்தீன், இஸ்ரேல் பேச்சு - இணக்கமின்றி முடிந்தது.


இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்கும் இடையில் ஜோர்தானில் நடைபெற்ற சந்திப்பு எந்தவித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தின் பின்னர் பலஸ்தீன் இஸ்ரேல் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பாக இது கருதப்படுகின்றது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வெளிநாடு ஒன்றின் மத்தியஸ்தத்துடன் நடத்துவது குறித்து நேற்றைய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. ஜோர்தானில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் ஓரளவு திருப்தி அளித்துள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிராந்தியத்தில் இடம்பெறும் இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றங்களை அடுத்து பலஸ்தீனுடனான பேச்சுவார்த்தைகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.