Saturday, 3 March 2012
சீனாவில் கலவரம் : முஸ்லிம்களை வெட்டி படுகொலை செய்த கொடூர கும்பல் !
சீனாவின் வடமேற்கே உள்ள சின்ஜியாங் உய்குர் பகுதியில் துர்க் மொழி பேசும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஹன் பிரிவு சீன மக்களும் அதிகம் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாகவே இப்பகுதியில் இன மோதல் அடிக்கடி நடந்து வருகிறது. 2009ல் ஏற்பட்ட மோதலில் 200க்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஜூலையிலும் கலவரம் வெடித்தது. 32 முஸ்லிம்கள் பலியாயினர். இந்நிலையில், சின்ஜியாங் பகுதியில் உள்ள யெச்செங் கவுன்டியில் நேற்று முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் தொடங்கியது இதில் 12 முஸ்லிம்கள் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர். அரசு வாகனங்கள், அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கல்வீச்சு, துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடந்தன. கலவரத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.
Thursday, 23 February 2012
“ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!!
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சி தென்னூர் எவர்கிரீன் துவக்கப்பள்ளியில் மாநிலத்தலைவர் முஹம்மது ஷாஃபி தலைமையில் நடைபெற்றது.“ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!! ” என்ற முழக்கத்துடன் சரியாக பகல் 02:30 மணியளவில் மாநில பிரதிநிதிகள் மாநாடு இனிதே துவங்கியது. மாநில செயலாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா முஹம்மது அவர்கள் வரவேற்புரையாற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார்.பின்னர் மாநில பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2012-2013 ஆண்டிற்கான புதிய மாநில நிர்வாகிகளை தேசிய செயலாளர் மெஹஃபூஸ் அறிவித்தார்.
மாநில தலைவர்:
முகம்மது தம்பி (அதிராம்பட்டினம்)
மாநில துணைத் தலைவர்: சாகுல் சஹீத் (ராம்னாடு)
மாநில பொதுச் செயலாளர்: சத்தார் (திருச்சி)
மாநில செயலாளர்: அராபாத் (திருநெல்வேலி)
மாநில பொருளாளர்:முஹைதீன் (தஞ்சை)
மாநில செயற்குழு உறுப்பினர்கள்:
1. ராஜா முஹம்மது (மதுரை)
2. ஜமிஷா (மேட்டுப்பாளையம்)
3. அப்துல்லாஹ் (சென்னை)
4. பக்ருதீன் (மதுரை)
5. ஹனீப் (கோவை)
6. அப்துர் ரஹ்மான் (காயல்பட்டினம்)
புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் முகம்மது தம்பி அவர்கள் மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தினார். சிறப்பு விருந்தினராக திருச்சிM.I.E.T. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், முனைவர் P.M.மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு வலிமையான எதிர்கால இந்தியாவை உருவாக்கும் கடமையும், பொறுப்பும் மாணவ சமூகத்தையே சாரும் என உரையற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI - ன் தமிழக மாநில பொது செயலாளர் ரஃபீக் அஹமத், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில செயலாளர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் கர்நாடகா மாநில செயலாளர் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக, கீழ்கண்ட மாநாட்டுத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்ட தலைவர் ஃபக்ருதீன் அவர்களின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் காலாண்டு இதழான 'கேம்பஸ் டுடே' யை கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தேசிய செயலாளர் மெஹஃபுஸ் வெளியிட்டார்.
தீர்மானம்
1. இன்றைய கல்வி நிறுவனங்கள் சேவை மனப்பான்மையிலிருந்து விலகி, கொள்ளை லாபம் ஈட்டும் வியாபார நிறுவனங்களக மாறி இருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு, உயர்கல்வி வரை இலவசமாக வழங்க கோரியும், கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் அடுத்த கல்வியாண்டிற்கான சேர்க்கை முன்பதிவு மற்றும் கல்விக் கொள்ளையினை தடுத்து நிறுத்தும்படியான சட்டம் இயற்றுவதோடு, அனைத்து அரசு கல்வி நிறுவனங்களின் தரத்தினை உயர்த்த வேண்டும் எனவும் இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
2. நம் சமூகத்தின் நாளைய தலைவர்களான மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதை கருத்தில் கொண்டு அரசு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு, கல்வி வளாகங்களில் 100 மீட்டருக்கு உட்பட்டு இருக்கும் மது மற்றும் புகையிலை விற்பதற்கான தடையை 500 மீட்டராக உயர்த்த சட்டம் இயற்ற வேண்டும் என இம்மாநாடு அரசை வலியுறுத்துகிறது.
3. கல்வி வளாகங்களில் கட்டுப்பாடு எனும் பெயரில் மாணவர்களுக்கு மத்தியில் அவர்களது மத சுதந்திரத்தை பறிப்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற நடவடிக்கைளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவன்மையாக கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இம்மாநாட்டின் மூலம் அரசை வலியுறுத்துகிறது.
4. பள்ளி, கல்லுரிகளில் மாணவியர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளும், மன உளைச்சலால் பெருகிவரும் மரணங்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
5. சமூகங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை களையும்விதமாக அனைத்து சமூக மக்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் தகுந்த இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கையின் பரிந்துறைப் படி சிறுபான்மையினருக்கான 15% இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
6. பள்ளி, கல்லூரிகளின் துவக்க மற்றும் நிறைவு நேரங்களில் பேருந்தின் கூட்ட நெரிசலால் படிகளில் செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாவதை அரசு கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கென இலவச மற்றும் மாணவ தனி பேருந்தினை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறது.
7. மாணவர்களுக்கு இடையே ஒற்றுமை, சமூக மற்றும் தெளிந்த அரசியல் சிந்தனையை உருவாக்கிட கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடத்துவதன் மூலம், கல்லூரி வளாங்களில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய அரசினை வலியுறுத்துகிறது.
8. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இறுதித் தேர்வுகள் நெருங்கும் வேளையில், அறிவிக்கப்பட்ட 8 மணி நேர மின்வெட்டும், திடீர் மின்வெட்டுக்களும் மிகுந்த சிரமத்தை ஏற்ப்டுத்துகிறது. இந்நிலையை களைய விரைவு நடவடிக்கைகள் வேண்டுமெனவும், குறந்தபட்சமாக, இறுதித் தேர்வுகள் முடியும் வரை முற்றிலும் மின்வெட்டுக்கள் நீக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதோடு, அமல்படுத்த இருக்கும் மின் கட்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.
9. உயிருக்கு உலைவைக்கும் அணுஉலைகளை உலகின் பல்வேறு நாடுகள் மூடிவரும் நிலையில், மின் உற்பத்திக்கு நம் தேசத்தில் பல்வேறு வழிமுறைகள் இருந்தும் அதனை விரிவுபடுத்தாமல், திறக்க இருக்கும் கூடங்குளம் அணுஉலையை மக்கள் நலன் கருதி நிரந்தரமாக மூடவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
10. அத்துமீறும் அதிகாரமளிக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம், மனித உரிமைகளுக்கு சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற மனித உரிமைகளை மாய்க்கும், ஜனநாயகத்திற்கெதிரான கறுப்புச் சட்டங்கள் திரும்பப்பெற வேண்டுமெனவும், தீவிரவாத முத்திரை குத்துப்பட்டு போலி எண்கவுண்டருக்கு உள்ளாக்கப்படும் அவலங்களும் மாய்க்கப்பட்டு, குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் இம்மாநாடு வலியிறுத்துகிறது.
11. உலகின் கள்ள நாடும், எல்லை ஆக்கிரமிப்பு நாடுமான இஸ்ரேல், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தினையும், குண்டு வெடிப்பு கலாச்சாரத்தினையும், விதைத்துவரும் நிலையில் இஸ்ரேலுடனான இந்திய இராஜ்ஜிய உறவுகள் முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என இம்மாநாடு மத்திய அரசினை வலியுறுத்துகிறது.
12. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் போதிய உள்கட்டமைப்புவசதியின்மையால் அதில் பயிலும் மாணவர்களின் கல்வி நிலையும் பாதுகாப்பு நிலையும்அபாயகர நிலையில் உள்ளது. மாநாடு நடைபெற்று கொண்டிருக்கும் திருச்சி தென்னூர் குத்பிஷாநகரில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்ற அளவிற்கு பள்ளியின் கூரை மிகவும்மோசமாக பழுதடைந்துள்ளது. பள்ளியின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு சமூக விரோதிகள் இரவுநேரங்களில் பயன்படுத்தும் சட்ட விரோத கூடாரமாக மாறிவருகிறது. எ னவே மேற்கண்ட பள்ளிக்கூடம் உட்பட அனைத்து பள்ளிக்கூடம் மீதும் தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தக்கநடவடிக்கை எடுத்து உள்கட்டமைப்புகளை குறுகிய காலத்தில் சீரமைக்க வேண்டுமெனகேட்டுகொள்கிறது.
13. கேம்பஸ் ஃப்ரண்டின் நடப்பாண்டிற்கான வளர்ச்சி நிதியை அளித்து, பணிகள் மேம்பட உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இம்மாநாட்டின் மூலம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
Sunday, 22 January 2012
தானே’ புயல் நிவாரண நிதி: ரூ.19.81 கோடி திரண்டது
சென்னை: தானே புயல் நிவாரண நிதியாக 19 கோடியே 81 லட்ச ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 30 ம்தேதி வங்கக் கடலில் உருவான தானே புயல் கடலூருக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவ பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பல தரப்பில் இருந்தும் நிவாரணம் குவியத்தொடங்கியுள்ளது.
19 கோடி திரண்டது
புயல் நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரணத் தொகையில் ஜன.20ம் தேதி வரை ரூ.19,81,22,769 சேர்ந்துள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 30 ம்தேதி வங்கக் கடலில் உருவான தானே புயல் கடலூருக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவ பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பல தரப்பில் இருந்தும் நிவாரணம் குவியத்தொடங்கியுள்ளது.
19 கோடி திரண்டது
புயல் நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரணத் தொகையில் ஜன.20ம் தேதி வரை ரூ.19,81,22,769 சேர்ந்துள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, 5 January 2012
ஆப்கானில் விபச்சாரத்திற்கு ஒத்துழைக்காத புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சாஹர் குல்(15). அவருக்கும் பக்லான் மாகாணத்தைச் சேர்ந்த குலாம் சாகி(30) என்னும் ராணுவ வீரருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமணப் பெண்ணை குலாம் வீட்டார் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க நினைத்தனர். இதனால் குல்லை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து அவர்கள் குல்லை சிகரட்டால் சுட்டும், உருட்டுக் கட்டையால் அடித்தும், கை நகங்களைப் பிய்த்தும், முடியைப் பிடித்து இழுத்தும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். குல்லை வீட்டின் கீழ்தளத்தில் உள்ள கழிவறையில் கடந்த 5 மாதங்களாக அடைத்து வைத்து அவருக்கு போதிய உணவு கூட கொடுக்காமல் பாடாய் படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த பக்லான் மாகாண போலீசார் வீட்டின் கதவை உடைத்து குல்லை காப்பாற்றினர். உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த குல்லை காபூலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மீட்கப்பட்டு 6 நாட்களாகியும் குல்லின் ஒரு கண் வீங்கி மூடிக் கொண்டுள்ளது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவரது கணவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி்த் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பலஸ்தீன், இஸ்ரேல் பேச்சு - இணக்கமின்றி முடிந்தது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்கும் இடையில் ஜோர்தானில் நடைபெற்ற சந்திப்பு எந்தவித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தின் பின்னர் பலஸ்தீன் இஸ்ரேல் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பாக இது கருதப்படுகின்றது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வெளிநாடு ஒன்றின் மத்தியஸ்தத்துடன் நடத்துவது குறித்து நேற்றைய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. ஜோர்தானில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் ஓரளவு திருப்தி அளித்துள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பிராந்தியத்தில் இடம்பெறும் இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றங்களை அடுத்து பலஸ்தீனுடனான பேச்சுவார்த்தைகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வெளிநாடு ஒன்றின் மத்தியஸ்தத்துடன் நடத்துவது குறித்து நேற்றைய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. ஜோர்தானில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் ஓரளவு திருப்தி அளித்துள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பிராந்தியத்தில் இடம்பெறும் இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றங்களை அடுத்து பலஸ்தீனுடனான பேச்சுவார்த்தைகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.
Saturday, 31 December 2011
பல்கலையில் ஜோதிட பாடம் இணைக்கத் திட்டம்: ஆசிரியர் கடும் எதிர்ப்பு!
இந்தியாவில் மதவாத பா.ஜ.கட்சி மத்தியில் ஆட்சி செய்த போது, வரலாற்று பாடத்திட்டங்களை திரிப்பது, மூட பழக்கவழக்கங்கள் மற்றும் பார்ப்பன சடங்கு, சம்பிரதாயங்களை பாடப்புத்தகங்களில் திணிப்பது, சரஸ்வதி வந்தனம் பள்ளிகளில் கட்டாயம் பாடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது.
இது கல்வித்துறை இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரியர்கள் இந்தியாவின் பூர்விக குடிகள் என்று பரப்ப வேண்டும் என்பதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய வரலாறு பாடப்புத்தகத்தை திரும்பி பெற்றது. இந்தப் புத்தகத்தில் ஆரியர்கள் இந்தியாவில் வந்தேறியவர்கள் என்பதை ஆதாரத்துடன் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்ப்த புத்தகத்தின் ஆசிரியர்கள் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையே பா.ஜ.கட்சி மாற்றியது. அந்த இடங்களில் நடுநிலை வரலாற்று ஆசிரியர்களை நீக்கி விட்டு, பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என பொய்யான வரலாறு எழுதிய பி.எல்.குரோவர் என்ற பேராசிரியரையும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான வரலாற்று பேராசிரியர்களையும் நியமித்தது. இது தவிர தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக (என்.சி.ஈ.ஆர்.டி) உறுப்பினர்களையும் ஒட்டு மொத்தமாக மாற்றியது.
பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்க வேண்டும் என்பதற்காக கல்வித்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர பா.ஜ.கட்சி முயற்சி செய்தது. ஏற்கனவே ஆங்கில கிறிஸ்தவர்களின் முஸ்லிம் விரோத ஒரு பக்க சார்பு வரலாற்றைப் போல, ஹிந்துத்துவா சக்திகளும் தங்கள் பங்குக்கு முஸ்லிம்களை இந்த நாட்டில் இருந்தே விரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்கொள்கையில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்தன. இதற்காக மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியரும், இயற்பியல் துறை பேராசிரியருமான முரளி மனோகர் ஜோஷியை நியமனம் செய்தது.
இந்த நிலையில், பா.ஜ.கட்சியின் மதவாத சிந்தனைக்கு அனைத்து மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே இன்று வரை திருத்தப்பட்ட உண்மைக்கு புறம்பான பாசிச ஹிந்துத்துவா தயாரித்த வரலாறு, பாடத்திட்டங்களில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ. ஆட்சியின் போது மதுரை காமாராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக்குழு அதிக பணம் தருகிறது என்ற காரணத்துக்காக ஜோதிடவியல் படிப்பை அறிமுகப்படுத்தியது. ஆனால் அப்போதைய தி.மு.க அரசு மற்றும் கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பால் அந்தப் பாடம் வாபஸ் பெறப்பட்டது.
அதேபோல, கல்விஅமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக கல்வி அமைச்சர் க.அன்பழகன் சரஸ்வதி வந்தனம் பாடுவது உள்ளிட்ட வரலாற்று திரிபுகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கிடையே, தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு ஜோதிடத்தில் சான்றிதழ் மற்றும் பட்டய சான்றிதழ் படிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அழகப்பா, அன்னை தெரசா ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு சமூக அறிவியில் பாடத்திற்கான எந்தத் தகுதியும் இல்லாத ஜோதிடத்தில் சான்றிதழ் மற்றும் பட்டய சான்றிதழ் படிப்பை (சர்டிபிகேட் மற்றும் டிப்ளமோ) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனை வன்னமயாக கண்டிக்கிறோம். ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜோதிட பாடப்பிரிவுகளை மீண்டும் கொண்டுவருவதென்பது போலி சமூக அறிவியலான ஜோதிடத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பதும், மவுட்டீகத்தை வளர்ப்பதுமாகும்.
பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில், பல்கலைக்கழக கல்விப்பேரவை மற்றும் ஆட்சிப்பேரவையில் விவாதிக்காமல் ஜோதிட பாடங்களை மீண்டும் கொண்டுவருவது ஆற்றல்சால் பல்கலைக்கழகமான மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல. எனவே ஜோதிடபாடப்பிரிவுகளை கொண்டுவரும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவியல் உணர்வினை உயர்த்தி பிடிப்பது அரசியல் சாசன கடமை என்பதையும் உணர வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Subscribe to:
Posts (Atom)

