Wednesday, 28 March 2012

தமிழகத்தில் 87 சதவீத வீடுகளில் டி.வி! ஆனால் 52 சதவீத வீடுகளில் டாய்லெட் இல்லை!


தமிழகத்தில் 87 சதவீத வீடுகளில் டி.வி
சென்னை:இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிவடைந்ததையொட்டி நேற்று அதுதொடர்பான அறிக்கையை மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையின் தமிழ்நாடு மாநில இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் பெற்றுக் கொண்டார்.
மக்கள்தொகை அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் இப்போது 1 கோடியே 85 லட்சம் குடும்பங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் 1.42 கோடி குடும்பங்கள் இருந்தன.
தற்போது, கூட்டுக் குடும்ப எண்ணிக்கை குறைந்து தனிக் குடித்தனம் அதிகரித்துள்ளது. 75 சதவீதம் பேர் தனிக் குடித்தனம் நடத்தி வருகின்றனர்.
மாநிலத்தில் மொத்தமுள்ள வீடுகளில் 44 சதவீதம் கான்கிரீட் வீடுகளாக உள்ளன. மண் சுவர் வீடுகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2001ம் ஆண்டில் 26 சதவீதம் பேர் கூரை வீடுகளில் இருந்தனர். தற்போது அது 15 சதவீதமாக குறைந்துள்ளது. சிமென்ட் தரையுடன் கூடிய வீடுகளின் எண்ணிக்கை, 55 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளன.
நீராதாரத்தைப் பொறுத்தவரை 79.8 சதவீத குடும்பங்கள் ஆழ்துழை கிணறுகள், குழாய் இணைப்புகள் ஆகியவற்றின் மூலம் குடிநீரை பெறுகிறார்கள். இதில் 35 சதவீதம் பேருக்கு வீட்டுக்குள்ளேயே குடிநீர் கிடைக்கிறது. 7 சதவீதம் பேர் குடிநீருக்காக அரை கி.மீ. தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன் 12 சதவீதமாக இருந்தது.
64 சதவீதம் பேர், வீட்டு வளாகத்துக்குள் குளிக்கும் வசதியை கொண்டுள்ளனர். 50 சதவீத குடும்பத்தினர் கழிவு நீர் கால்வாய் இணைப்பு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 52 சதவீத குடும்பங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே பயன்படுத்துகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன் இது 64 சதவீதமாக இருந்து, இப்போது 52 சதவீதமாகக் குறைந்துள்ளது. இப்போதும் 48.3 சதவீத குடும்பத்தினருக்கே வீட்டுக்குள் கழிப்பிட வசதி உள்ளது (தேசிய அளவில் இது 46.9 சதவீதமாகவே உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு பெட்டர்).
சென்னை 95 சதவீத வீடுகளிலும், கன்னியாகுமரியில் 87 சதவீத வீடுகளிலும் கழிப்பிடம் உள்ளது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் வெறும் 19 சதவீத வீடுகளிலும், அரியலூர் மாவட்டத்தில் வெறும் 18.1 சதவீத வீடுகளிலும் மட்டுமே கழிப்பிட வசதி உள்ளது. மற்றவர்கள் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
93.4 சதவீத குடும்பங்களுக்கு மின்சார வசதி உள்ளது. 7 சதவீத வீடுகளில் மின் இணைப்பே இல்லை. 2001ம் ஆண்டு 78.2 சதவீத குடும்பங்களுக்கு மின் இணைப்பு இருந்தது. இப்போது அது 93 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 44 சதவீத வீடுகளில் டி.வி. இருந்தது. தற்போது அது கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி, 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் டெல்லியில் தான் 92 சதவீத குடும்பங்களில் டிவி உள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
11 சதவீத வீடுகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. 48 சதவீத வீடுகளில் சமையல் கியாஸ் பயன்படுத்துகிறார்கள். 32 சதவீதம் பேர் இரண்டு சக்கர வாகனங்களையும், 4 சதவீதம் பேர் 4 சக்கர வாகனங்களையும் பயன்படுத்துகிறார்கள்.
அதே நேரத்தில் தமிழகத்தில் 45 சதவீதம் பேர் சைக்கிள்களை பயன்படுத்துகிறார்கள்.
75 சதவீத வீடுகளில் தொலைபேசி இணைப்பு உள்ளது. இதில் 69 சதவீத இணைப்புகள் செல்போன்கள் ஆகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூடங்குளம்:காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!


பேராயர் பீட்டர் பெர்னாண்டோ பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்
வள்ளியூர்:மாநில அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம் அளித்த உறுதிகளை ஏற்று, இடிந்தகரையில் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த உதயகுமார் தலைமையிலான அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். எனினும், அணு உலைக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் கூறுகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை தமிழக அமைச்சரவை திறக்க முடிவுச்செய்தது. இதனைத் தொடர்ந்து அணு உலை எதிர்ப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மற்றும் அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது ஆகியவற்றைக் கண்டித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் குழு தலைவர் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்ட 15 பேர் இடிந்த கரையில் கடந்த 19-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 நாள்களாக உண்ணாவிரதம் இருந்த உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரின் உடல்நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்துக்கும், கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக் கூட்டம் ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் இரா. செல்வராஜ், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. வரதராஜு, எஸ்.பி. விஜயேந்திர பிதரி உள்ளிட்டோரும், போராட்டக் குழு சார்பில் தமிழர் களம் மாநிலச் செயலர் அரிமா வளவன் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, போராட்டக்குழு சார்பில் அரசுக்கு 7 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு முன்வைத்த கோரிக்கைகள்:
* போலீஸாரால் கைது செய்யப்பட்ட அணு உலை எதிர்ப்பாளர்களை விடுவிக்க வேண்டும்.
* போராட்டக்குழுவினர் மீதான வழக்குகள் அனைத்தையும் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும்
* நிலவியல், நீரியல், கடலியல் தொடர்பாக தமிழக மற்றும் இந்திய நிபுணர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவல்களின்படி தங்களால் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த உண்மைத் தன்மையை அறிய உண்மையான, நேர்மையான குழுவை நியமிக்க வேண்டும்; சர்வதேச தரத்தில் சுதந்திரமான முறையில் அந்தக் குழு ஆய்வினை மேற்கொள்ள வழிவகுக்க வேண்டும்;
* அணு உலை விபத்து காப்பீடு தொடர்பாக இந்தியா – ரஷியா இடையிலான ரகசிய ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்;
* அணுக்கழிவு மேலாண்மை தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும்.
* கூடங்குளம் அணு மின் நிலையத்தை போராட்டக்காரர் முற்றுகையிடவோ, அதன் பணியாளர்களுக்கு இடையூறு செய்யவோ மாட்டார்கள். அதேவேளையில், ஜனநாயக முறைப்படி கருத்துப் பரப்புரைகளைச் செய்யவும், அறப் போராட்டங்களை நடத்தவும் அனுமதிக்க வேண்டும்.
* தங்களின் இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதோடு, மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு மாநில அரசு தெரியப்படுத்த வேண்டும்.
போராட்டக்குழுவின் இந்தக் கோரிக்கைகள், மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டது.
144 தடை உத்தரவு வாபஸ்:
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ் கூறியதாவது:
பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது. அணுஉலை அமைந்துள்ள பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு உடனடியாக வாபஸ் பெறப்படுகிறது. அணுஉலை பகுதியில் மட்டும் தடை உத்தரவு நீடிக்கும். வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. அரசிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார் ஆட்சியர்.
போராட்டக் குழுவினர் இடிந்தகரைக்குச் சென்று, பேச்சுவார்த்தை விவரங்களை விளக்கினர். அதிகாரிகளின் உறுதிமொழிகளை ஏற்று, காலவரையற்ற உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவது எனவும், சிறையில் உள்ள போராட்டக் குழுவினர் வெளியே வரும் வரை தொடர் உண்ணாவிரதத்தைத் தொடருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
உதயகுமாருக்கு மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோ பழரசம் கொடுத்து இரவு 7 மணியளவில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
காலவரையற்ற உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்ட போதிலும், அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும்; உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் கூறினார்.
திரண்டிருந்த மக்கள் மத்தியில் உதயகுமார் கூறியது:
அணு உலைக்கு எதிரான அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். அணு உலை தொடர்பான நிலவியல், நீரியல், கடலியல் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம். தமிழக அரசு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளது. சற்று பொறுமையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. சிறையில் உள்ள நமது தோழர்கள் வரும்வரை மீனவர்கள் கடலுக்குப் போகமாட்டார்கள். கடைகள் திறக்காது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லமாட்டார்கள். நமது உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்கும் என நம்புகிறேன் என்றார் உதயகுமார்.

Sunday, 25 March 2012

7-வது நாளாக கூடங்குளம் உண்ணாவிரதம்: பல தலைவர்கள் கைது!


7-வது நாளாக கூடங்குளம் உண்ணாவிரதம் பல தலைவர்கள் கைது
திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் மற்றும் அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்தும் உண்ணாவிரதம் 7-வது நாளை எட்டியுள்ளது. இடிந்த கரையில் போராட்ட பந்தலில் நேற்று மருத்துவர்கள் குழு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பரிசோதனை நடத்தியது.
அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் உள்பட 15 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலை சீர்கெட்டால் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா-ரஷ்யா கூட்டு அணுசக்தி திட்டமான கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க அனுமதி வழங்கி கடந்த 19-ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து அணு உலை எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.
அணுமின்நிலையத்தின் பாதுகாப்புக் குறித்து பீதியடைந்த சுற்றுவட்டார மக்கள் போராட்டம் துவக்கியதை தொடர்ந்து கூடங்குளம் அணுமின்நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன. அன்று போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேசிய முதல்வர் ஜெயலலிதா இடைத்தேர்தலுக்கு பிறகு தனது முடிவில் பல்டி அடித்தார்.
அதேவேளையில், கூடுதல் டி.ஜி.பி ஜார்ஜ் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுச் செய்தார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே போலீஸார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டம்-ஒழுங்கு சீரானால் போலீஸார் வாபஸ் பெறப்படுவார்கள் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேசத்துரோகம், தேசத்திற்கு எதிராக போர் செய்தல் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள உதயகுமாரை கைது செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கூடுதல் டி.ஜி.பி ஜார்ஜ், தற்பொழுது அதுப்பற்றி கூறவியலாது என்று தெரிவித்தார்.
தடை உத்தரவை மீறி இடிந்தகரையில் நுழைய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னி அரசுவை விருதுநகரில் வைத்து போலீஸ் கைது செய்தது. திருமண நிகழ்ச்சிக்கு வருகைத் தந்த தமிழக இளைஞர் எழுச்சிப்பேரவை தலைவர் சதீஷையும் போலீஸ் கைது செய்தது. நேற்று முன் தினம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய வைகோ, சீமான், நெல்லை முபாரக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Friday, 23 March 2012

கர்நாடக முதலமைச்சர் பதவியில் தற்போது மாற்றம் இல்லை – சதானந்தா கவுடா


சதானந்தா கவுடா
பெங்களூரு:கர்நாடகாவில் முதலமைச்சரை தற்போதைக்கு மாற்றப் போவதி்ல்லை என கட்சி மேலிடம் தன்னிடம் தெரிவித்திருப்பதாக அந்த மாநில முதலமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவி தொடர்பாக பா.ஜ.க. மேலிடம் அழைப்பின் பேரில் டெல்லி சென்ற சதானந்தா கவுடா, மீ்ண்டும் பெங்களூரு திரும்பிய பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
ஊடகங்களில் எடியூரப்பா முதலமைச்சராக நியமிக்கப்பட உள்ளார் என்று வெளியான செய்தி தவறு என்றும், தானே முதல்வராக தொடர்வதாகவும் சதானந்த கவுடா கூறியுள்ளார். இதேபோல், டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய எடியூரப்பா, செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய கர்நாடக அரசியல் சூழ்நிலைகள் குறித்து மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Tuesday, 20 March 2012

சிங்கள பயங்கரவாததிற்கு ஆதரவு அளித்த RSS இயக்கம்



 ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது.

இந்த விஷயத்தில் இந்தியா ஒரு முழுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று  ""RSS இயக்கத்தின்அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைசரில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்தியாவின் பூகோள ரீதியான நன்மையை  கணக்கில் கொண்டு, உறுதியான நிலைப்பாட்டை  எடுக்க வேண்டும்.மேற்கத்திய நாடுகள் முழுமையான ஒரு கவலையுடன்இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசின் விஷயத்தில், அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ தலையிட வேண்டிய அவசியம் இல்லை. 

இலங்கை அரசுக்கு எதிராக, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை கூறும் போது, அவர்களுக்கு எதிராக சண்டையிட்ட விடுதலைப் புலிகளை அமைதியானவர்கள் என்றோ, ஆயுதமற்றவர்கள்என்றோ கூற முடியாது. நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், டாங்குகள் என, முழுமையான படைக்கலம் அவர்களிடம் இருந்தது.

சிந்திக்கவும்:  காந்தி படுகொலை, தொடர் குண்டு வெடிப்பு, மதக்கலவரங்கள்  என்று இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வந்த ஒரு இயக்கம்தான் RSS இயக்கம். ஒரு பயங்கரவாததிற்கு இன்னொரு பயங்கரவாதத்தால் தான் துணை போக முடியும் என்பதை இதன் மூலம் RSS நிரூபித்துள்ளது.

RSS இயக்கத்தின் அடிவருடிகளான  சுப்பிரமணிய சுவாமி, மற்றும் பார்பன கூட்டங்கள் ஈழத்து இன அழிவுக்கு எதிராக ராஜீவ் காந்தி கொலையை காரணமாக சொல்லி அதை திசை திருப்ப முயன்றனர். வசதியாக ராஜீவ் அமைதிப்படை என்கிற கொலைகார படை மூலம் நடத்திய அக்கிரமங்களை மறைத்தனர். 

ஈழத்திலே அமைதி ஏற்படுத்துகிறோம்  என்று சொல்லி அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை  கொன்று குவித்து, பெண்களை கற்பழித்து மானபங்கப்படுத்தி கொடூரங்களைநிகழ்த்திய ஒரு கேவலமான படையை அனுப்பி பிரதமர் என்கிற ஒரு உயர்பதவியை பயன்படுத்தி பயங்கரவாத செயல்புரிந்தார் ராஜிவ்காந்தி. 

மேற்கத்திய நாடுகள் முழுமையான ஒரு கவலையுடன் இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை என்று  கூறுவது  குஜராத் இனப்படுகொலை, காஷ்மீரில் ராணுவ பயங்கரவாதம், சத்திஸ்கரில் பழங்குடி மக்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை போன்றவற்றை நடத்திய ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்தியா நிகழ்த்திய பயங்கரவாதங்கள் வெளிஉலகிற்கு வந்துவிடுமோ என்கிற அச்சம். 

இலங்கையில் நடந்த போர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தை தொடர்ந்து இந்தியாவில் நடந்தமதக்கலவரங்களும், ராணுவ, மனித உரிமை மீறல்களும் உலக அரங்கில் கொண்டு செல்லப்படும். ஏற்கனவே மோடிக்கு அமெரிக்காவுக்கு போவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு பெயர்களில் இயக்கங்கள் நடத்தி நிதிவசூல் செய்து வருகிறது RSS இயக்கம்.  உலக அரங்கில் RSS ஒரு  பயங்கரவாத இயக்கம் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டால் அதன் நிதிவருவாய் நின்றுபோகும் என்கிற பயம்.

ஹிந்துக்களை, ஹிந்து கோவில்களை பாதுகாக்கிறோம், ராமருக்கு கோவில் கட்ட போகிறோம்என்று சொல்லி மசூதியை இடித்த சூரப்புலிகள் இப்போது யாழ்பாணத்தில் இருக்கும்கோவில்களை இடித்து அதில் புத்த விகார் காட்டுகிறான் சிங்கள வெறியன். அதை குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் அவர்களின் பரிவாரங்களான இந்து முன்னணி, பஜ்ரங்தள், சிவசேனை, இந்து மக்கள் கட்சி என்று ஒருத்தனும் வாய்திறக்க வில்லை.

ஈழத்திலே கொல்லப்பட்டது ஹிந்துக்கள் இல்லையா?  ஈழத்து ஹிந்துக்களால் தங்களுக்கு ஒரு  லாபமும் இல்லை அதுதான் இந்த மவுனத்திற்கு காரணம். இது இந்தியாவை ஆட்சி செய்ய பிராமணர்கள் போட்ட ஹிந்து முகமூடி. ஆனால் கஷ்மீர் இந்துக்களை பற்றி மட்டும் ரொம்ப கவலைப்படுவார்கள் ஏன் என்றால் அது  உயர் ஜாதி பண்டிட்டுகள் ஆட்சேஜாதிகொடுமையால் கொல்லப்படும் தலித் மக்கள் குறித்து பேசமாட்டார்கள். அதுகுறித்து கேட்டால்? ஜாதி ஏற்றத்தாழ்வு வேண்டும்! ஆனால் ஜாதி கொடுமை கூடாது என்று விநோதமாக பதிலளிப்பர்.


இலங்கையில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதுகுறித்து நீதி விசாரணை தேவை என்பதை மனித நேயம் கொண்ட யாராலும் மறுக்க முடியாது.  போரில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் அங்கே மீறப்பட்டுள்ளதுஇதை சானல் 4  வீடியோ ஆவணம் தெளிவாக விளக்குகிறது. தீர்மானத்தை யார் கொண்டுவருகிறார்கள் என்பது இங்கே முக்கியம் அல்ல அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையே மனித நேயம் கொண்ட ஒவ்வொருவரின் கருத்தாகும்.

    *மலர்விழி*        
thanks to sinthikkavum blogger

Saturday, 3 March 2012

IAS,IPS, IFS போன்ற 25 சிவில் சர்விஸ் பணிகளில் சேர ஒரு அரிய வாய்ப்பு .


சீனாவில் கலவரம் : முஸ்லிம்களை வெட்டி படுகொலை செய்த கொடூர கும்பல் !



'Violent mobs': Rioting in China's Xingjiang province has left 12 dead,
சீனாவின் வடமேற்கே உள்ள சின்ஜியாங் உய்குர் பகுதியில் துர்க் மொழி பேசும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஹன் பிரிவு சீன மக்களும் அதிகம் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாகவே இப்பகுதியில் இன மோதல் அடிக்கடி நடந்து வருகிறது. 2009ல் ஏற்பட்ட மோதலில் 200க்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஜூலையிலும் கலவரம் வெடித்தது. 32 முஸ்லிம்கள்   பலியாயினர். இந்நிலையில், சின்ஜியாங் பகுதியில் உள்ள யெச்செங் கவுன்டியில் நேற்று முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் தொடங்கியது 
இதில் 12 முஸ்லிம்கள் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர். அரசு வாகனங்கள், அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கல்வீச்சு, துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடந்தன. கலவரத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.