எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிறது என்று சொல்லும் நபர்கள் கூட ஒரு மாதம் மட்டும் பட்ஜெட் போட்டு செலவழித்து பார்த்தால் அதன் நன்மை புரியும். ஆன்லைன் மூலம் நமக்கு பட்ஜெட் உருவாக்க உதவுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.spendful.comஇத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையலாம்.
அடுத்து வரும் திரையில் உங்கள் பெயரும் ஆரம்ப கையிருப்பு (Starting balance) எவ்வளவு என்று கேட்கிறது.
இதைக்கொடுத்து உள்நுழைந்து அடுத்து வரும் திரையில் Income , Expense கொடுத்து விட்டு Income -ல் Add item என்பதை சொடுக்கு எதற்கெல்லாம் எவ்வளவு பணம் செலவாகிறது என்று கொடுத்து கொண்டே வரவேண்டியது தான்.சராசரியாக இரண்டு மாதம் இப்படி நாம் பட்ஜெட் போட்டு கணக்கு பார்த்தால் மூன்றாவது மாதம் செலவு நம் வரவுக்குள் அடங்கும்.http://www.kalvikalanjiam.com
பணத்தை தண்ணிராய் செலவழிக்கும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்று எந்த விளம்பரமும் இல்லாமல் இவர்கள் கொடுக்கும் இலவச சேவையைப் பயன்படுத்தி பார்க்கலாம்.
பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment