Saturday, 31 December 2011

பல்கலையில் ஜோதிட பாடம் இணைக்கத் திட்டம்: ஆசிரியர் கடும் எதிர்ப்பு!

இந்தியாவில் மதவாத பா.ஜ.கட்சி மத்தியில் ஆட்சி செய்த போது, வரலாற்று பாடத்திட்டங்களை திரிப்பது, மூட பழக்கவழக்கங்கள் மற்றும் பார்ப்பன சடங்கு, சம்பிரதாயங்களை பாடப்புத்தகங்களில் திணிப்பது, சரஸ்வதி வந்தனம் பள்ளிகளில் கட்டாயம் பாடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது.

இது கல்வித்துறை இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரியர்கள் இந்தியாவின் பூர்விக குடிகள் என்று பரப்ப வேண்டும் என்பதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய வரலாறு பாடப்புத்தகத்தை திரும்பி பெற்றது. இந்தப் புத்தகத்தில் ஆரியர்கள் இந்தியாவில் வந்தேறியவர்கள் என்பதை ஆதாரத்துடன் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்ப்த புத்தகத்தின் ஆசிரியர்கள் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையே பா.ஜ.கட்சி மாற்றியது. அந்த இடங்களில் நடுநிலை வரலாற்று ஆசிரியர்களை நீக்கி விட்டு, பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என பொய்யான வரலாறு எழுதிய பி.எல்.குரோவர் என்ற பேராசிரிய‍ரையும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான வரலாற்று பேராசிரியர்களையும் நியமித்தது. இது தவிர தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக (என்.சி.ஈ.ஆர்.டி) உறுப்பினர்களையும் ஒட்டு மொத்தமாக மாற்றியது.

பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்க வேண்டும் என்பதற்காக கல்வித்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர பா.ஜ.கட்சி முயற்சி செய்தது. ஏற்கனவே ஆங்கில கிறிஸ்தவர்களின் முஸ்லிம் விரோத ஒரு பக்க சார்பு வரலாற்றைப் போல, ஹிந்துத்துவா சக்திகளும் தங்கள் பங்குக்கு முஸ்லிம்களை இந்த நாட்டில் இருந்தே விரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்கொள்‍கையில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்தன. இதற்காக மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியரும், இயற்பியல் துறை பேராசிரியருமான முரளி மனோகர் ஜோஷியை நியமனம் செய்தது.

இந்த நிலையில், பா.ஜ.கட்சியின் மதவாத சிந்தனைக்கு அனைத்து மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே இன்று வரை திருத்தப்பட்ட உண்மைக்கு புறம்பான பாசிச ஹிந்துத்துவா தயாரித்த வரலாறு, பாடத்திட்டங்களில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ. ஆட்சியின் போது மதுரை காமாராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக்குழு அதிக பணம் தருகிறது என்ற காரணத்துக்காக ஜோதிடவியல் படிப்பை அறிமுகப்படுத்தியது. ஆனால் அப்போதைய தி.மு.க அரசு மற்றும் கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பால் அந்தப் பாடம் வாபஸ் பெறப்பட்டது.

அதேபோல, கல்விஅமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக கல்வி அமைச்சர் க.அன்பழகன் சரஸ்வதி வந்தனம் பாடுவது உள்ளிட்ட வரலாற்று திரிபுகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கிடையே, தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு ஜோதிடத்தில் சான்றிதழ் மற்றும் பட்டய சான்றிதழ் படிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அழகப்பா, அன்னை தெரசா ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு சமூக அறிவியில் பாடத்திற்கான எந்தத் தகுதியும் இல்லாத ஜோதிடத்தில் சான்றிதழ் மற்றும் பட்டய சான்றிதழ் படிப்பை (சர்டிபிகேட் மற்றும் டிப்ளமோ) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனை வன்னமயாக கண்டிக்கிறோம். ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜோதிட பாடப்பிரிவுகளை மீண்டும் கொண்டுவருவதென்பது போலி சமூக அறிவியலான ஜோதிடத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பதும், மவுட்டீகத்தை வளர்ப்பதுமாகும்.

பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில், பல்கலைக்கழக கல்விப்பேரவை மற்றும் ஆட்சிப்பேரவையில் விவாதிக்காமல் ஜோதிட பாடங்களை மீண்டும் கொண்டுவருவது ஆற்றல்சால் பல்கலைக்கழகமான மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல. எனவே ஜோதிடபாடப்பிரிவுகளை கொண்டுவரும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவியல் உணர்வினை உயர்த்தி பிடிப்பது அரசியல் சாசன கடமை என்பதையும் உணர வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Friday, 30 December 2011

கடலில் 25 அதிராம்பட்டினம் மீனவர்கள் மாயம்: புயலில் சிக்கினர்?

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 25 நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் மாயமாகியுள்ளனர். அவர்கள் புயலில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தானே புயல் காரணமாக தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டிருந்தனக்.

இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆனால், எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற அதிராம்பட்டினம் மீனவர்கள் 25 பேர் மாயமாகியுள்ளனர்.

அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லியப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திகேயன், ரங்கராஜன், பழனியாண்டி, நாகராஜன், முருகன் ஆகியோர்களுக்கு சொந்தமான நாட்டுப் படகுகளில் 25 மீனவர்கள் கடந்த 27ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் மறுநாள் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை.

இதுபற்றி கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

கடலில் தத்தளித்த 11 ஆந்திர மீனவர்கள்-ஹெலிகாப்டரில் கடற்படை மீட்டது:

இந் நிலையில் ஆந்திர மாநிலம், நர்சப்பூரில் இருந்து மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் புயல் பாதிப்பால் கடலில் ஏற்பட்ட கடுமையான அலைகளில் சிக்கி தத்தளித்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், அவர்களை மீட்குமாறு கடற்படையினருக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து ஹெலிகாப்டர்களில் சென்ற இந்திய கடற்படையினர் 11 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு வந்தனர்.

Friday, 16 December 2011

இராக்கிலிருந்து வெளியேறின அமெரிக்கப் படைகள்- 9 ஆண்டு போர் முடிந்ததாக அறிவிப்பு!

பாக்தாத்: இராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த 9 ஆண்டு காலப் போர் அதிகாரப்பூர்வமாக இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து பாக்தாதில் அமெரிக்கா அமைத்த ராணுவ மையத்தில் இன்று அமெரிக்கக் கொடி இறக்கப்படவுள்ளது.

இராக்கில் அதிபர் சதாம் ஹூசேன் அணு ஆயுதம் தயாரிப்பதாக பொய் கூறிக் கொண்டு 2003ம் ஆண்டு மார்ச் மாதம் போர் தொடுத்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். ஆனால், அங்கு எந்த அணு ஆயுதமும் சிக்கவில்லை.

இந்தப் போரில் சதாமின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு, 2003ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு, பின்னர் தூக்கில் போட்டு கொலையும் செய்யப்பட்டார் சதாம். அவரது மகன்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் கொன்று குவிக்கப்பட்டனர். சதாமின் மனைவி, மகள் உள்ளிட்டோர் மட்டும் தப்பி ஜோர்டானில் தஞ்சம் புகுந்தனர்.

2007ம் ஆண்டு போர் மிக உச்சத்தில் இருந்தபோது மிக அதிகபட்சமாக சுமார் 1.7 லட்சம் அமெரிக்கப் படைகள் இராக்கில் இருந்தன. இந்தப் போரில் சுமார் 1 லட்சம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும்
4,500 அமெரிக்க வீரர்களும் பலியாயினர். 30,000 வீரர்கள் காயமடைந்தனர்.

இந்தப் போருக்காக அமெரிக்கா செலவிட்ட தொகை ரூ. 45 லட்சம் கோடியைத் தாண்டும். மொத்தத்தில் சுமார் 15 லட்சம் அமெரிக்க வீரர்கள் இராக் போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சதாம் கொல்லப்பட்டு அங்கு தேர்தலும் நடத்தப்பட்டு அமெரிக்க ஆதரவுடனான அரசும் அமைக்கப்பட்டது. அல்-மாலிகி இப்போது பிரதமராக உள்ளார்.

இந் நிலையில் இராக் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் அமெரிக்காவில் அதிகரித்தன. இதையடுத்து 2011ம் ஆண்டு இறுதிக்குள் படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அதிபர் ஒபாமாவும் அமெரிக்கப் படைகளின் வாபஸ் வேகப்படுத்தப்படும் என்று அறிவித்து பெரும்பாலான படைகளை திரும்பப் பெற்றுவிட்டார்.

கடைசியாக சுமார் 5,500 வீரர்கள் மட்டும் இராக்கில் இருந்தனர். இவர்களும் நாடு திரும்புவதற்காக குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களுக்கு வர ஆரம்பித்துவிட்டனர். அடுத்த சில வாரங்களில் இவர்களும் அமெரிக்கா திரும்பிவிடுவர்.

அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் முன் சுமார் 8 லட்சம் இராக்கியர்களைக் கொண்ட புதிய ராணுவத்தை அமெரிக்கா உருவாக்கி பயிற்சியும் அளித்தது. இப்போது இவர்கள் கையில் தான் இராக் நாட்டின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இராக் ராணுவத்திடம் இப்போது போதுமான ஆயுதங்களோ அடிப்படைக் கட்டமைப்போ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இராக் விமானப் படையிடம் மொத்தமே 3 சிறிய விமானங்கள் தான் உள்ளன. இதனால் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த இராக் ராணுவத்தையும் விமானப் படையையும் மேம்படுத்தியாக வேண்டும். இதற்கு ஏராளமான செலவு பிடிப்பதோடு நெடுங் காலமும் தேவைப்படும்.

அமெரிக்கப் படைகள் வெளியேறுவதை பெரும்பாலான இராக்கியர்கள் வரவேற்றாலும், நாட்டில் உள்நாட்டுப் போர் வெடிக்கலாம், தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

இராக்கில் 50 சதவீதம் பேர் ஷியா இனத்தினரும், 40 சதவீதம் பேர் சன்னி இனத்தினரும் உள்ளனர். இவர்கள் தவிர குர்த் உள்ளிட்ட பிற இனத்தினரும் வசிக்கின்றனர். சதாம் ஹூசேன் காலத்தில், பெரும்பாலாக உள்ள ஷியா இனத்தினரை சன்னி பிரிவினர் ஒடுக்கி ஆண்டு வந்தனர்.

இப்போது ஷியா பிரிவினரிடம் தான் ஆட்சி உள்ளது. இதனால் அரசுக்கு எதிராக சன்னி பிரிவினர் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சமும், இதை ஒடுக்க அரசுக்கு ஷியா பிரிவினரை அதிகமாகக் கொண்ட ஈரான் உதவலாம், பதிலுக்கு சன்னி பிரிவினருக்கு ஆதரவாக செளதி அரேபியா மறைமுகமாக களமிறங்கலாம் என்ற அச்சமும் உள்ளது.

அமெரிக்கப் படைகள் வாபஸ் ஆவதையொட்டி இராக்கின் பல இடங்களில் அமெரிக்கக் கொடிகளை எறித்து மக்கள் கொண்டாடங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்

Wednesday, 14 December 2011

மோதல்களை தடுத்து நிறுத்துங்கள்! SDPI


                                  புதுடெல்லி DEC14:முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரண்டு மாநிலங்களின் மக்கள் இடையே மோதல் சூழல் உருவாவதை தடுக்க மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய பீதியூட்டும், மோதல் சூழலை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. ஐந்து மாவட்டங்களில் வாழும் மக்களை குறித்து கேரள மாநில கவலை அடையும் வேளையில், நான்கு மாவட்டங்கள் வறட்சியினால் தரிசாக மாறிவிடும் தமிழகத்தின் கவலையை கவனத்தில் கொள்ளவேண்டும்.



இப்பிரச்சனையில் பீதியையும், கலக்கத்தையும் விதைத்து உணர்ச்சிப்பூர்வமாக மாற்றி தங்களது குறுகிய நோக்கங்களுக்கு உபயோகிக்கும் முயற்சியில் இருமாநில அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. கேரள மக்களின் பீதியை அகற்ற வேண்டும். அதேபோல் தமிழக மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு உண்டான தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்க வகை செய்யவேண்டும். அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண்பதுதான் சிறந்தது.



முல்லைப் பெரியாரின் பெயரால் நடக்கும் போராட்ட நிகழ்ச்சிகள் தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் இடையேயான மோதலாக மாறாதிருக்க எஸ்.டி.பி.ஐயின் தமிழக-கேரள தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு தொடர்பான அமளிக்கு இடையே இரண்டு மாநில மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் சோர்வடையாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும் இவ்வாறு இ.அபூபக்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


அதிரை மூன்: ஒற்றுமைக்கு முன்கை எடுத்துள்ள SDPI தலைமைக்கு வாழ்த்துக்கள். அதே நேரம் முல்லை பெரியார் விசயத்தினால் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் சோர்வடைந்து விடாமல் பார்த்து கொள்ளுமாறு தங்களது கட்சியினர்களுக்கு வலியிறுத்தி இருப்பது ஒரு சிறப்பான சிந்தனை. ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்கள் மாதிரிகூடன் குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று மத்திய அரசை வேண்டாமல் அதை திறக்க கூடாது என்று வலிமையாக குரல் கொடுப்பதற்கு நன்றி

Friday, 9 December 2011

கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்!!!

வேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில் சாலை விதிமுறைகளையும், டிரைவிங்கையும் முழுமையாக கற்றுக்கொண்டு புது காரில் ஏறி உட்காருவது நல்லது.

டிரைவிங் ஸ்கூலுக்கு போய் குறைந்தது 10 மணிநேரமாவது பயிற்சி பெற்று பின்னர் காரை வாங்குவது உத்தமம்.

தற்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டுவது பெரிய சவாலான காரியமாகவே உள்ளது. குறிப்பாக, நகர சாலைகளில் நன்றாக கார் ஓட்டத் தெரிந்தவர்களே படாத பாடு படுகின்றனர்.

இந்த நிலையில், புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் விரும்ப தகாத சம்பவங்களை தவிர்த்து ஒரு முழுமையான டிரைவராக மாறிவிடலாம்.

புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்களை காணலாம்.

சீட் பெல்ட்:

கார் இருக்கையில் அமர்ந்தவுடன் முதலில் விரட்ட வேண்டியது தேவையில்லாத பதட்டத்தைத்தான். கார் இருக்கையில் ஏறி அமர்ந்தவுடனேயே ரிலாக்ஸ்டாக முதலில் செய்ய வேண்டியது சீட் பெல்ட்டை கட்டாயம் அணிய வேண்டும்.

கார் ஏபிசி தெரிஞ்சிக்கலாம்...

அதாவது, ஆக்சிலேட்டர், பிரேக், கிளட்ச் என்ற காரின் 3 கன்ட்ரோல் மும்மூர்த்திகளைத்தான் சுருக்கமாக ஏபிசி என்று குறிப்பிடுகின்றனர். கிளட்சில் இடது காலையும், ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக்குகளுக்கு வலது காலையும் பயன்படுத்தவும்.

கியர் மாற்றும் முறை...

எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு முன் கியர்கள் எந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கார்களிலும் கியர் மாற்றும் அமைப்பு மாறுபடலாம். இதை தெரிந்து வைத்துக்கொள்வது மட்டுமின்றி நினைவில் வைத்துக்கொள்வதும் அவசியம்.

எஞ்சினை ஸ்டார்ட் செய்யும்போது...
எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் முன் ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்துவிட்டு நியூட்ரல் கியரில் கார் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

கிளட்ச்சையும் பிரேக்கையும் மிதித்துக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்யவும். முன்பக்கம் வாகனங்கள் எதுவும் இல்லையென்றால் முதல் கியரை மாற்றி கிளட்சை மெது மெதுவாக ரிலீஸ் செய்யவும். ஆக்ஸிலேட்டரை மிதிக்க அவசியமில்லை.
 கிளட்ச் பைட்டிங் பாயிண்ட்:

பைட்டிங் பாயிண்ட் என்று டிரைவிங் ஸ்கூல் டிரைவர்கள் கூறுவார்கள். அதாவது கிளட்சை குறிப்பிட்ட தூரம் வரை விட்டாலும் கார் மூவ் ஆகாது. ஆனால், இந்த பைட்டிங் பாயிண்ட் என்று சொல்லும் இடத்திற்கு கிளட்ச் ரிலீஸ் ஆகும்போதும் கார் மெதுவாக நகரும். இந்த கிளட்ச் கன்ட்ரோலை தெரிந்துகொண்டால் கால் டிரைவர் ஆகிவிடலாம்.

மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இஞ்ச் இஞ்ச்சாக காரை நகர்த்துவதற்கு இந்த பைட்டிங் பாயிண்ட் கிளட்ச் கன்ட்ரோலிலேயே காரை செலுத்துவார்கள் . ஆக்சிலேட்டரை மிதிக்க வேண்டிய அவசியமில்லை. வேகமெடுக்கும்போது மட்டும் ஆக்சிலேட்டர் பக்கம் வலது கால் செல்ல வேண்டும்.

ஸ்டீயரிங் கன்ட்ரோல்:

அடுத்து இப்போது கவனிக்க வேண்டியது ஸ்டீயரிங் கன்ட்ரோல். கிளட்ச் கன்ட்ரோலுடன் ஸ்டீயரிங் கன்ட்ரோலும் மிக அவசியம். மேலும், காரின் ஸ்டீயரிங் வீல் ஒன்றரை ரவுண்டு சுற்றும் அளவுக்கு ப்ளே இருக்கும்.

இப்போது வரும் புதிய கார்கள் அனைத்தும் கிளட்சை சரியாக ரிலீஸ் செய்தாலே 10 கிமீ வேகம் வரை செல்லும். பைட்டிங் பாயிண்ட் கிளட்ச் கன்ட்ரோலை முதலில் தெரிந்துகொண்டு ஒவ்வொரு முறையும் நிதானமாக காரை மூவ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

15 கிமீ வேகத்தை கார் எட்டியவுடன் கிளட்சை மிதித்து இரண்டாவது கியரை மாற்றுங்கள். கிளட்சை முழுவதுமாக ரிலீ்ஸ் செய்துவிட்டு ஆக்சிலேட்டரை கொடுக்க வேண்டும்.

வளைவுகளில் திரும்பும்போது...

பொதுவாக இடதுபுறத்தில் காரை செலுத்த பழகிக்கொள்ளுங்கள். வளைவுகளில் திரும்பும்போது எந்த பக்கம் திரும்ப வேண்டுமோ அதற்கான இன்டிகேட்டரை ஆன் செய்து கொள்வது மிக அவசியம்.

பின்னர் காரின் வேகத்தை முழுவதுமாக குறைத்துக்கொண்டு இருபுறமும் வளைவில் பார்த்துக்கொண்டு உங்கள் கார் செல்வதற்கு போதிய இடம் இருந்தால் ஆக்சிலேட்டரை மிதித்து காரின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

குறுகிய சந்துகளில் திருப்பும்போது காரை உடனடியாக திருப்ப வேண்டாம். பாதியளவுக்கு காரின் முன்பகுதியை தெருவிற்குள் நுழைத்துக்கொண்டு அதன் பின் திருப்பினால் எளிதாக திரும்பும்.
 யு டர்ன் போடும்போது ...

ஸ்டீயரிங் வீலில் ஒன்றரை ரவுண்டு சுற்றும் அளவுக்கு ப்ளே இருக்கும் என்று முன்பு கூறினோம் அல்லவா. அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பெரிய வளைவாக இருந்தால் ஸ்டீயரிங் வீலில் பாதி ரவுண்டு திருப்பினாலே கார் பெரிய வளைவுகளில் அட்டகாசமாக திரும்பும்.

சிறிய வளைவுகளில் திரும்பும்போது ஒரு ரவுண்டு ஸ்டீயரிங்கை திருப்பிக்கொண்டால் கனக்கச்சிதமாக திரும்பும். இதேபோன்று, யு டர்ன் போடும்போது முழு ரவுண்டு அதாவது ஒன்றரை ரவுண்டும் திருப்பினால் அழகாக யு டர்ன் போட்டுவிடலாம்.

வேகத்தடையில் ஏறி இறங்கும்போது...


வழியில் சிறிய வேகத்தடை இருந்தால் வேகத்தை முழுவதுமாக குறைத்துக்கொண்டு முதல் கியரை மாற்றி சிறிது தூரத்துக்கு முன்னரே கிளட்சையும், பிரேக்கையும் ரீலிஸ் செய்துவிடவும்.

கார் தானாகவே அழகாக தவழ்ந்து எந்த வித பாதிப்பு இல்லாமல் வேகத்தடையை கடந்துவிடும். இப்போது ஆக்சிலேட்டரை கொடுத்து வேகத்துக்கு தகுந்தாற்போல் கியரை அடுத்தடுத்து மாற்றுங்கள்.

அகலமான அல்லது பெரிய வேகத்தடை இருந்தால் இரண்டாவது கியரில் வைத்து காரை மேற்சொன்னது போல் மூவ் செய்யவும். தேவையான இடங்களில் கண்டிப்பாக ஹாரன் அடிக்க மறக்காதீர்.

பிரேக் பிடிக்கும்போது...

தற்போது வரும் கார்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டவை. எனவே, பிரேக்கை லேசாக அழுத்தினால் போதுமானது. புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்ளும்போதே பிரேக்கை அழுத்தும் முறையையும், கன்ட்ரோலையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இரவில் ஓட்டும்போது கவனம்...

புதிதாக கார் ஓட்டுபவர்கள் இரவில் கார் ஓட்டும்போது கூடுதல் கவனத்துடன் ஓட்ட வேண்டியது அவசியம். ஸ்டீயரிங் கன்ட்ரோல், கிளட்ச் கன்ட்ரோல் வந்துவிட்டதா சரி காரை வாங்கிவிட வேண்டியதுதான் என்று கிளம்பிவிட்டீர்களா. பொறுங்கள். பார்க்கிங் மற்றும் ரிவர்ஸ் கியரில் காரை மூவ் செய்வது குறித்து விரைவில் மற்றொரு பகுதியில் பார்க்கலாம்.

Tuesday, 6 December 2011

என்றும் நம் நினைவில்…! நீதிக்காக ஏங்கும் பாபரி

let we forgot
பாபரி மஸ்ஜித் என்றதும் நம் நினைவில் நிழலாடுவது சிதிலமடைந்த மூன்று கும்பங்கள் கொண்ட ஒரு கட்டடமும், பின்னர் அது மணல் மேடாகத் தகர்க்கப்பட்டதும், பயங்கரவாத ஃபாசிச ஹிந்துத்துவ கோர முகங்களும், நாடு முழுவதும் அதனையொட்டி நடந்த முஸ்லிம் இனப் படுகொலைகளும், இழந்த முஸ்லிம்களின் ரத்தமும், சதையும், அதனை மீட்டெடுப்பதற்கான முஸ்லிம்களின் நீண்டகாலப் போராட்டமும்தான்!
ஹிந்துத்துவ கயவர்கள் 1992 டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜிதைச் சுற்றி குழுமியிருந்த பொழுது எப்படியும் நம்துனை இராணுவம் மஸ்ஜிதைக் காப்பாற்றிவிடும் என்ற நப்பாசை நம் இதயத்தில் ஓடியது. ஒவ்வொரு கற்களாக பாபரி தகர்க்கப்பட்ட பொழுது நம் நப்பாசையும் தகர்ந்து தரைமட்டமானது.
“மீண்டும்அதே இடத்தில் பாபரி மஸ்ஜித் கட்டித் தரப்படும்” என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் நானிலம் அறிய வாக்களித்த பொழுது மீண்டும் முஸ்லிம்களுக்கு நப்பாசை தொற்றிக்கொண்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அந்த நப்பாசையிலும் மண்ணை அள்ளிப் போட்டன.
இந்த நம்பிக்கைத் துரோகம் 1992ல் தொடங்கியதல்ல. மாறாக, என்று பாபரி மஸ்ஜிதின் மிம்பரில் ராமர் சிலை கள்ளத்தனமாக வைக்கப்பட்டதோ அந்த 1949-ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இரவிலிருந்து இந்த நம்பிக்கைத் துரோகம் தொடங்குகிறது.
மார்க்கத்தின் மார்பிடத்தில் இணைவைப்பின் இழிவுச் சின்னத்தைக் கண்டபொழுது முஸ்லிம்களின் இதயங்களில் இடி விழுந்தது.
முஸ்லிம்கள் அதனைத் தூக்கியெறிந்து விட்டு இறை வணக்கங்களைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் நீதிக்குக் கட்டுப்பட்ட முஸ்லிம்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். அங்கே அநீதி இழைக்கப்பட்டது. சிலையை அகற்றுவதற்குப் பதில் சீல் வைக்கப்பட்டது மஸ்ஜித். கண்ணியத்திற்குரிய இறையில்லத்தை “இது சர்ச்சைக்குரிய இடம்” என்று நீதிமன்றம் சொன்னது.
ராம்சந்தர் தாஸ் பரமஹம்ஸ் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாதி  “நான்தான் மஸ்ஜிதினுள் சிலையை வைத்தேன்” என்று பகிரங்கமாகக் கூறியபொழுது அவன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு அதிகாரிகள், 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த புனிதமான இறை வணக்கங்களை அங்கே நிறுத்தினார்கள்.
1984-ம் ஆண்டு அக்டோபரில் ராமஜென்ம பூமியை விடுவிக்கப் போவதாகக் கூறி ஹிந்துத்துவ வி.ஹெச்.பி.யின் பயங்கரவாதிகள் ஊர்வலம் நடத்தினர். அப்போது “ராமர் கோயிலைக் கட்ட வேண்டும்” என்று அராஜகமாக அறிவிக்கப்பட்டது. எல்.கே. அத்வானியின் தலைமையில் ‘ராமர் கோயில் இயக்கம்’ ஒன்றும் துவங்கப்பட்டது.
1986ம் ஆண்டு பிப்ரவரியில் ஃபைஸாபாத் நீதிமன்றம் பாபரி மஸ்ஜிதை ஹிந்துக்களுக்கு மட்டும் திறந்து விடுமாறு உத்தரவிட்டது. ஆட்சேபணை செய்த முஸ்லிம்கள் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்கள்.
1987-ம் ஆண்டு ஜனவரி முதல் “இராமாயணம்” என்ற தொலைக்காட்சித் தொடர் இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் மூலம் ஒளிபரப்பப்பட்டது. இது மக்களிடையே ராமர் மீது அதிகப்படியான பக்தியை உண்டாக்க உதவியது. இது ராமர் இயக்கத்திற்கு மேலும் வலுவைத் தந்தது.
1989ம் ஆண்டு செப்டம்பரில் ஹிந்துத்துவ பயங்கரவாத வி.ஹெச்.பி.யினர் நாடு முழுவதும் “ராம் சிலா” பூஜையை நடத்தி, ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று மக்கள் ஆதரவை – முக்கியமாக இந்துக்கள் ஆதரவைத் தேடினர்.
1990 நவம்பரில் எல்.கே.அத்வானி தனது ர(த்)த யாத்திரையைத் துவங்கினார். சோம்நாத்திலிருந்து அயோத்தியை நோக்கிச் சென்று வழிநெடுகிலும் இந்துக்களின் ஆதரவைப் பெறத் திட்டமிட்ட அத்வானியின் ரத யாத்திரை சென்ற இடமெல்லாம் முஸ்லிம்களின் ரத்தம் ஓட்டப்பட்டது.
இந்த நம்பிக்கைத் துரோகத்தின் உச்சகட்டம்தான் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் பல வருடங்களுக்குப் பிறகு அளித்த தீர்ப்பு. அந்த நிலத்தை மூன்று கூறுகளாகப் பிரித்து ஒரு பங்கை மட்டும் முஸ்லிம்களுக்குக் கொடுக்கவேண்டும் என்ற அந்தத் தீர்ப்பு நீதி செத்துவிட்டதையே பறைசாற்றியது. முஸ்லிம்கள் அந்தத் தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்கள்.
இப்படி ஹிந்துத்துவ ஃபாசிச பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.ஸும், அதன் துணை அமைப்புகளும் பாபரி மஸ்ஜிதைத் தகர்ப்பதில் கவனமாகத் திட்டமிட்டு, மிகவும் கச்சிதமாக நடந்து கொண்டன.மேலும் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தையும், அதனைச் சுற்றியுள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து அங்கே ஓர் இராமர் கோயிலைக் கட்டவேண்டும் என்ற திட்டத்தினை செயல்படுத்துவதில் அவைகடும் முயற்சியில் இறங்கின. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக “இராமர் கோயிலைக் கட்டுவதற்காக பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுத்துவிடலாம்” என்றொரு மனநிலையை அவை பொதுமக்களிடம் உருவாக்கி, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன.
இந்த மனநிலை மாற்றம் முஸ்லிம்களில் சிலருக்கு வந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை. அவர்கள் பாபரி மஸ்ஜித் பிரச்னையை வெறும் கட்டடத் தகர்ப்புப் பிரச்னையாகப் பார்க்கின்றார்கள். அது முஸ்லிம்களின் வழிபாட்டுச் சின்னம் என்று அவர்கள் பார்க்கவில்லை. அது முஸ்லிம்களின் அடையாளம் என்று அவர்கள் பார்க்கவில்லை. அது முஸ்லிம்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்று அவர்கள் பார்க்கவில்லை. இந்த மஸ்ஜிதோடு இது நிற்கப்போவதில்லை, 3000 மஸ்ஜிதைக் காவு கொண்டாலும் இது நிற்கப் போவதில்லை என்று அவர்கள் பார்க்கவில்லை. இந்தப் பிரச்னைக்குப் பின்னணியிலுள்ள நீண்டகால சதித்திட்டத்தின் ஒரு கருவிதான் பாபரி மஸ்ஜித் என்று அவர்கள் பார்க்கவில்லை.
1949ம் ஆண்டு நடந்த நிகழ்வுகளில் மஸ்ஜித் மட்டும் அல்ல பிரச்னை. அயோத்தியாவில்ஒரு முஸ்லிம்கூட வசிக்கக் கூடாது, முஸ்லிம்களின் உடல்கள் அங்கே அடக்கம் செய்யப்படக் கூடாது, முஸ்லிம்களின் கடைகள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று பல விஷயங்களை ஆர்.எஸ்.எஸ். அங்கே அமுல்படுத்த முயன்றது. இதற்கு ஆளும் வர்க்கத்தில் இருந்த வல்லபாய் படேல், கே.கே.கே. நாயர் போன்றவர்களும் முழு உடந்தையாக இருந்தனர்.
ஹிந்துத்துவ சங்கப் பரிவாரங்களுக்கு பாபரி மஸ்ஜித் மட்டும் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்கள்தான் அவர்களுக்குப் பிரச்னை.அயோத்தியாவை ஒர் இந்து ராஷ்டிரத்தின் சோதனைக் களமாகமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள். முஸ்லிம்களின் மனதிலிருந்து பாபரி மஸ்ஜிதை எடுத்துவிட்டால் ஆர்.எஸ்.எஸ். தனது இந்து ராஷ்டிரத்தின் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டதாக நம்புகின்றது. அதற்கு அரசும், ஊடகங்களும் துணை போகின்றன.
நாம் கேட்பது கோயில் நிலத்தை அல்ல. மாறாக 483 ஆண்டு காலமாக நமது சொத்தாக இருந்து வந்திருக்கும் நம் நிலத்தைத்தான் கேட்கின்றோம். “அதே இடத்தில் மீண்டும் பாபரி மஸ்ஜித் கட்டித் தரப்படும்” என்று முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான் கேட்கின்றோம். அதனைச் சுற்றி வாழ்ந்த முஸ்லிம்கள் மீண்டும் அங்கே நிம்மதியாக வாழத்தான் கேட்கின்றோம். நாம் இல்லையென்றால் நம் சந்ததிகள் அங்கே தொழ வேண்டும்.
இதற்காக மக்களை ஒன்று திரட்டுவோம். நம் தரப்பு நியாயத்தை மக்கள் மன்றம் முன் எடுத்துவைப்போம். நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை, நியாயத்திற்காக போராடுபவர்களை ஓரணியில் ஒருங்கிணைப்போம். இதனைப் பெருந்திரள் மக்கள் போராட்டமாக மாற்றுவோம். இன்ஷா அல்லாஹ் பாபரி மஸ்ஜிதை மீட்டெடுப்போம்.

Sunday, 4 December 2011

பட்ஜெட் போட்டு உங்களை சிக்கனப்படுத்தி கொள்ள உதவும் ஓர் இணையதளம்!

BUDGET
ஒரு நாட்டு வரவு செலவுக்கு பட்ஜெட் எவ்வளவு முக்கியமோ அதே போல் ஒருவர் வீட்டிற்கும் பட்ஜெட் என்பது முக்கியமான ஒன்று, எவ்வளவு பணம் வருகிறது  எவ்வளவு பணம் செலவாகிறது என்ற அனைத்து விபரங்களையும் கொண்ட இந்த பட்ஜெட்-ஐ நம் குடும்பத்துக்கும் போட்டு பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிறது என்று சொல்லும் நபர்கள் கூட  ஒரு மாதம் மட்டும் பட்ஜெட் போட்டு செலவழித்து பார்த்தால் அதன் நன்மை புரியும். ஆன்லைன் மூலம் நமக்கு பட்ஜெட் உருவாக்க உதவுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.spendful.com
இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி  கொண்டு உள்நுழையலாம்.
அடுத்து வரும் திரையில் உங்கள் பெயரும் ஆரம்ப கையிருப்பு (Starting balance) எவ்வளவு என்று கேட்கிறது.
இதைக்கொடுத்து உள்நுழைந்து அடுத்து வரும் திரையில் Income , Expense கொடுத்து விட்டு Income -ல் Add item என்பதை சொடுக்கு எதற்கெல்லாம் எவ்வளவு பணம் செலவாகிறது என்று கொடுத்து கொண்டே வரவேண்டியது தான்.
சராசரியாக இரண்டு மாதம் இப்படி நாம் பட்ஜெட் போட்டு கணக்கு பார்த்தால்  மூன்றாவது மாதம் செலவு நம் வரவுக்குள் அடங்கும்.http://www.kalvikalanjiam.com
பணத்தை தண்ணிராய் செலவழிக்கும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்று எந்த விளம்பரமும் இல்லாமல் இவர்கள் கொடுக்கும் இலவச சேவையைப் பயன்படுத்தி பார்க்கலாம்.
பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.